நோபல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோபல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 அக்டோபர், 2019

மூன்று வேதியியலாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு



ஸ்டாக்ஹோம்,அக்.10, வேதியியலுக்கான நோபல் பரிசு, இந்தாண்டு மூன்று பேருக்கு அறிவிக் கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள் ளது. உலகின் மிக உயரிய விருதுகளில் நோபல் பரிசுக்கான, இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நாட்களில் மருத்துவம், இயற்பியலுக்கான விரு துகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் விருதை தேர்வுக்குழு சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவித்தது.

இவ்விருது, வேதியியல் பேராசிரி யர்களான அமெரிக்காவின் டெக் சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் குட்டெனப், நியூயார்க் பல்கலைக் கழகத்தின் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் மிஜோ பல்கலைக்கழகத் தின் அகிரா யோசினோ ஆகியோ ருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்றையக் காலக்கட்டத்தில் செல்போன் முதல் எலக்ட்ரிக் வாக னங்கள் வரை அனைத்து எலக்ட் ரானிக் சாதனங்களையும் நீடித்து செயல்பட வைக்கும் லித்தியம் அயன்பேட்டரிகளை மேம்படுத்திய வர்கள் இவர்கள்தான்.

1970ஆம் ஆண்டு கச்சா எண் ணெய் தட்டுப்பாடு நிலவிய சமயத் தில், விட்டிங்ஹாம் முதல் முதலில் பெரிய அளவிலான லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கினார். அவருடன் ஜான் குட்டெனப், யோசினோ ஆகியோர் இணைந்து சிறிய வடிவிலான செயல்திறன் மிகுந்த லித்தியம் பேட்டரிகளை மேம்படுத்தினர். இவர்களின் பங் களிப்பை கவுரவிக்கும் வகையில் டிசம்பர் 10ஆம் தேதி வேதியிய லுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அப்போது மூவருக்கும் தங்கப்பதக்கத்துடன், சுமார் ரூ.6.5 கோடி பகிர்ந்தளிக்கப்படும்.

- விடுதலை நாளேடு 10 10 19

புதன், 10 அக்டோபர், 2018

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜப்பானை சேர்ந்த 2 மருத்துவர்கள் தேர்வு



ஸ்டாக் ஹோல்ம், அக்.2 அமெரிக்கா, ஜப் பானை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் ஆலிசனுக்கும், ஜப்பானை சேர்ந்த மருத்துவர் தசுகு ஹோன்ஜோவுக்கும் அளிக்கப்படுகிறது.நோய் எதிர்ப்பு மருத்துவ நிபுணர்களான ஆலிசனும், ஹோன்ஜோவும் நோய் எதிர்ப்பு கட்டுப்படுத்துதலை தடுக்கும் புற்றுநோய் சிகிச்சையை கண்டுபிடித்தவர்கள். நோய் எதிர்ப்பு செல்கள், சில புற்றுநோய் செல்களிலிருந்து புரதத்தை உருவாக்கி அதன் மூலமாக புற்றுநோய் செல்களின் வீரியத்தை தடுத்து, அவற்றை அழிப்பதே இந்த மருத்துவ சிகிச்சையின் முறையாகும்.

இவர்களுக்கு 7.5 கோடி பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப் படும். வரும் டிசம்பர் 10இல் ஸ்டாக்ஹோல்மில் நடக்கும் விழாவில் நோபல் பரிசு வழங்கப்படும்.

- விடுதலை நாளேடு, 2.10.18

இயற்பியல்: லேசர் சிகிச்சை முன்னோடிகள் மூவருக்கு நோபல் பரிசு



ஸ்டால்க்ஹோம், அக்.3 லேசர் சிகிச்சை முறைகளுக்கு முன் னோடியாகத் திகழும் மூன்று விஞ்ஞானிகள், இயற்பியல் பிரிவில் நிகழாண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்சைச் சேர்ந்த ஜெனார்டு மோரூ, கனடா வைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக் லாண்ட் ஆகிய அந்த மூவரும், லேசர் சிகிச்சைகளுக்குப் பயன் படும் ஒளியியல் (ஆப்டிகல்) லேசர்களைக் கண்டுபிடித்தமைக் காக அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் குழு தெரிவித்ததாவது: அணுத் துகள்கள், வைரஸ்கள் மற்றும் உயிரணுக் களை அள்ளியெடுக்கும் ஒளி யியல் லேசரை கடந்த 1987-ஆம் ஆண்டு கண்டுபிடித்தமைக்காக, ஆர்தர் ஆஷ்கினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வெறும் கதிர்வீச்சை பயன் படுத்தி, பொருள்களை நகரச் செய்யும் அறிவியல் கனவை, அவரது அந்தக் கண்டுபிடிப்பு நனவாக்கியிருக்கிறது.

மேலும், அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த லேசர் அதிர்வுகளை உருவாக்கிய மோரூ மற்றும் ஸ்ட்ரிக்லாண் டுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவர்கள் இருவரும் உருவாக்கிய ஒளியியல் லேசர் கதிகள், கண் குறைபாடுகளை சரி செய்வதற் கான லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

ஆர்தர் ஆஷ்கின் (96)


பெல் லேபரட்ரீஸ், லூ ஸென்ட் டெக்னாலஜிஸ் ஆகிய வற்றில் பணியாற்றிய ஆர்தர் ஆஷ்கின், நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களி லேயே மிகவும் அதிக வயது டையவர் ஆவார். இதற்கு முன்னர், 90 வயதான லியோனிட் ஹுர்விச் கடந்த 2007-ஆம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றதே சாதனை யாக இருந்து வந்தது.

ஜெனார்டு மோரூ (74)


பிரான்ஸில் உள்ள எகோல் பாலிடெக்னிக் மற்றும் அமெரிக் காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தில் பணியாற்றும் மோரூ, உலகின் மிக சக்தி வாய்ந்த ஈஎல்அய் லேசர் உருவாக்கத் திட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

டோனா ஸ்ட்ரிக்லாண்ட் (59)

கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் டோனா ஸ்ட்ரிக்லாண்ட், ஜெனார்டு மோரூவின் மாணவி ஆவார். இயற்பியல் துறையில் கடந்த 1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப் பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 3.10.18