உறுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 மார்ச், 2021

துண்டான தலையில் இருந்து இதயம், உடலை வளர்க்கும் கடல் அட்டை



 டோக்கியா, மார்ச் 24- சிட்னி  துண்டான தலையில் இருந்து இதயம்,உடலை வளர்க்கும் கடல் அட்டைகளை பார்த்து விஞ்ஞானிகள் வியப்படைந் தனர்

ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாயகா மிட்டோ மற்றும் யோயிச்சி யூசா  ஆகியோர் சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.அப்பேது ஒரு நாள், தங்கள் ஆய்வுகூடத்தில்  இருந்த கண் ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டை யின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட் டது.

ஆனால், தலை இறந்து விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக் கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட் டைக்கு, இதயம் உள்பட உட லின் அனைத்து உள் அங்கங் களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது.

அட்டைகளுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரி யத்தை ஏற்படுத்தி விட்டது. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவதும் இதுவே முதல் முறை என நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி கள் கூறும் போது . பச்சை நத்தைகள் அவற்றின் சருமத் தில் ஆல்கா செல்களைக் கொண்டுள்ளன, எனவே அவை ஒரு புதிய உடலை உருவாக்கும் வரை ஒரு செடியைப் போன்ற ஒளியை உண்ணலாம், இதற்கு  சுமார் 20 நாட்கள் ஆகும்.

மற்ற விலங்குகள் வேண்டு மென்றே உடல் பாகங்களை பிரித்து மீண்டும் வளர்க்கின் றன, இது ஆட்டோடொமி எனப்படும் ஒரு பொறிமுறை யாகும், ஆனால் இது போன்று முன்னர் அறியப்பட வில்லை என்று ஆராய்ச்சியா ளர்கள் தெரிவித்தனர்.

« வட்டையாடுபவர்களிட மிருந்து தப்பிப்பதற்கான ஒரு முறை இது என்று  ஆரம்பத் தில் நினைத்தோம்  ஆனால் இப்போது இனப்பெருக்கத் தைத் தடுக்கும் ஒட்டுண்ணி களை அகற்றுவதற்காக இருக் கலாம் என கூறினார்கள்.

இதுகுறித்து விஞ்ஞானி மிட்டோ கூறியதாவது:-

நான் ஆச்சரியப்பட்டேன், கடல் அட்டை இறந்துவிடும் என்று தான் நான் முதலில் நினைத்தேன், ஆனால் அது தொடர்ந்து நகர்ந்து மிகவும் ஆற்றலுடன் சாப்பிட்டது, நான் சிறிது நேரம் அதைக் கவனித்தேன், அது அதன் இதயத்தையும் உடலையும் மீண்டும் உருவாக்கியது.

ஸ்டெம் செல்களைப் பற் றிய ஆச்சரியமான விஷயங் களில் ஒன்று, அவை விலங்கு களின் தலையின் விளிம்பி லிருந்து ஒரு இதயத்தையும் உடலையும் மீளுருவாக்கம் செய்ய பயன்படுத்தப்படலாம். மேலதிக ஆய்வின் மூலம், இந்த கண்டுபிடிப்புகளை மீளுருவாக்கம் செய்யும் மருத் துவத்திற்குப் பயன்படுத்த லாம், ஆனால் இது இந்த கட்டத்தில் ஒரு  தொலைதூர நம்பிக்கையாகும்.

வியாழன், 7 ஜூன், 2018

உறுப்புகளுக்கு இனி அழிவில்லை!

ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் உறுப்புகள் கிடைக் காததால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உடல் உறுப்பு கொடை பற்றிய விழிப்பு உணர்வு பெருகிவந்தாலும்கூட,  சரியான நேரத்தில் பொருத்தமான  நபரிடமிருந்து உறுப்பு தானம் பெற முடியாமல் போவதுதான் இத்தகைய மரணங்களுக்கு காரணம். இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

இப்போதைக்கு `க்ரையோபிரிசர்வேஷன்  முறை மட்டுமே இதற்குத் தீர்வு என்கிறது மருத்துவ உலகம். நம் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் எப்படிக் குறிப்பிட்ட சில நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படு கிறதோ, அதே போன்றுதான் இம்முறையும் செயல்படுகிறது. உயிரிப்பொருள்களை மைனஸ் 70 முதல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குக் குளிர்விப்பதன் மூலம் அந்தப் பொருள்களில் உள்ள வேதிப்பொருள்களின் செயல்பாடும், செல்களின் செயல்பாடும் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. இதனால் எவ்வித மாற்றத் துக்கும் உள்ளாகாத இந்த உயிரிப்பொருள்களைத் தேவைப்படும் நேரத்தில் தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உடலின் செல்கள், உறுப்புகள் மட்டுமல்லாமல் முழு மனிதனையேகூட இந்த முறையில் எவ்வித மாற்றத்துக்கும் உட்படாமல் பாதுகாக்க முடியும் என்கிறது மருத்துவம்.

இது எப்படி சாத்தியம்? உறைய வைத்தல் மட்டுமே ஒரு பொருளைக் கெடாமல் பாதுகாக்குமா? செல்களை உறையவைக்கும்போது அதற்குள் இருக்கும் தண்ணீர் முதலில் உறைய ஆரம்பிக்கும். இதனால் செல்களுக்குள் இருக்கும் திரவத்தின் அடர்த்தியும் அளவும் குறைவதால் செல்லுக்குள் அழுத்தம் ஏற்பட ஆரம்பிக்கும். செல்லினுள் மூன்றில் இரண்டு பங்கு நீர் முழுவதும் உறைந்த பிறகு ஏற்படும் வெற்றிடத்தால் செல்லின் வடிவம் முழுவதும் உருக்குலையும் அபாயம் உள்ளதே? ஆம் உறையவைக்கப்பட்ட உயிரிப்பொருள்  வேறெந்த பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்பதற் காகத்தான்   பாதுகாப்பான்கள் உதவுகின்றன. சுக் ரோஸ், ஆல்கஹால், கிளைகால், சில அமினோ அமிலங்கள் போன்றவை பாதுகாப்பான்களாக உபயோகப்படுத்தபடுகின்றன. இப்படிப் பதப் படுத்தப்பட்ட உயிரிப்பொருள்கள் திரவ நைட்ர ஜனில் பாதுகாக்கப்படுவதன் மூலம் நீண்ட நாள் களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றன. இப்படிப் பாதுகாக்கப்பட்ட பொருளை மீண்டும் உருகச் செய்வதன் மூலம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரமுடியும். ஆனால், இப்படிச் செய்யும்போது செல்லுக்குள் வெற்றிடம் ஏற்படுவதால் செல்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு.

அண்டார்டிகா பகுதியில் காணப்படும் அண் டார்டிகா பூச்சி ஒன்று மேற்கூறிய பிரச்சினைகள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருப்பது அறியப்பட்டிருக்கிறது. தனது வாழ்க்கைச் சுழற்சியில் இந்தப் பூச்சி பல நாள்களை இப்படி உறைநிலையிலே கழிக்கிறது, எவ்வித பாதிப்பும் இல்லாமல்!  இந்தப் பூச்சிக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? யோசித்தபோதுதான் பாதுகாப்பான்கள், அதாவது கிளிசராலும், குளுகோசும் இயல்பாகவே சுரப்பது கண்டறியப்பட்டது. இந்தப் புரதங்கள் பெரும்பான்மையான நீரை உடலிலிருந்து வெளி யேற்றும் சவ்வாகச் செயல்படுவதுடன், அழுத்தத் தைச் சமம் செய்வதும் கண்டறியப் பட்டிருக்கிறது. நீரின் அளவும், அழுத்தத்தின் அளவும் சமன் செய்யப்படுவதால் மேற்கூறிய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இந்தப் பூச்சிகளால் சமாளிக்க முடிவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது நீரைப் பெருமளவில் வெளி யேற்று வதால் மனிதர்களில் இந்த நடைமுறை சாத்தியப்பட வில்லை. பூச்சியின் உடலில் 70 சதவிகித அளவு நீரை வெளியேற்றினாலும் அதனால் உயிர் வாழ முடியும். மனித செல்களிலிருந்து 15 சதவிகிதத்துக்கும் அதிகமான நீரை வெளியேற்றமுடியாது என்னும் நிலைதான் மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாததாக மாற்றியுள்ளது.

இருப்பினும், க்ரையோபிரிசர்வேஷன்  முறை சில குறிப்பிட்ட வகை செல்களைத் தவிர மற்ற செல்களில் பாதிப்பில்லாமல் செயல்படுத்தக் கூடி யதுதான். இந்த நம்பிக்கையே இம்முறையை நடை முறைச் சாத்தியமாக்கியுள்ளது. மேற்கூறிய பிரச் சினைகளுக்கான தீர்வு எதிர்காலத்தில் கண்டறியப் படும் பட்சத்தில், டைனோசர் அழிந்தது போல எந்த இனமும் எதிர்காலத்தில் அழியாது. ஏனெனில் எல்லா செல்களையும் இந்த க்ரையோபிரிசர்வே ஷன் மூலம் பாதுகாத்து விடலாம்.
- விடுதலை நாளேடு, 31.5.18