டோக்கியா, மார்ச் 24- சிட்னி துண்டான தலையில் இருந்து இதயம்,உடலை வளர்க்கும் கடல் அட்டைகளை பார்த்து விஞ்ஞானிகள் வியப்படைந் தனர்
ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாயகா மிட்டோ மற்றும் யோயிச்சி யூசா ஆகியோர் சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.அப்பேது ஒரு நாள், தங்கள் ஆய்வுகூடத்தில் இருந்த கண் ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டை யின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட் டது.
ஆனால், தலை இறந்து விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக் கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட் டைக்கு, இதயம் உள்பட உட லின் அனைத்து உள் அங்கங் களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது.
அட்டைகளுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரி யத்தை ஏற்படுத்தி விட்டது. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவதும் இதுவே முதல் முறை என நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானி கள் கூறும் போது . பச்சை நத்தைகள் அவற்றின் சருமத் தில் ஆல்கா செல்களைக் கொண்டுள்ளன, எனவே அவை ஒரு புதிய உடலை உருவாக்கும் வரை ஒரு செடியைப் போன்ற ஒளியை உண்ணலாம், இதற்கு சுமார் 20 நாட்கள் ஆகும்.
மற்ற விலங்குகள் வேண்டு மென்றே உடல் பாகங்களை பிரித்து மீண்டும் வளர்க்கின் றன, இது ஆட்டோடொமி எனப்படும் ஒரு பொறிமுறை யாகும், ஆனால் இது போன்று முன்னர் அறியப்பட வில்லை என்று ஆராய்ச்சியா ளர்கள் தெரிவித்தனர்.
« வட்டையாடுபவர்களிட மிருந்து தப்பிப்பதற்கான ஒரு முறை இது என்று ஆரம்பத் தில் நினைத்தோம் ஆனால் இப்போது இனப்பெருக்கத் தைத் தடுக்கும் ஒட்டுண்ணி களை அகற்றுவதற்காக இருக் கலாம் என கூறினார்கள்.
இதுகுறித்து விஞ்ஞானி மிட்டோ கூறியதாவது:-
நான் ஆச்சரியப்பட்டேன், கடல் அட்டை இறந்துவிடும் என்று தான் நான் முதலில் நினைத்தேன், ஆனால் அது தொடர்ந்து நகர்ந்து மிகவும் ஆற்றலுடன் சாப்பிட்டது, நான் சிறிது நேரம் அதைக் கவனித்தேன், அது அதன் இதயத்தையும் உடலையும் மீண்டும் உருவாக்கியது.
ஸ்டெம் செல்களைப் பற் றிய ஆச்சரியமான விஷயங் களில் ஒன்று, அவை விலங்கு களின் தலையின் விளிம்பி லிருந்து ஒரு இதயத்தையும் உடலையும் மீளுருவாக்கம் செய்ய பயன்படுத்தப்படலாம். மேலதிக ஆய்வின் மூலம், இந்த கண்டுபிடிப்புகளை மீளுருவாக்கம் செய்யும் மருத் துவத்திற்குப் பயன்படுத்த லாம், ஆனால் இது இந்த கட்டத்தில் ஒரு தொலைதூர நம்பிக்கையாகும்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக