ஞாயிறு, 16 ஜூன், 2019

மனித இனங்கள்

நூல் அறிமுகம்

நூல் :- ''மனித இனங்கள்'' ஆசிரியர்-மி.நெஸ்தூர்ஹ்
தமிழில் பூ.சோமசுந்தரம்
சோவியத் யூனியனில் 1981ல் மீர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சோவியத் சிதறுண்டதால் நூல் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது.
          உலக மனித இனங்களின் வகைப்பாட்டு பட்டியல், இனங்களின் பிரிவுகள் மற்றும் இனவாரியாக, நாட்டு வாரியாக இன மக்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
           மனித இனத்தின் தோற்றமும் பரவலும் விவரிக்கப்பட்டுள்ளது. மனித இனம் எப்படி பல இனங்களாக மாறியது  என்றும் விளக்கப்பட்டுள்ளது.
          முடிவாக மனித இனங்களின் முன்னோடி இனங்களில்  பல இயற்கை தேர்வால் அழிந்துபட்டு ''நியாண்டர்தல்'' முன்னோடி இனம் மட்டும் இயற்கையுடன் போராடி நிலைத்து நின்றது, அந்த முன்னோடி'நியாண்டர்தல்''  இனத்திலிருந்து வந்த இனங்கள் தான் உலகில் உள்ள அனைத்து மனித இனங்களும் என்று நிறுவுகிறது. வெளித்தோற்றமான ''முடி,நிறம், தோற்ற அமைப்பு, மண்டை ஓடு அமைப்பு'' இவற்றில் மட்டுமே சின்னச் சின்ன மாற்றங்கள் உள்ளன ஆனால் உடற்கூறு அனைவருக்கும் ஒன்றாகவே உள்ளது, ஆகையால் 'உலக மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்' என்று இன்னூலில் கூறப்பட்டுள்ளது.
        நூலகங்களில் தேடிப்பிடித்து படித்து,  சிந்தனை தெளிவு பெறுங்கள்.

- முக நூலில் 10.6.14ல் நான் பதிவிட்டது

அறிவியல் இயக்க மேனாள் தலைவர் மறைவுவேலூர், ஜூன் 16- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் அறிவொளி இயக்கம், தமிழ் நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்கத் தின் மாநில மாவட்ட நிர் வாகியாக செயலாற்றியவர் முகில் பரமானந்தம் அவர் கள்.  பொய்கை சடையமுத்து வாத்தியார் அவர்களின் மக னும், ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டப்பமைப்பின் கவுரவத் தலைவருமாவார். இராணிப் பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முகில் பரமானந்தம்.

அன்னார் 14.06.2019 அன்று பிற்பகல் சி.எம்.சி மருத்துவமனையில் மறைந் தார். அன்னாரின் உடல் பொது மக்கள் மரியாதை செலுத்துவற்காக 16.06.2019 அன்று காலை 11 மணிவரை வேலூர் அடுத்த பொய்கை எம்.சி.சாலையில் உள்ள மனோன்மணியம் இலவச இரவு பள்ளி, 3/160, வி.சி. சாலை, பொய்கை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

உடற் கொடை


16.06.2019 அன்று பிற்பகல் 12 மணியளவில் அன்னாரின் உடல் வேலூர் சி.எம்.சி. மருத் துவமனைக்கு கொடையாக குடும்பத்தினர் வழங்கினர்.

கவிஞர்,மக்களிசை பாடகர்,எழுத்தாளர், நாடக வியலாளர், வீதிநாடக கலை ஞர்,நாட்டுப்புற பாடகர், இசையமைப்பாளர், கலைப் பயண வித்தகர், அறிவியல் இயக்க,அறிவொளி இயக்க, தமுஎச இயக்க முன்னோடி, மக்களோடு மக்களாக வாழ்ந் தவர், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்,சிறந்த நிர்வா கத்திறனுடையவர், ஆளு மைத்திறனாளர், இலக்கிய வாதி,சமூகப்போராளி இப்படி பன்முகத்திறனுடைய கலைஞனின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப் பாகும். அவரோடு இணைந்து பழகிய நினைவுகள் காலத் தால் அழியாதவை.

ஆழ்ந்த இரங்கலை வருத் தத்துடன் நேரில் பதிவு செய் தவர்கள் விவரம் வருமாறு:

வேலூர் மாவட்ட ஆட் சியரின் நேர்முக உதவியாளர் எம்.சிலுப்பன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மற்றும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க செயலாளர் செ.நா. ஜனார்த்தனன், செயற்குழு உறுப்பினர் எம்.பிரபு, தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாநில பொருளாளர் கு.செந்தமிழ் செல்வன், மாநில செயலாளர் எஸ்.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் க.பூபாலன், ந.கருணாநிதி, அ.கலைநேசன், பி.ராஜேந்திரன், சி.குண சேகரன், எ.முத்துகிருஷ்ணன், பி.ராமு, கே.விஸ்வநாதன், ச.குமரன்,  தி. சாந்தி மனோகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல் வன், மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பெல் தொழி லாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் உள்ளிட்ட ஏராளமா னோர் மரியாதை செலுத் தினர்.

-  விடுதலை நாளேடு, 16.6.19

திங்கள், 10 ஜூன், 2019

புதிய மிகுமின் கடத்தி கண்டுபிடிப்பு!

மின்சாரத்தை கம்பி வழியே அனுப்பும்போது, விரயம் ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால், 'மிகுமின் கடத்தி'கள், மின்சாரத்தை முழுமையாக மறு முனைக்கு சேர்க்கும் திறன் உடையவை.

இருந்தாலும், மிகுமின் கடத்திகளை மின் கம்பிகளாக பயன்படுத்த முடியாது. காரணம், அவை அறை வெப்பத்தில் இயங்குவதில்லை. அவை மிகுமின் கடத்தும் திறனை, -234 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவான வெப்பநிலையில் தான் வெளிப்படுத்துகின்றன.

அண்மையில், ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், லான்தனம் ஹைட்ரைடு என்ற மிகுமின் கடத்தியை குளிர்வித்து மின்சாரம் பாய்ச்சினர்.  லான்தனம் ஹைட்ரைடு கம்பிகள், -23 டிகிரி செல்ஷியஸ் குளிர்ச்சியிலேயே முழுமையாக மின்சாரத்தை கடத்தியது. இது அறை வெப்பநிலைக்கு அருகாமையில், ஒரு மிகுமின் கடத்தியை உருவாக்கும் பந்தயத்தில், முக்கியமான மைல்கல் என, 'நேச்சர்' இதழ் அங்கீகரித்துள்ளது. பரவலாக மின் கம்பிகளாக பயன்படுத்தப்படும் தாமிரம், அலுமினியம் போன்றவை, கணிசமாக மின்சாரத்தை வீணடிக்கின்றன. உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக அனுப்ப முடிந்தால், உலகெங்கும் உள்ள மின்வாரியங்கள், நஷ்டமில்லாமல் இயங்க முடியும்.

 - விடுதலை நாளேடு 6. 6 .2019

தங்கத்தை கண்டுபிடிக்கும் பூஞ்சை!தங்கத்தைத் தேடிப் படரும் புதிய பூஞ்சை வகையை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மண்ணில் மலிந்து கிடக்கும் ஏராளமான பூஞ்சை வகைகளுள் ஒன்றான 'புசாரியம் ஆக்ஸ்போரம்', வேதியல் ரீதியில் துடிப்பான பல உலோகங்களுடன் வினை புரியும் என்பதை முன்பே விஞ்ஞானிகள் அறிந்தி ருந்தனர்.

ஆனால், வேதியல் ரீதியில் எளிதில் வினை புரியாத தங்கத் தாதுத் துகள்களுடன் புசாரியம் ஆக்ஸ்போரம் வினைபுரிந்து, தனது உடலெங்கும் அலங்கரித்துக்கொள்வதைப் போல சேமித்து வைத்திருப்பதை அண் மையில் ஆஸ்திரேலியாவின் விஞ்ஞான முகமையான சி.எஸ்.அய்.ஆர்.ஓவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வகை பூஞ்சையைப் பயன்படுத்தி, மின்கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகளி லிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முடியுமா என்று இப்போது விஞ்ஞானிகள் ஆராயத் துவங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, பெரும் பொருட் செலவில் சுரங்கங்களைத் தோண்டாமலேயே, பூமிக்கடியில் தங்கம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க, புசாரியம் ஆக்ஸ்போரம் பூஞ்சையை பயன்படுத்த முடியுமா என்பதையும் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 6 .6 .2019

பூமிக்கடியில் ஓர் உலகம்காடுகளில் மண்ணுக்கு அடியில் ஒரு ரகசியமான உயிரிகள் உலகம் இருக்கிறது. இதில் வேர்கள், பூஞ்சைகள், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் செழித்துத் தளைக்கின்றன.

கடந்த, 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருக்கும் இவை, மரங்கள், செடிகளுக்கு சத்துக்களை வழங்குவதோடு, அவற்றுகிடையே ஒரு பிணைப்பை உருவாக்குகின்றன.

இதனால், இந்த நிலத்தடி உலகை, 'வைய வன வலை' என உயிரியலாளர்கள் அழைக் கின்றனர். அண்மையில், சுவிட்சர்லாந்திலுள்ள குரோதெர் லேப் மற்றும் அமெரிக்காவின், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆகிய வற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் முதல் மண்ணடி நுண்ணுயிரிகளின் வரைபடத்தை உருவாக்கிஉள்ளனர்.

உலகின், 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள, 12 லட்சம் மரங்கள் அடர்ந்த பகுதிகள், 28 ஆயிரம் நுண்ணுயிரிகள் அடங்கிய தகவல் தொகுப்பை ஆராய்ந்து, செயற்கை நுண் ணறிவு மென்பொருளின் உதவியுடன் இந்த வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

சில நுண்ணுயிரிகள் தாவரங்களின் வேர்களை ஊடுருவி வாழ்பவை. சில வேர்களை சுற்றி வாழ்பவை. சில வகைகள் கரிமத்தை மண்ணுக்கு சேமித்துத் தருபவை. சில வகைகள், கரிமத்தை வேகமாக மண் ணிலிருந்து வெளியேற்றுபவை.

புவி வெப்பமாதலால், தற்போது கரிமத்தை சேமிக்கும் நுண்ணுயிரிகள் வேகமாக குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 30.5.19