திங்கள், 10 ஜூன், 2019

தங்கத்தை கண்டுபிடிக்கும் பூஞ்சை!தங்கத்தைத் தேடிப் படரும் புதிய பூஞ்சை வகையை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மண்ணில் மலிந்து கிடக்கும் ஏராளமான பூஞ்சை வகைகளுள் ஒன்றான 'புசாரியம் ஆக்ஸ்போரம்', வேதியல் ரீதியில் துடிப்பான பல உலோகங்களுடன் வினை புரியும் என்பதை முன்பே விஞ்ஞானிகள் அறிந்தி ருந்தனர்.

ஆனால், வேதியல் ரீதியில் எளிதில் வினை புரியாத தங்கத் தாதுத் துகள்களுடன் புசாரியம் ஆக்ஸ்போரம் வினைபுரிந்து, தனது உடலெங்கும் அலங்கரித்துக்கொள்வதைப் போல சேமித்து வைத்திருப்பதை அண் மையில் ஆஸ்திரேலியாவின் விஞ்ஞான முகமையான சி.எஸ்.அய்.ஆர்.ஓவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வகை பூஞ்சையைப் பயன்படுத்தி, மின்கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகளி லிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முடியுமா என்று இப்போது விஞ்ஞானிகள் ஆராயத் துவங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, பெரும் பொருட் செலவில் சுரங்கங்களைத் தோண்டாமலேயே, பூமிக்கடியில் தங்கம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க, புசாரியம் ஆக்ஸ்போரம் பூஞ்சையை பயன்படுத்த முடியுமா என்பதையும் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 6 .6 .2019

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக