திங்கள், 10 ஜூன், 2019

புதிய மிகுமின் கடத்தி கண்டுபிடிப்பு!

மின்சாரத்தை கம்பி வழியே அனுப்பும்போது, விரயம் ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால், 'மிகுமின் கடத்தி'கள், மின்சாரத்தை முழுமையாக மறு முனைக்கு சேர்க்கும் திறன் உடையவை.

இருந்தாலும், மிகுமின் கடத்திகளை மின் கம்பிகளாக பயன்படுத்த முடியாது. காரணம், அவை அறை வெப்பத்தில் இயங்குவதில்லை. அவை மிகுமின் கடத்தும் திறனை, -234 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவான வெப்பநிலையில் தான் வெளிப்படுத்துகின்றன.

அண்மையில், ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், லான்தனம் ஹைட்ரைடு என்ற மிகுமின் கடத்தியை குளிர்வித்து மின்சாரம் பாய்ச்சினர்.  லான்தனம் ஹைட்ரைடு கம்பிகள், -23 டிகிரி செல்ஷியஸ் குளிர்ச்சியிலேயே முழுமையாக மின்சாரத்தை கடத்தியது. இது அறை வெப்பநிலைக்கு அருகாமையில், ஒரு மிகுமின் கடத்தியை உருவாக்கும் பந்தயத்தில், முக்கியமான மைல்கல் என, 'நேச்சர்' இதழ் அங்கீகரித்துள்ளது. பரவலாக மின் கம்பிகளாக பயன்படுத்தப்படும் தாமிரம், அலுமினியம் போன்றவை, கணிசமாக மின்சாரத்தை வீணடிக்கின்றன. உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக அனுப்ப முடிந்தால், உலகெங்கும் உள்ள மின்வாரியங்கள், நஷ்டமில்லாமல் இயங்க முடியும்.

 - விடுதலை நாளேடு 6. 6 .2019

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக