திங்கள், 10 ஜூன், 2019

பூமிக்கடியில் ஓர் உலகம்



காடுகளில் மண்ணுக்கு அடியில் ஒரு ரகசியமான உயிரிகள் உலகம் இருக்கிறது. இதில் வேர்கள், பூஞ்சைகள், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் செழித்துத் தளைக்கின்றன.

கடந்த, 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருக்கும் இவை, மரங்கள், செடிகளுக்கு சத்துக்களை வழங்குவதோடு, அவற்றுகிடையே ஒரு பிணைப்பை உருவாக்குகின்றன.

இதனால், இந்த நிலத்தடி உலகை, 'வைய வன வலை' என உயிரியலாளர்கள் அழைக் கின்றனர். அண்மையில், சுவிட்சர்லாந்திலுள்ள குரோதெர் லேப் மற்றும் அமெரிக்காவின், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆகிய வற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் முதல் மண்ணடி நுண்ணுயிரிகளின் வரைபடத்தை உருவாக்கிஉள்ளனர்.

உலகின், 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள, 12 லட்சம் மரங்கள் அடர்ந்த பகுதிகள், 28 ஆயிரம் நுண்ணுயிரிகள் அடங்கிய தகவல் தொகுப்பை ஆராய்ந்து, செயற்கை நுண் ணறிவு மென்பொருளின் உதவியுடன் இந்த வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

சில நுண்ணுயிரிகள் தாவரங்களின் வேர்களை ஊடுருவி வாழ்பவை. சில வேர்களை சுற்றி வாழ்பவை. சில வகைகள் கரிமத்தை மண்ணுக்கு சேமித்துத் தருபவை. சில வகைகள், கரிமத்தை வேகமாக மண் ணிலிருந்து வெளியேற்றுபவை.

புவி வெப்பமாதலால், தற்போது கரிமத்தை சேமிக்கும் நுண்ணுயிரிகள் வேகமாக குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 30.5.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக