புதன், 4 செப்டம்பர், 2019

பாறைகளின் வயதினைக் கணக்கிடல்

பாறைகளின் வயதினைக் கணக்கிடல்#
எலிமெண்ட்(Element)மூலகம்,தனிமம்,என்பது ஒருவகை அணுக்களால் ஆனது.
ஒரு தனிமத்தில் வேறுவகை அணுக்கள் இரா.
வெள்ளி,தங்கம், இரும்பு, யுரேனியம், பொட்டாசியம்,ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்றவை தனிமங்களாகும்.இதுபோன்று நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் உள.

தனிமங்களில் சில,முறையாக கூடுதல் குறைதல் இன்றி எப்பொழுதும் ஒரே சீராக,அளவான கதிர்களை வீசிக்கொண்டே இருக்கின்றன.
இத்தகைய தானியங்களுக்கு'கதிரியக்கத் தனிமங்கள்'(Radio Active Elements) என்று பெயர்.
கதிர்களை வீசும் இந்நிகழ்ச்சி சாதாரண வெப்பநிலை மாற்றத்தாலோ அழுத்தமாற்றத்தாலோ காந்த அலைகளாலோ மின்அலைகளாலோ பாதிக்கபடா.

கதிர்கள் என்பது துகள்களேயாகும்.துகள்களுக்கு எடையுண்டு.எனவே கதர்களை வீசிக்கொண்டே இருக்கும் ஒரு தனிமத்தின் எடை காலப்போக்கில் குறைகின்றது.
சூரியன் கதிர்களை வீசிக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு நொடியும் அது பல லட்சம் டன் எடையை இழந்து கொண்டே இருக்கின்றது.

பாறைகளிலுள்ள கதிரியக்கத் தனிமங்களை(Radio Active Elements)நிலவியல் கடிகாரம்(Geological Clocks)என்றே கூறலாம்.
யூரேனியம்,தோரியம்,பொடாடாசியரூபிடியம்,கார்பன், நைட்ரஜன் போன்ற தனிமங்கள் கதிரியக்க தனிமங்களாகும்‌.
கதிரியக்கத்தினால் தனிமங்கள் தங்கள் எடையை இழந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு தனிமம் கதிர்வீச்சு முறையால் எடையை இழப்பதால் அது வேறு தனிமமாக மாறுகிறது.
ஆக,ஒரு தனிமத்தின் தற்போதைய எடை,அத்தனிமம் இழந்த எடை ஆகியவற்றை கணக்கிட்டு அந்தத் தனிமம் இருந்த பாறையின் வயதைக் கணக்கிடுகின்றனர்.

யூரேனியம்--ஈயம் முறை#
யூரேனியம்--ஈயம்( Uranium-Lead Method.)என்ற ஒருமுறை இருக்கின்றது.
பாறையில் படிந்துள்ள ஒரு குறிப்பிட்ட எடையுடைய யூரேனியம்,அதன் எடையில் பாதியை இழக்க 450கோடி ஆண்டுகளாகும்.
கனமான யூரேனியம்(U238) கதிர்களை வீசுகின்றது. வீசப்பட்ட கதிர்கள் ஈயமாக ஆகின்றது.
அதாவது கதிரியக்க யுரேனியம் இழக்கும் எடை முழுமனமையாக ஈயமாக உருப்பெற்று பாறையில் இருக்கின்றது.

ஆக,
இப்பொழுது பாறையில் இருக்கும் யூரேனியத்தின் எடையையும் ஈயத்தின் எடையையும் கூட்டினால் தொடக்கத்தில் பாறையிலிருந்த யூரேனியத்தின் எடை கிடைக்கின்றது‌
எனவே,
பாறையில் இப்பொழுது இருக்கும் யூரேனியம்,ஈயம் ஆகிய இரண்டின் எடைகளையும் ஒப்பிட்டு அந்தப் பாறையின் வயதினை துல்லியமாகக் கணக்கிடுகின்றனர்.

ஒரு பாறையில் யூரேனியம் மட்டும் இருந்து ஈயமே இல்லாமல் இருந்தால் அப்பாறை அண்மைக்காலத்தில் தோன்றியது என்று அறிந்து கொள்ளலாம்.

ஒருபாறையின் வயதினைக் கணக்கிட்டுவிட்டால் அப்பாறையிலுள்ள ஃபாசில்களின் வயதினைக் கணக்கிட்டு விட்டதாகவே பொருள்.

எடைகுறைவான யூரேனியம் (U235Light Uranium)தன் எடையில் பாதியை இழக்க 71,30,00000ஆண்டுகளும்

தேரியம் தன் எடையில் பாதியை இழக்க 1,39,00000ஆண்டுகளும்

பொட்டாசியம் (K40)தன் எடையில் பாதியை இழக்க 120கோடி ஆண்டுகளும்

கரி(K14) தன் எடையில் பாதியை இழக்க 5600ஆண்டுகளும் ஆகின்றன எனக் கணக்கிட்டுள்ளனர்.

பொட்டாசியம்-40கதிர்களை வீசும் பொழுது இழக்கும் எடையில் 88சதவீதம் கால்சியமாகவும் 12சதவீதம் ஆர்கான் ஆகவும் மாற்றுகின்றது.

பாறைகளில் பல தனிமங்கள் இருக்கின்றன.
அவை ஒவ்வொன்றும் காலத்தை,பாறையின் வயதைக் காட்டுகின்றன.
இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து சரி செய்து கொள்வதால் காலத்தைக் கணக்கிடுவதில் தவறு ஏற்படாது.

தொடரும் ‌.......

- ராஜமோகன் முகநூல் பதிவு, 30.8.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக