செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஹோமோ செபியனாக மாறிய இக்கூட்டங்கள் (படிம வளர்ச்சி) -16

தோழர்களே விலங்கியல் குறித்த 16ம் பதிவு

கடந்த பதிவுகளில் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் உலகம் எங்கும் பரவினான் எனும் கருத்தில் உள்ள முரண்பாடுகளை பார்த்தோம்

இந்த முரண்பாடுகளின் அடிப்படையில் எழுதப்பட்டதே ரசிய நூலான மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் எனும்ரசிய நூலாகும் அது உலகம் எங்கும் பரவலாக மனிதன் தோன்றினான் எனும் கருத்தை முன் வைக்கிறது

அப்படி வெவ்வேறு பகுதிகளில் மனிதன் தோன்றி இருந்தால் அவனின் ஜீன்களில் வேறுபாடு இருந்து இருக்கும் , ஜீன்களில் வேறுபாடு கொண்ட அமெரிக்கனும் ஆப்பிரிக்கனும் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடமுடியாது

இந்திய பெருமுதலாளிகளில் டாடாவின் குடும்பம் கூட பிரெஞ்சு இந்திய கலப்புதான் . குத்துச்சண்டை வீரர் மைக்டைசன் கூட ஆப்பிரிக்க அமெரிக்க கலப்புதான்

இதற்குகாரணம் இன்று உலகம் முழுவதும் வாழும் மனிதக்கூட்டம் ஆரம்பகாலத்தில் ஒரே மரபியல் மூலத்தில் இருந்தே உருவாகி இருக்க முடியும் வெவ்வேறு மரபு பண்புகளை கொண்டவர்களாக இருக்க முடியாது

புலியும் சிங்கமும் கூட பூனைகுடும்ப பேரினத்தை சேர்ந்த சிற்றினங்களே ஆனாலும் இவை ஒன்று சேர்ந்து இனப்பெருக்கம் செய்வதை மரபு பண்புகள் தடை செய்கிறது

மனிதன் புலியையையும் சிங்கத்தையும் இணைத்து உருவாக்கிய லைகர்கள் கூட மலட்டு தன்மை கொண்டதேஅவற்றால் சந்ததிகளை உருவாக்க முடியாது

மனிதன் கூட இன்று பரவலான உலகத்தொடர்புகளை இழந்து விட்டு ஏதோ ஒரு கூட்டம் நீண்ட நெடுங்காலத்துக்கு பிரிந்து தனித்து வாழுமானால் அதன் ஜீன் அமைப்பும் தனித்தன்மை கொண்டதாக மாறி மற்ற மனிதக்கூட்டத்துடன் இணைவதை தடுக்க வாய்ப்பு இருக்கிறது

நல் வாய்ப்பாக அப்படி தனிமை படும் வாய்ப்பு பெரும்பாண்மை மனிதக்கூட்டத்துக்கு ஏற்பட வில்லை

சரிஅப்படி மரபியல் ஒற்றுமை இருக்குமாயின் உலகம்முழுவதும் மனித குலத்தோற்றம் ஒன்றுபோல் இல்லாமால் வெவ்வேறு காலங்களையும் இடங்களையும் கொண்டதாக ஏன் இருக்கிறது

ஏன் என்றால் ஆரம்ப காலத்தில் நிலநடுக்கோட்டின் மைய பகுதிகளில் தான்சானியா, உகாண்டா,எத்தியோப்பியா ,கென்யா,தெற்கு சகாராக்களில் தோன்றிய மனித மூதாதை கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வடக்கு நோக்கி நகர்ந்தது

இக்காலத்தில் தாவரங்கள் பூமியின் வடக்கு பகுதிகளில் செழித்து வளர்ந்தது விலங்குகளும் அந்த தாவரங்களால் ஈர்க்கப்பட்டன மனிதனின் மூதாதையும் குறிப்பாக ஹோமோ செபிலிஸ் வகையும் இந்த தாவர விலங்கியல் உலகை பிந்தொடர்ந்து வட துருவத்தை நோக்கி நகர்ந்தது

இந்த நகர்வு 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லாமல் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும்

ஏனென்றால் நில நடுக்கோட்டில் இருந்து சிவாலிக் சீனப்பகுதிகள் மிக அதிக தூரத்தை கொண்டவை இவ்வளவு தூரத்தை கால்நடையாக நடந்து செல்ல வழித்தடங்கள் ஏதும் அக்காலத்தில் கிடையாது

விலங்குகளை பிந்தொடர்ந்து ஆஅங்காங்கே பல ஆயிரம் ஆண்டுகள் தங்கி மிக மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் சிவாலிக் பகுதிகளை அடைந்து இருக்கவேண்டும்

இந்திய துணைக்கண்டத்தையும் சீனத்தையும் ஹோமோ ஹெபிலிஸ் அடைந்து அது படிப்படியாக ஹோமோ எரக்டஸ் ஆகவும் நவீன ஹோமோ செபியனாகவும் மாறி இருக்கவேண்டும்

அதேவேளை ஆப்பிரிக்காவில் இருந்த ஹோமோ ஹெபிலிஸ்களும் ஹோமோ எரக்டசாக மாறி அதில் ஒருபிரிவான நியாண்டர்தால்களும் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பாவை அடைந்தனர்

இந்த நியாண்டர்தால் கூட்டத்தில் இருந்து சைபீரிய பகுதியில் உள்ள குகைகளில் வாழ்ந்த டெனிசோவன் எனும் கூட்டம் பிரிந்து அது தனி வகையாக மாறியது

இந்த டெனிசோவனின் ஜீன்களின் நியாண்டர்தால்களின் தாய்வழி ஜீன்களும் கலந்து காணப்படுகிறது

இந்த டெனிசோவன் ஜீன்கள் இந்தோனேசியா ,சுமத்ரா, ஜாவா ,ஆஸ்திரேலிய பூர்வ குடிகளிடமும் காணப்படுகிறது

இப்படி பரவி பரிணாம வளர்ச்சியில் ஹோமோ செபியனாக மாறிய இக்கூட்டங்கள் 1 லட்சம் அல்லது இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய நவீன மனிதனுடன் கலந்து இப்போதைய மனிதக்கூட்டம் உருவானது

தொடரும்

- ஆர் சந்திரசேகரன் ஆர் சந்திரசேகரன் முகநூல் பதிவு, 29.8.19

Image may contain: 1 person

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக