வெள்ளி, 27 செப்டம்பர், 2019

காற்றிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள உணவு



மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அந்த உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என நிலை தற்போது உருவாகியுள்ளது.

பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு, சோலெய்ன் என்ற புதுமையான புரத மாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது. அமெரிக்க விண்வெளி மய்யமான நாசாவின் தொழில் நுட்பத்தை பின்பற்றி இந்த சாதனையை சோலார் புட்ஸ் செய்துள்ளது

வழக்கமான தானிய மாவுகளில் இருக்கும் அதே சுவையும், புரதம், கார்போ அய்ட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பு ஆகியவை சோலார் புட்ஸ், காற்று மாசிலிருந்து தயாரிக்கும் சோலெய்ன் புரத்ததிலும் இருக்கிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு. ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவை.

ஆனால், சோலெய்னுக்கு வெறும், 10 லிட்டர் தண்ணீரே போதும். இதனால், பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சோலெய்ன் புரத மாவை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது

- விடுதலை நாளேடு, 26. 9 .19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக