பெருவெளியின் தோற்றத்தைத் தேடி விண்ணில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி. ஏவப்பட்டது நீண்ட பயணத்திற்குப் பிறகு அதன் இலக்கை சென்றடைந்திருக்கிறது. சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட, 6 ஆயிரம் கிலோ எடையுள்ள இந்த ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி (JWST) சுற்றுவட்டப்பாதையில் பூமியை போன்றே சூரியனை சுற்றிவரும்.
இந்தத் தொலைநோக்கியானது நான்கு முக்கிய கருவிகளைக் கொண்டுள்ளது. அவை Near Infrared Camera, Mid Infrared Instrument, Fine Guidance Sensor) மற்றும் இரண்டு Near InfraRed Spectrograph. இந்தக் கருவிகள் செயல்படுத்தப்பட்டபிறகு ஆய்வாளர்களும் மென்பொறியாளர்கள் கொண்ட குழுவும் அதன் திறன்களை முதலில் சோதித்து இதனை முழு வீச்சில் செயல்படவைத்தனர். பெருவெளியின் புதிர்களை வெளிக்கொண்டிருக்கும் இந்த அபார பயணத்தில் இன்னும் ஒரு முக்கிய படியை கடந்துள்ளோம். இந்தத் தொலைநோக்கிமூலம் பெருவெளியின் புதிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
பேரண்டத்தின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் வகையில், இதுவரை இல்லாத தெளிவோடு, துல்லியமான ஒரு ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அய்ரோப்பிய விண்வெளி முகமையான இ.எஸ்.ஏ., கனடா விண்வெளி முகமையான சி.எஸ்.ஏ. ஆகியவை சேர்ந்து உருவாக்கிய இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
‘விண்வெளியில் உள்ள புவியின் கண்’ என்று வருணிக்கப்படும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் முடிவை நெருங்கி வரும் நிலையில், ஜேம்ஸ் வெப் அதன் வாரிசாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 10 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய்) செலவில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது இந்நிலையில், விண்வெளியில் ஜேம்ஸ் வெப் எடுத்த முழு வண்ணப் ஒளிப்படங்களை அமெரிக்க அதிபர் மூலம் நாசா வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் தொலைதூர உடுத் திரள்களை (விண்மீன் கூட்டங்களின் தொகுப்பு) படம் எடுப்பது என்பது கேமிராவை ஆன் செய்து, கிளிக் செய்வது போல சில விநாடி வேலை அல்ல. பெருவெளியில் தொலைதூரத்தைப் பார்ப்பதில் சிக்கல் என்னவென்றால், பெருவெளியின் தூசிப்படலம் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பார்க்க முடியாதபடி காட்சியை மறைத்துவிடும். எனவே எக்ஸ்ரே, அகச்சிவப்புக் கதிர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அதிநவீன கருவிகளின் உதவியோடு தரவுகளைத் திரட்டி அவற்றைப் படமாக தொகுத்தே வழங்குவார்கள்
இப்படி பேரண்டத்தை காட்சிப் படுத்தி இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுவரை இல்லாத அளவு ஆழத்தோடும், தெளிவோடும் அமைந்திருப்பதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட முதல் படத்தின் சிறப்பு என்கிறது நாசா.
பெரு வெடிப்பின் மூலமாக 13.8 பில்லியன் (1380 கோடி) ஆண்டுகள் முன்பு இந்தப் பெருவெளி உருவானது என்று கணிக்கிறார்கள் அறிவியலாளர்கள். பிறந்து 600 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆனபோது பெருவெளியின் குறிப்பிட்ட பகுதி எப்படி இருந்தது என்பதைத்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் படம் காட்டுகிறது. இதைவிட சுவையான விபரம் என்னவென்றால் இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்ற விவரம்தான். ஜேம்ஸ் வெப் படத்தை பார்த்தீர்களா. அதில் உள்ள ஒவ்வொரு ஒளிப்புள்ளியும் ஒரு உடுத்திரள் ஆகும். விண்மீன்களை தமிழில் உடு என்று அழைக்கிறோம். உடுக்கள் கூட்டமாக இருப்பதே உடுத்திரள். நமது சூரியன் இடம் பெற்றுள்ள உடுத்திரளின் பெயர்தான் பால்வெளி மண்டலம்.
இப்படி பல உடுத்திரள்கள் சேர்ந்த கூட்டத்தை ஆங்கிலத்தில் கிளஸ்டர் ஆஃப் கேலக்சிஸ் என்கிறார்கள். நாம் இதை உடுத்திரள் கூட்டம் என்று அழைக்கலாம். ஜேம்ஸ் வெப் வெளியிட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படம் காட்டுவது SMACS 0723 என்று பெயரிடப்பட்ட ஒரு உடுத்திரள் கூட்டம்தான்.
உண்மையில் இந்த உடுத்திரள் கூட்டம் 4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள காட்சியைத்தான் இந்தப் படம் காட்டுகிறது. ஆனால், இந்த உடுத்திரள் கூட்டம் பின்னணியில் அதைத்தாண்டி நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரள்களின் ஒளியை வளைத்தும் பெரிதுபடுத்தியும் காட்டுகிறது. இதற்கு ஈர்ப்பு விளைவு என்று பெயர். நமது சாதாரண கேமிராவில் ஜும் லென்ஸ் எப்படி தொலைதூரக் காட்சியை இழுத்து பெரிது படுத்திக் காட்டுமோ அப்படி, நடுவழியில் உள்ள உடுக்களின், உடுத் திரள்களின் ஒளி விண்வெளி தொலைநோக்கிக்கு ஜும் லென்ஸ் போல செயல்பட்டு அதைவிட நெடுந்தொலைவில் உள்ள காட்சியை காண உதவி செய்வதே ஈர்ப்பு விளைவு எனப்படுகிறது.
இப்படி இந்த ஈர்ப்பு விளைவின் உதவியோடு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த இந்தப் படத்தின் பின்னணியில் உள்ள, மிக நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரளின் ஒளி, இந்தப் பெருவெளி தோன்றி வெறும் 600 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருந்தபோது பிறந்தது ஆகும். அதாவது பேரண்டம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது இந்த உடுத்திரள் எப்படி இருந்தது என்பதை இது காட்டுகிறது.
இந்த தொலைவு என்பது இதுவரை காட்சிப் படுத்தப்படாத தொலைவு என்பதுதான் இந்தப் படம் வரலாற்று முக்கியத்துவம் பெறக்காரணம். இதுவரை எடுக்கப்பட்ட பேரண்டத்தின் ஒளிப்படங்களிலேயே, மிகவும் ஆழமான, விரிவான விவரங்களுடன் கூடிய அகச்சிவப்பு கோணமாக இந்த படம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது
தரையில் கைக்கெட்டும் தொலைவில் கிடக்கும் ஒரு மணல் துகளை கற்பனை செய்துகொள்ளுங்கள். வானத்தில் அந்த மணல் துகள் அளவுக்கான இடத்தை படம் பிடித்தபோதுதான், நீங்கள் மேலே பார்த்த எண்ணிலடங்கா உடுக்களை கொண்ட பல உடுத்திரள்கள் தெரிகின்றன. இது போன்ற ஆழமான புலத்தை காட்சிப் படுத்துவதற்கு ஹபிள் தொலைநோக்கி பல வாரங்களுக்கு விண்வெளியை உற்றுநோக்க வேண்டியிருக்கும். ஆனால், ஜேம்ஸ் வெப் 12.5 மணி நேரம் மட்டுமே விண்வெளியை உற்றுநோக்கி இந்தப் ஒளிப்படத்தை உருவாக்கியுள்ளது.
இந்தப்படங்கள் மேலும் தொலைவாகப் பயணித்து 13.5 பில்லியன் ஆண்டு தொலைவுக்கு சென்று பார்த்துள்ளது. நமதுபெருவெளி பிறந்ததே 13.8 பில்லியன் ஆண்டுகள் முன்புதான் என்பதைக் கணக்கில் கொண்டால் இந்தப்பெருவெளியின் தொடக்க காலத்துக்கு அருகே செல்வதற்கு ஒப்பானது.
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்தப் படம் காண்பிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய ஜோ பைடன், “அமெரிக்கா பெரிய விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை இந்த படங்கள் உலகுக்கு நினைவூட்டுகின்றன, மேலும் அமெரிக்க மக்களுக்கு - குறிப்பாக எங்கள் குழந்தைகளுக்கு - எங்கள் திறனைத் தாண்டி எதுவும் இல்லை என்பதை நினைவூட்டுகின்றன” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை யாரும் பார்த்திராத சாத்தியக்கூறுகளை நம்மால் பார்க்க முடிகிரது. இதுவரை யாரும் எட்டாத இடங்களையும் நம்மால் எட்ட முடியும்“ என்றும் பேசினார்.
1600 களில் முதல் முதலாக இத்தாலியைச் சேர்ந்த கலிலியோ கலீலி என்ற கணிதம் மற்றும் வான் இயற்பியலாளர் சிறிய ரக தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் வானத்தைக் கண்டார். அவரது பார்வையிலிருந்துதான் வானத்தைப் பார்க்க நாம் துவங்கினோம்.
அதுவரை மேலே சொர்க்கம், கீழே நரகம் என்ற மதக்கோட்பாட்டை உலகம்முழுவதிலும் நம்பி வந்தனர். ஹிந்துமதத்திலோ விண்வெளியைப் பற்றிய மூடநம்பிக்கைகள் மேலும் டன் கணக்கில் குப்பைகளாகக் குவிந்து கிடக்கிறது.
இவர் விண்வெளியை பார்த்த பிறகுதான் அதன் தொடர்ச்சியாக அறிவியல் வளர வளர பல தொலைநோக்கிகள் உருவாகி முதலில் நமது சூரியக்குடும்பம், அதனைத்தொடர்ந்து பால்வெளி எனத்தொடர்ந்து பிளாக்ஹோல் எனப்படும் ஒளியை உள்ளிளுக்கும் கருப்பு விண்மீன்கள் என பல நூறு கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளவைகள் அனைத்துமே நமது பார்வைக்குத் தெரியவந்தது. தற்போது இதுவரை கணக்கியல் ரீதியில் உறுதிசெய்யப்பட்டு இப்படி இருக்கும் என்று கற்பனைப்படமாக வரையப்பட்ட விண்மீன் திரள்களின் பிறப்பிடமும் துவக்கமுமான பெருவெளியின் ஒளித்திரள்களை நமது பார்வைக்கு அறிவியல் கொண்டு வந்துவிட்டது, ஆனால் இப்போதுவரை இன்றும் ஹிந்த்துத்துவவாதிகள் சொல்லிக் கொண்டு இருக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களைத்தான் காணோம்.
கடவுளர்கள் எங்கே?
ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் மூலம் அறிவியல் வானில் ஆழ துழாவுகிறது.
அங்கே கடவுள்கள், சொர்க்கம், நரகம், தேவலோகம், படைப்பு தளம், என்று எதுவும் இல்லை.
மனிதன் உருவான பிறகே மனிதனால் கடவுள் என்ற கருத்து,உருவாக்கப்பட்டது. அது அவர்களின் சுரண்டலை மறைக்க, எதிர்ப்பை குறைக்க, உழைக்காமல் வாழ, இது போன்ற பல நன்மைகளை அவர்களுக்கு செய்கிறது. அதனால் தான் அவர்கள் அதை தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து நம்மை நம்ப வைத்துவிட்டார்கள்.
அவர்களுக்கு நாம் கடவுள் இல்லை,மதம் இல்லை, ஜாதி இல்லை, என்று வேறு வார்த்தைகளால் கூறுவதால் அவர்களுக்கும் எந்த கவலையும் இல்லை.ஆனால் நாம் நடைமுறையில் உள்ள ஜாதி மத சடங்குகளை ந வேரோடு பிடுங்கி ஏறிய முற்படும் போதுதான் அவர்களுக்கு உண்மையான பிரச்சினை.
ஆகவே வெறும் இந்துத்துவ மத பாசிதத்தை மட்டும் எதிர்க்க கூடாது. இவைகளை தாங்கும் அடிதளத்தையும் வீழ்த்த வேண்டும்.(இது உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின், ஏகாதிபத்தியவாதிகளின் உழைப்பு சுரண்டல், இயற்கை வள கொள்ளை, வங்கி நிதி கொள்கை, பங்கு சந்தை வழியாக கொள்ளை, ஒப்பந்தக் கொள்ளை,என அனைத்தையும் ஆதரிக்கிறது.முதன்மை சுரண்டல் வடிவத்தை பாதுகாக்கும் அல்லது நம்மை திசை திருப்பும் ஆயுதமே இந்த பாசிச வடிவம்.)
ஆக நாம் அனைவரும் இந்துத்துவ பாசிச அதிகாரத்தையும், உள்நாட்டு தரகு அதிகார முதலாளிகளையும், வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தையும், எதிர்த்து வீழ்த்த வேண்டும்.
அதற்கு நமது அகநிலையான அமைப்பு உழைக்கும் மக்களை (தொழிலாளர்கள்,விவசாயிகள், இன்னபிற) கொண்டு கட்டப்பட வேண்டும்.
அப்பொழுது தான் நாம் எதிரியை வீழ்த்த முடியும்.
இல்லை என்றால் தற்போதைய இலங்கை போன்ற நிலை வந்தாலும் நாம் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை.
ஆகவே நாம் எதார்த்தத்தை உணர்ந்து அதனடிப்படையில் செயல்படவேண்டும் என்றும் மேலே சொன்னவாறு கட்சி கட்டபடவேண்டும் என்பதும் நமது அவசிய. அவசரமான நிலையாகும் .
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக