ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் படிமங்கள்


அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூச்சிகளின் படிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள் ளார்கள். இது இந்தியாவைப் பற்றிய பூகோள அமைப்பின் கணிப்பையே மாற்றலாம் என கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் இருந்து 30கி.மீ. தொலைவில் இருக்கும் வஸ்தன் என்னும் பழுப்பு நிலக்கரி சுரங்கம் உள்ளது.இதை ஆராய்ச்சியாளர்கள் கோம்பே பகுதிகளாக உலக பூகோள அமைப்பில் பிரித்து வைத்துள்ளனர். இங்கு இந்தியா, ஜெர்மனி மற்றும் அமெரிக் காவைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு ஒன்று 50 மில்லி யன் (அய்ந்து கோடி) வருடங்கள் முந்தைய மரப் பிசின் களில் எறும்பு, தேனீக்கள், கரையான் செல்கள், சிலந் திகள் மற்றும் தேள்கள் ஆகியவற்றின் முழு உடல்கள் எந்த ஒரு சேதாரமும் இன்றி காணப்படுகின்றன. இதுபோல ஏற்கெனவே சில பூச்சிகள் உக்ரைன், பிரான்ஸ், பல்டிக் போன்ற இடங்களிலும் கிடைத் துள்ளன. ஆனால் தற்போது கிடைத்துள்ள படிமங் களில் அதிகம் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை அமெரிக்காவில் இருந்து வரும்  ஆராய்ச்சி ஏட்டில் நாளை வெளிவர இருக்கிறது. இது முழு பூச்சிகளின் உடல்கள் எங்களுக்கு கிடைத்தது பெரிய ஆச்சரியம் என்று ஜெர்மனி ஆராய்ச்சியாளர் ருஸ்ட் கூறியுள்ளார். இந்தப் பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சி இந்தியாவில் பூகோள அமைப்பின் கணிப்பை மாற்றும் என நம்பப்படுகிறது, காரணம் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து ஒரு கொடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்திய நிலப்பகுதி பிரிந்து, அய்ம்பது லட்சம் வருடங்களுக்கு முன் ஆசிய நிலப்பகுதிகளில் சேர்ந்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ள நிலையில் காம்பே பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூச்சிகள் வடக்கு அய்ரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ட்ரோபிகல் அமெரிக்காவை சேர்ந்த பூச்சிகளின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. லக்னோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த சாஹ்னி என்ற அழிந்த உயிரினங்களின் படிமங்களை பற்றி ஆராயும் பேராசிரியர் அய்ந்து வருடங்களுக்கு முன் தன் சக பேராசிரியர்களுடன் எறும்பு, தட்டான் போன்ற சில பூச்சிகளை இங்கு கண்டுபிடித்துள்ளார். மேலும் இங்கு ஆராய மற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் துணை தேவைப்பட்டது. அவரது முயற்சியால் இன்று இந்தப் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் 700 மேற்பட்ட பூச்சிகளின் படிமங்களைக் கண்டு பிடித்துள்ளார்.
-விடுதலை,30.12.10

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக