புதன், 21 ஆகஸ்ட், 2019

இயற்கை தேர்வு எப்படி செயல்படுகிறது (படிம வளர்ச்சி) -7

தோழர்களே இது விலங்கியல் குறித்த ஏழாவது பதிவு

இயற்கை தேர்வு எப்படி செயல்படுகிறது என்பதை குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
இயற்கை சூழலே தனக்கான உயிரியல் அமைப்பையும் உருவாக்கிக்கொள்கிறது அப்படியானால் இயற்கைக்கு அறிவு உண்டா ? அது சிந்திக்கிறதா?இல்லை நிச்சயமாக அப்படி இல்லை.
ஒரு சிறிய எதார்த்த கற்பனை செய்வோம் மாபெரும் பசிபிக்கடலின் நடுவில் எரிமலை வெடிப்புகளால் ஒருபெரிய தீவுக்கூட்டம் ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம் .
இங்கு மிகப்பெரிய காடுகளும் ,பலவகை கனிகளை கொடுக்கும் மரங்கள் உருவானால் இயல்பாக பறவைகள் தேடி வந்து குடியேறும்,பழங்களை உண்ணும் பறவைகளை தேடி ஊண் உண்ணும் பறவைகளும் தேடிவரும்
கடல் வாழ் உயிரிகளும் ஆமை கடல் சிங்கம் போன்றவையும் இனப்பெருக்கத்துக்காகவும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் இத்தீவுகளில் குடியேறும்.
இக்கடல் சிங்கங்களை வேட்டையாட சுறாக்களும் , கில்லர் திமிங்கலங்களும் வரும்,இக்கில்லர் திமிங்கலங்களுக்கு கடல் ஓரங்களில் நல்ல உணவு கிடைத்தால் அவை தரைவரை கூட வர முயற்சி செய்கிறது.
இதுவே பல லட்சம் ஆண்டுகள் தொடரும் போது கில்லர் திமிங்கலங்களோ சுறாக்களோ நிலம் மற்றும் நீர் இரண்டு பகுதிகளிலும் வாழும் திறனை அடைகின்றன
கடலை விட தரைப்பகுதிகளில் அதிக உணவு கிடைத்தால் அது காலப்போக்கில் தரைவாழ் உயிரினமாக மாறும்
முதலில் இயற்கையின் ஒரு பகுதி மாறுகிறது மாறிய இயற்கை தன் சூழலுக்கு ஏற்ப விலங்குகளை மாற்றி அமைக்கிறது இதுவே இயற்கை தேர்வாகும்
இதை நான் வெறும் கற்பனையில் கூறவில்லை கில்லர் திமிங்கலங்கள் பெங்குவின்களையும் சீல்களையும் வேட்டையாட தரைப்பகுதிகளில் ஊர்ந்து வரும் ஆற்றலை பெற்று இருக்கின்றன .
4000 கிலோ எடை கொண்ட கில்லர்கள் அரை அடி ஆழத்தில் இருக்கும் சீல்களைகூட வேட்டை ஆடுகின்றன
அதுபோல் அமெரிக்காவின் ஜார்கியா பகுதிகளில் வாழும் டால்பின்கள் சிறு மீன்கூட்டங்களை பிடிக்க கூட்டாக சேர்ந்து கடல் நீரை கரையை நோக்கி அலைகளைப்போல் தள்ளுகின்றன இந்த செயற்கை அலைகளால் கடற்கரையில் தள்ளப்படும் மீன்களை தரையில் ஊர்ந்து வந்து பிடித்துக்கொள்கின்றன
இது போன்ற டால்பின் கூட்டங்களை உலகின் வேறு எங்கும் பார்க்க முடியாது இப்போக்கு இப்படியே நீடித்தால் டால்பின்களின் ஒரு கூட்டம் தரை வாழ் விலங்காக பிறிதொரு காலத்தில் மாறக்கூடும்
இன்னொரு உதாரணத்தை பார்ப்போம் செழிப்பான ஒரு நிலப்பகுதி பாலையாக மாறி விட்டால் பழைய முறையில் அங்கு வாழ்ந்த விலங்குகள் இப்போதும் வாழ முடியாது .
அவை வெப்பமற்ற இரவில் வேட்டையாடவும் , தனது உடலின் நீர் வற்றிப்போகாத அளவில் தனது தோல்களை சொரசொரப்பானவையாக மாற்றிக்கொள்ள வேண்டும் ,நீர் குடிப்பதையும் நீரை சேமித்துக்கொள்வதையும் உறுதி செய்யும் உடல் அமைப்பை பெற வேண்டும் .
இப்படி மாறிய இயற்கை சூழல் தனக்கான உயிர் வகையையும் மாற்றி அமைக்கிறது
சதுப்பு நிலங்கள் தனக்கான சதுப்பு நில உயிர்களையும் பாலைகள் அதற்கேற்ற உயிர்வகை களையும் பெருங்கடல்கள் அதற்கான உயிர் கோளத்தையும் உருவாக்கிக்கொள்கிறது
இது திட்டமிடப்படாமல் இயல்பாக நடப்பதாகும் மாறும் உயிருக்கும் அதை மாற நிர்பந்திக்கும் இயற்கைக்கும் இது குறித்த எந்த சிந்தனைமுறையும் இருக்காது
இன்னும் அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம்
[
](https://www.facebook.com/photo.php?fbid=170538334109573&set=a.104351330728274&type=3&eid=ARBI7q8ba1Gkn4w_8GbYs4Q350bGO14MvJ0ResSl5YwpgY-kwEMhAtOAR9PrhkMIHogsQCgwM59mp6G6)
[
](https://www.facebook.com/photo.php?fbid=170546360775437&set=gm.352019889079815&type=3&eid=ARBZ_VkFyA-WVKkLh1fnUz9peXZ1oFe5fNoRve-u0o0Hp4rvco443mhVeFJsuC2uMY723mBH59A67VwT&ifg=1)
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 20.8.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக