செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

ஹோமொ ஹெபிலிஸ் என்ற இனம் தோற்ற காலம் (படிமவளர்ச்சி) -13

தோழர்களே விலங்கியல் குறித்த 13ம் பதிவு


இயற்கையே தன்னை சுற்றி எப்படிப்பட்ட உயிரினம் வாழ்வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது இதுவே டார்வினின் இயற்கை தேர்வு என்று கடந்த பதிவுகளில் கூறி இருந்தேன்
இந்த பூமி கடந்த 450 கோடி ஆண்டுகளாக கடுமையான வெப்பம் கொண்டதாகவும் இந்த வெப்பம் படிப்படியாக குறைந்தும் வந்தது
சுமார் 80 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பனியுகம் ஆரம்பித்தது அந்த பனியுகம் சுமார் 20 கோடி ஆண்டுகள் நீடித்தது இதற்கான துல்லியமான காரணம் எனக்கு தெரியவில்லை ஆய்வாளர்கள் கூறும் காரணமும் திருப்தியாக இல்லாத காரணத்தால் அது குறித்து இங்கு விவாதிக்க வில்லை
ஆனால் கிமு 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பூமியில் கடுமையான வெப்பம் அதிகரித்தது இதன் காரணம் பூமியில் அபரிதமான கார்பன் டைஆக்சைட் அதிகரித்ததே கரணமாகும்
இக்காலத்தில் கடல்களும் நீர்நிலைகளும் வற்ற ஆரம்பித்தது இக்காலத்தில்தான் கடல்வாழ் நீர்வாழ் உயிரினங்கள் இருவாழ்விகளாகவும் அவற்றில் இருந்து ஊர்வனவும் தோன்றி பெருகின
பாலூட்டிகள் தோன்றிய காலமும் 6கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக வெப்பமாகவே இப்பூமி இருந்தது
இந்த வெப்பத்தில் இருந்துவிடுபடவே திமிங்கிலம் டால்பின் , கில்லர் வேல் போன்ற நான்குகால் பாலூட்டிகள கடல்வாழ் உயிரியாக மாறி இருக்க வேண்டும்
ஏனென்றால் இதே காலத்தில் கடும் குளிராக இன்று இருக்கும் வட துருவத்தில் பனை மரங்கள் போன்ற வெப்பமண்டல தாவரங்கள் பல்கி பெருகின அப்படிபெருகிவாழ்ந்த பனை மரத்தில் பாசில்கள் தான் கீழே படத்தில் இருப்பது இது அமெரிக்க மியூசியத்தால் பாதுகாக்கப்படுகிறது
5கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப மண்டல தாவரங்கள் மட்டும் இல்லை வெப்பமண்டல விலங்குகளும் வட துருவத்தில் வாழ்ந்தன அவை அலிகேட்டர் எனும் முதலைகள் சுறாக்கள் , நீர்யானைகள் போன்றவை
இந்தவெப்பக்காலம் கடந்த இருபது லட்சம் ஆண்டுகள் வரை நீடித்தது இக்காலத்தில்தான் பாலூட்டிகள் பல்கிபெருகின பலூட்டிகளில் ஒரு இனமான குரங்குகளும் அவற்றின் வழித்தோன்றலான மனித குலத்தின் முன்னோர்களும் தோன்றிய காலமாகும்
இப்பூமி கடந்த காலங்களில் இன்று இருப்பது போல் அமைதியாக இல்லை அது எப்போதும் கண்ட திட்டு நகர்வுகளையும் அதன் விளைவாக பூகம்பம் எரிமலை வெடிப்புகள் ஆகியவை எப்போதும் நிகழ்வதாக இருந்தது.
இந்த எரிமலை வெடிப்புகள் எப்போதும் அக்கினிகுழம்புகளையும் சாம்பலையும் பாறைகளையும் வானில் வீசி எறிந்த காரணத்தால் கார்பன் டை ஆக்சைட் வான் பரப்பில் பரவி புவியின் வெப்பத்தை மிக அதிகமாக உருவாக்கி வந்தன
இப்படி பட்ட காலத்தில்தான் புவியின் மையக்கோட்டுப்பகுதியில் குறிப்பாக தான்சானியா , காங்கோ பகுதிகளில் தோன்றிய மனித குலத்தின் மூதாதைகள்[ இவர்கள் ஹோமோ ஹெபிலிஸ் ஆக இருக்கவேண்டும் ] அதிக வெப்பம் காரணமாக வெப்பம் குறைவாக இருந்த பூமியின் வடபுலத்தை நோக்கிநகர்ந்து இருக்கவேண்டும்
ஹோமொ ஹெபிலிஸ் என்ற இனம் கற்கருவிகளையும் எலும்புகளையும் கம்புகளையும் பயன்படுத்த தெரிந்த ஆனால் உருவாக்கத்தெரியாத மனிதர்களின் முன்னோர் ஆவர்
இவர்கள் தமது கடைசி காலத்தில் கற்கருவிகளை உருவாக்க ஆரம்பித்தனர் இவர்கள் உருவாக்கிய கற்கருவிகளே 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் உருவாக்கிய முதல் கற்கருவிகள் ஆகும் இதுவே வரலாற்றில் புராதன கற்காலம் என அழைக்கப்படுகிறது
இந்த மனித மூதைகளின் மூளை 700 கிராம் இருந்ததுஇவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியே ஹோமோ எரக்டகஸ் எனும் தீயை பயன்படுத்தவும் உருவாக்கவும் தெரிந்த மனிதனின் மூதாதை ஆவர் இவர்களின் கற்கருவிகலும் மூளையும் ஹோமோ ஹெபிலிசை விட வளர்ச்சி பெர்றதாகும் இவர்களின் மூளையின் அளவு 1000 கிராம் ஆகும்
இவர்கள் இறைச்சியை வேக வைத்து உண்டனர் எனவே அதிக இறைச்சியை உன்ண முடிந்ததால் இவர்களின் மூளையும் மிகவேகமாக வளர்ந்தது
இவர்கள் பலவகைகளில் மனிதனை போன்று இருந்தாலும் சிம்பன்சி கொரிலாக்களுக்கு இருப்பதைபோலவே இவர்களின் செல்களும் 24 குரோமோசோம்களை கொண்டதாக இருந்தது
இந்த ஹோமோ எரக்டகஸ் இனமே மனித மூதாதைகளில் பூமியில் மிக அதிக காலம் வாழ்ந்த இனமாகும்
ஹோமோஎரக்டகசுக்கு முந்திய ஹோமோ ஹெபிலிஸ் இனமே சுமார் 28 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலநடுக்கோட்டின் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வடக்கு நோக்கி இடம்பெயர்ந்த விலங்குகளை பின்பற்றி இன்றைய காஷ்மீர் பகுதிகளில் உள்ள சிவாலிக் மலைப்பகுதிகளில் குடியேறினர்
ஏன் ஹோமோ ஹெபிலிஸ் என்று கூறுகிறேன் என்றால் ஹோமோ எரக்டகஸ் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானார்கள்
சான்றுகளை அடுத்த பதிவில் காணலாம்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன்ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 26.8.19
[
](https://www.facebook.com/photo.php?fbid=172062603957146&set=pcb.172070577289682&type=3&__tn__=HH-R&eid=ARCOmdoWzoGCgZPHyzCOv8oUHmK62pVLNuLWmx2GP97KXEaqpHXVA6Z_TfHjhHtqWmo-1jh59P7e25Lk)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக