ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும்.
ஒரு பொருளினால் அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளிக் கரைசலை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு லென்ஸ்வழியாக சென்று படும்போது, அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது.
இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. வணிகம், பொழுதுபோக்கு, விளம்பரம், கல்வி, பதிவுத்துறை அலுவலகங்கள், பத்திரிகைத் துறை, பல் ஊடக கருத்துத் தொகுப்புகள், திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒளிப்படவியலின் பயன்பாடு பெரிதும் உணரப்படுகின்றது. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.
1800 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர், தாமஸ் வெட்ச்வூட் (Thomas Wedgwood) ஒளி-உணர் பொருளைக் கொண்டு அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவி மூலம் படப்பதிவு செய்ய முதல் முயற்சி மேற்கொண்டார். அவர் வேதிப்பூச்சு கொண்ட காகிதம் அல்லது வெள்ளைத் தோலை வெள்ளி நைட்ரேட் உடன் வினைப்படுத்தி ஒளிப்படம் தயாரித்தார்.
நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார். இதுதான் முதல் ஒளிப்படமாக இருந்தது.
இது 1802 இல் உலகிற்கு முழுமையாகவும், தெளிவாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இது இன்றைய படங்கள் போல் இல்லாமல் கருமையான நிழல் போன்றே காகிதங்களில் இருக்கும்.
காகிதத்தில் ஒரு உருவத்தைக் கொண்டுவர நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ்(Le Gras) பகுதியில், ஒரு மலர்தோட்டம் ஒன்றை வீட்டு ஜன்னலில் இருந்து பதிவு செய்தனர் . இதுவே உலகின் முதல் இயற்கைக் காட்சி கருப்புவெள்ளைப் ஒளிப்படம் ஆகும் அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவியின் லென்ஸ் மூலம் பதிவு செய்யப்பட்டது.
டால்போட், ஒளிகசியும் நெகட்டிவ் உருவாக்கி அதிலிருந்து பல நேர்மறை பிரதிகள் அச்சிடும் செயல்முறையை உருவாக்கினார். இதுவே இன்றைய இரசாயன ஒளிப்படப் பிரதிகள் அச்சிடும் முறைக்கு அடிப்படையாகும். பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையில் பிரதிகளை அச்சிட காட்சியை மீள் ஒளிப்பட முறையில் காட்சிப் பதிவு செய்ய வேண்டும். [19] 1835 இல் கோடைகாலத்தில் டால்போட் ஒளிப்படக் கருவி மூலம் பல ஒளிப்படங்களைப் பதிவு செய்தார்.
இருப்பினும், டால்போட்டால், லாகாக் அபேயில் (Lacock Abbey) ஓரியல் (Oriel) சாளரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட ஒளிகசியும் மெல்லிய காகித எதிர்மறை மிகவும் பிரபலமானது. தற்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளின் மிகப் பழைமையான நெகட்டிவ் ஆகும்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக