புதன், 7 நவம்பர், 2018

விண்வெளியில் நாசா கண்டறிந்த சிரிக்கும் முகம் தோற்றம் கொண்ட விண்மீன் கூட்டம்



வாசிங்டன், நவ.6  விண்வெளியில் நிறுவப் பட்டுள்ள ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா சிரிக்கும் முகம் போன்ற தோற்றம் கொண்ட விண்மீன் கூட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நாசா அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ் டாக்ராம் பக்கத்தில் குறிப்பிட்ட விண்மீன் தொகுப்பின் புகைப் படத்தோடு வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:

ஹப்பிள் தொலைநோக்கி கேமராவின் இதற்கு முன் இல்லாத அளவிலான உருப்பெருக்கும் திறனைப் பயன்படுத்தி இத்தகைய நட்சத்திர கூட்டங்களின் இருப்பிடம் மற்றும் அமைப்பு பற்றியெல்லாம் கண்காணிக்க முடிகிறது.  படத்தில் வில் போன்று காணப்படும் ஒளியானது ஒரு விண்மீனாகும். அதன் வடிவமானது உருமாற்றம் அடைந்தும், கொஞ்சம் இழுக்கப்பட்டது போலும் தோற்றமளிப் பதற்கு காரணம், அதன் ஒளியானது நம்மை வந்தடையும் வழியில் ஒரு வலிமையான ஈர்ப்பு விசையினைக் கடந்து வருவதுதான். அதனால்தான் சிதறடிக்கப்பட்டு இவ்வாறு தோற்றமளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தடைகளை ஈரான் மீது விதிக்க அமெரிக்கா முடிவு


வாசிங்டன், நவ.6 அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது. ஈரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது. இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும். நேற்று ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர். தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இடைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னர் பேசிய டிரம்ப், ஈரான் மீது விதிக்கப்படும் தடைகள் மிகவும் கடுமையானது. இதுதான் இதுவரை விதித்த தி லேயே கடுமையான தடைகள். இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார்.அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது  விதிக்கவுள்ளது.

- விடுதலை நாளேடு, 6.11.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக