திங்கள், 10 அக்டோபர், 2016

உணர்ச்சிகளைப் பொறுத்து நம் கருவிழிகள் விரியும் அளவு மாறுபடுவது ஏன்?

நம் கருவிழி ஒளிக்கு மட்டுமல்லாது உடலின் உள்ளே நடக்கும் உணர்ச்சி மற்றும் மன மாற்றங்களாலும் விரிகிறது. கருவிழியின் அளவைக் கொண்டு உளவியல் சார்ந்த விஷயங்களை விஞ்ஞானிகள் அலசுகின்றனர். கண்கள் விரிவதற்கான காரணம் தெரியாமலேயே இவையனைத்தும் செய்து கொண்டிருக்கின்றனர். கருவிழியின் அளவு மாறுபட்டால் என்ன அர்த்தம் என்று யாருக்குமே தெரியாது என்று ஸ்டூவர்ட் ஸ்டீன்ஹார் கூறுகிறார். இவர் பிட்ஸ்பர்க் மருத்துவ கல்லூரியின் உயிர் அளவியல் ஆராய்ச்சி கூடத்தின் நிர்வாகி.
நாம் பார்க்கும் படங்களைப் பின்னந்தலையில் இருக்கும் பார்வைப்புறணி பகுதி ஒன்று சேர்க்கிறது. நரம்பு மண்ட லத்தின் மற்றொரு பகுதி, கருவிழியை சரிப்படுத்தும் பணியைச் செய்கிறது. இந்தப் பகுதி, இதயத் துடிப்பு, வியர்த்தல் போன்று நம் உணர்வுக் கட்டுப்பாட்டில் அல்லாத செயல்களைச் செய்கிறது; ஒளியின் அளவைப் பொறுத்து கருவிழிப்படலத்தின்() இயக்கத்தை நிர்ணயிக்கும் பணி யையும் செய்கிறது. கருவிழிப்படலம் இரு வகைத் தசை களால் ஆனது.
முதலாவது- வெளிச்சமான சூழலில், கரு விழியைச் சுற்றியிருக்கும் வட்ட வடிவ இறுக்குத் தசை. இத்தசை 2 மில்லிமீட்டர் வரை சுருங்கக் கூடியவை. இரண்டாவது- இருட்டில் பார்க்க உதவும் விரிவுத் தசைகள். இவை கருவிழியை 8 மில்லிமீட்டர் வரை விரிய உதவு கின்றன.
கருவிழி விரியும் அளவையும் சுருங்கும் அளவையும் அளப்பது ப்யூபில்லோமெட்ரி() என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவு மனிதனின் உணர்வுசார் மற்றும் அறிவுசார் செயல்பாடுகளுக்கு விடையளிக்கிறது. புரிதல்சார் நிகழ்வு களும் உணர்வுப் பூர்வமான நிகழ்வுகளும் கருவிழி சுருங்குவதற்கும் விரிவதற்கும் காரணமாக இருக்கிறது. சில மில்லிமீட்டர் அளவே நடக்கும் இந்தச் செயல்பாட்டை அகச்சிவப்பு புகைப்படக்கருவி கொண்டு கண்காணிக்க முடியும். இதன் மூலம் மனம் சார்ந்த பிரச்சினைகளைக் கண்டுபிடிக்க முடியும். பிரின்ஸ்டன் உளவியல் நிபுணர் டேனியல் கானெமன், பல ஆண்டுகளுக்கு முன்னரே கருவிழி குறித்த ஆய்வுகளை நடத்தியிருக்கிறார். அவரின் ஆராய்ச்சியில், செய்யவிருக்கும் காரியத்தின் சிரமத்தைப் பொறுத்து கருவிழி விரிவடைகிறது என்று தெரிவித்தி ருக்கிறார்.
காரியம் சிறிது கடினமாக இருந்தால் சிறிதளவே விரியும் விழி, மிகக் கடினமாக இருந்தால் பெருமளவு விரிகிறது. மேலும் அவரின் ஆய்வில் பங்குபெற்றவர்களை ஏழு எண் வரிசையை நினைவில் கொள்ளச் சொன்ன போது அவர்களின் கருவிழி படிப் படியாக விரிந்தது என்றும் அதே எண்களை ஒவ்வொன்றாக நினைவில் இருந்து கூறச் சொன்ன போது படிப்படியாக சுருங்கியது என்றும் தெரிவிக்கிறார். அதே சமயம் அறிவுத்திறன் அதிகமாக உள்ள நபர்கள் அறிதிறன் சார்ந்த செயல்களைச் செய்யும் போது சிறிதளவும் மற்றவர்கள் அதே செயலைச் செய்யும் போதும் அதிகமாகவும் விரிந்தது என்றும் விளக்கினார்.
கருவிழி விரியும் அளவைக் கொண்டு ஆட்டிசம், மன இறுக்கம், மனச் சோர்வு போன்ற பல பிரச்சனைகளைக் கண்டுபிடிக்க முடியும். கருவிழி விரிதலைக் கொண்டு ஒருவர் எடுத்திருக்கும் முடிவை முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்று வுல்ஃப்கேங் அய்ன்ஹாசர்-டிரேயர் எனும் நரம்பியல் நிபுணர் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் கண்டுபிடித்தனர். ஜெர்மனியின் பிலிப் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களை 10 நொடிக்குள் ஒரு பொத்தானை அழுத்தச் சொன்னார்கள். பொத்தானை அழுத்தும் முன் கருவிழி விரிய ஆரம்பித்த தென்றும் அழுத்திய 2 விநாடிகளுக்கு பின் அதீத விரிவு நிலையை அடைந்தது என்றும் பதிவானது. 1970 இல் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மக்களின் வரவற்பு என்ன என்பதைப் பிரதிபலிக்க ப்யூபில்லோமெட்ரி உப யோகிக்கப்பட்டது என்று ஜக்தீஷ் ஷேத், எமொரி பல்கைக் கழகத்தின் விற்பனை பேராசிரியர் கூறினார். ஆனால் அது அவர்களின் விருப்பத்தைக் குறிக்கிறதா அல்லது பதற்றத் தைக் குறிக்கிறதா என்று தெரியாததால் அந்தச் செயல் முறை கைவிடப்பட்டது என்றும் தெரிவித்தார். ப்யூபில்லோ மெட்ரியின் செயல்பாடு வரையறுக்கப் பட்டது என்பதால் அதைக் கொண்டு அனைத்து புரிதல் சார்ந்த செயல்களையும் உணர்ச்சி சார்ந்த செயல்களையும் அடையாளங் காண முடியாது. எனினும் உளவியல் ஆய் விற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று ஸ்டீன்ஹார் கூறினார்.
-விடுதலை,7.7.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக