ஞாயிறு, 30 அக்டோபர், 2016

சந்திர மண்ணில் மனித சுவடுகள்

சந்திர மண்ணில் மனித சுவடுகள், ஆதி மனிதனின் அழியாத சுவடுகள்

சந்திர மண்ணில் மனித சுவடுகள், 
ஆதி மனிதனின் அழியாத சுவடுகள்

மனிதன், நிலாவில் கால் பதித்தான் என்பதற்குள்ள சாதனை அடையாளம், நீல் ஆர்ம்ஸ்ட்ராங், 1969 ஜூலை 20 அன்று, அங்கு பதித்த காலடித் தடங்கள் தான்.

பூமியை சுற்றி வரும் சந்திரனில் காற் றோட்டம், நீரோட்டம், குமுறும் எரிமலைகள் இல்லை என்பதால் அந்தத் தடங்கள், அச்சு மாறாமல் அப்படியே இருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டு களாக நிலாவின் மீது சிறுசிறு விண்கற்கள் மோதும் சம்பவங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன. இந்த நிகழ்வுகள், விண்வெளி விஞ்ஞானிகளின் கணிப்பை விட அதிகமாகியுள்ளன.

கடந்த, 2012 - 2013 கால கட்டத்தில், நிலா மீது மிகச்சிறிய விண்கல் விழுந்ததில், 40 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. தவிர, நிலாவின் மேற்பரப்பில், கடந்த, 30 ஆண்டுகளில் குறைந்தது, 47,000 மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

எனவே, நிலாவில் மனிதனின் காலடித் தடங்கள் அழிவதற்கு எந்த அளவுக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்று, ‘நிகழ் தகவு’க் கணிப்புகளை, விஞ்ஞானிகள் சமீபத்தில் செய்துள்ளனர். அதன்படி, நிலாவின் ஒட்டு மொத்த மேற் பரப்பிலுள்ள மண், 2 சென்டி மீட்டர் அளவுக்கு புரள்வதற்கு, 81,000 ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிகிறது.

ஆக, ஆம்ஸ்ட்ராங்கின் வரி வரியான காலடித் தடங்கள் இப்போதைக்கு, ‘ஸ்ட்ராங்’காகவே இருக்கும். தான்சானியாவின் எரிமலைப் பகுதி ஒன்றில் களப்பணியில் இருந்த சூழியல் காப்பாளர் ஜிம் பிரெட் மற்றும் சிந்தியா லியுட்கஸ் பியர்ஸ் ஆகிய இருவரும், வினோதமான காலடித் தடங்களை கண்டனர்.

எரிமலைக் குழம்புச் சகதியில் பதிந்து, இன்னும் காலத்தால் அழியாமல் இருக்கும் அந்த காலடித் தடங்கள், ஒரு டென்னிஸ் மைதானம் அளவுக்கு அங்கும் இங்குமாக பதிந்திருந்தன.

அவற்றை ஒரு ஸ்கேனர் மூலம் பதிவு செய்து, முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் அச்சிட்டு எடுத்து இருவரும் ஆராய்ந்தனர்.கடந்த, 2008ல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த காலடித் தடங்கள், 19,000 ஆண்டுகளுக்கு முந் தைய வையாக இருக்கலாம் என்று அவர்கள் இப்போது கணித்துள்ளனர். அதுமட்டுமல்ல அந்த கால் சுவடுகளில் பெரும்பாலானவை குழுவாக நடந்து சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகளினுடையவை என்றும் அவர்கள் ஊகித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் உள்ள ஏரி நீர், மனித பயன்பாட்டுக்கு உதாவது என்ப தாலும், அருகேயுள்ள எரிமலை குமுறியதாலும், பாதுகாப்பான இடத்திற்கு ஆதி மனிதர்கள் இடம்பெயர்ந்த போது இந்த தடங்கள் பதிந்தி ருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இதே தான்சானியாவின் வேறு ஒரு பகுதியில், 36 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால் தடங்கள் கண்டுபிடிக்கப்படுள்ளன.

தென் னாப்ரிக்காவில் இரு இடங்களில், 1.2 லட்சம் ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவில் ஒரு இடத்தில், 20,000 ஆண்டுகளுக்கு முந் தைய தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள் ளன. வரலாற்றுக்கு முந்தைய மனித காலடிச் சுவடுகள், அக்காலகட்டத்து நிழற்படங் களைப் போல என்கின்றனர், ஜிம்மும் பியர்சும்.

இப்போது தான்சானியா அரசு அந்த இடத்தை சுற்றி முள் கம்பி வேலிகள் அமைத்து பாது காக்கிறது.
-விடுதலை,27.10.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக