வியாழன், 10 நவம்பர், 2016

அச்சு இயந்திரம் வார்த்தெடுத்த எலும்பு!


விபத்துகளில் சேதாரம் அடைந்த எலும்புப் பகுதியை சகஜ நிலைக்கு கொண்டுவர நவீன மருத்துவம் சில வழிகளை உருவாக்கியிருக்கிறது. உலோகத் துண்டுகளை வைத்து கட்டமைப்பது போன்ற இந்த வழிகள், வலிமை மிக்கவை.இயற் கையில் எலும்பு வளர்வது போலவே, செயற்கை முறையில் எலும்பை வளரச் செய்ய முடியுமா என்று மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியின் மருத்து வர்கள் அத்தகைய ஒரு புதிய முறையில் முதல் கட்ட வெற்றி கண்டுள்ளனர்.

குழந்தையாக இருக்கும்போது எலும்புகள் சிறிய அளவில் உருவாகி, பின் மெல்ல வளர்ந்து, எலும் புகள் கடினமாகின்றன. அதே போல ஆய்வுக் கூடத்திலும் உருவாக்க ட்ரினிட்டியின் பேராசிரியர் டேனியல் கெல்லி குழுவினர் முயன்று வருகின் றனர்.

இதற்கென, அவர்கள் விலங்குகளின் எலும்பு திசுக்களை உயிரி திரவங்களில் கரைத்து, முப் பரிமாண அச்சு இயந்திரத்தின் மூலம் அடுக் கடுக்காக அத்திரவத்தை செலுத்துகின்றனர்.

எலும்பின் வடிவம் போலவே ஒரு சட்டகத்தை உருவாக்கி, அவற்றுக்கு இடையே உயிரி திரவம் செலுத்தப்படுகிறது.

முப்பரிமாண அச்சு இயந்திரம், எலும்பின் வடிவை உருவாக்கிய பிறகு, அதை ஆய்வுக் கூடத்தில் வைத்து விஞ்ஞானிகள் கவனித்தனர். பல வாரங்களில் விலங்கு எலும்பு செல்கள் வளர ஆரம்பித்தன.

இந்த வளர்ச்சி தொடருமானால் தானாகவே வளரும் தன்மை கொண்ட எலும்பை முப்பரிமாண அச்சு இயந்திரம் மூலம் வார்த்தெடுத்த பெருமை ட்ரினிட்டி விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கும்.

உயிருள்ள, வளரும் எலும்புகளை முப்பரிமாண அச்சு இயந்திரம் மூலம் உருவாக்க முடியும் என்பது மட்டும் தெரியவந்திருக்கிறது என்று டேனியல் கெல்லி தெரிவித்தி ருக்கிறார்.
மனித எலும்புகளையும் இதேபோல உருவாக்கும் ஆராய்ச்சி தொடர்கிறது.

கேக்கை அச்சிடும் 3டி இயந்திரம்!

‘ஸ்டார் டிரெக்‘ என்ற அறிவியல் புனை கதைத் தொடரில், விரும்பிய உணவு வகைகளை வார்த்தெடுக்கும் இயந்திரம் அடிக்கடி வரும். அதே போல, ஒரு இயந்திரத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த, உணவு கலை நிபுணர் ரேனால்ட் பொயர்னோமோ உருவாக்கி யிருக்கிறார். முப்பரிமாண அச்சியந்திர வகையை சேர்ந்த இந்த இயந்திரம், பிரான்ஸ் நாட்டு திருமணங்கள் மற்றும் விழாக்களில் பரிமாறப்படும், ‘குரோக்வெம்போச்‘ என்ற உணவு வகையை மட்டுமே அச்சு அசலாக அச்சிட்டுத் தருகிறது.

அடுமனையில் தயாராகும் குரோக்வெம்போச், குட்டி, குட்டி பன்களை ஒன்றின் மேல் ஒன்றாக கூம்பு வடிவில் அடுக்கியது போல் இருக்கும். ஏற்கனவே, பிட்சா, கேக், மிட்டாய்கள் போன்ற வகை உணவுகளை தயாரிக்கும் முப்பரிமாண அச்சியந்திரங்கள் வந்திருக்கின்றன.

ஆனால், அவை முழுக்க முழுக்க முப்பரிமாண அச்சியந்திரத் திலேயே தயாரிக்கப்படுபவை அல்ல. ஆனால், ஆஸ்திரேலியர் உருவாக்கிய இந்த இயந்திரம், அடுமனையில் சுடுவது, இனிப்பை சேர்ப்பது உட்பட, முழுமையாக குரோக்வெம்போச்சினை முப்பரிமாண அச்சியந்திரத்திலேயே அச்சிட்டு தருவதுதான் சிறப்பு. இதன் வீடி யோவை, ‘யூ டியூபி’ல் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர்.ஆஸ்திரேலிய சமையல் போட்டி நிகழ்ச்சியான, ‘மாஸ்டர் செப்’ போட்டியில் பங்கேற்றவரான ரேனால்ட், முப்பரிமாண உணவு அச்சியந்திரங்களால் ஈர்க்கப்பட்டதால், சிக்கலான பிரான் வகை அடுமனை உணவை தயாரிக்க முடியுமா என்று நீண்ட பரிசோதனையில் ஈடுபட்டார். கடைசியில் வெற்றி கிடைத்தது.

இன்று அதிசயமானதாகவும், செயற்கையானதாகவும் கருதப்படும் முப்பரிமாண உணவு அச்சியந்திரங்கள், இன்னும் 10 ஆண்டுகளில் பரவலாகிவிடும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர். ரேனால்ட்சின் கண்டுபிடிப்பு அதை உறுதி செய்துள்ளது.
-விடுதலை10.11.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக