வியாழன், 5 அக்டோபர், 2017

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு


சுவீடன், அக்.4 2017ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந் தளிக்கப்பட்டது.

கடந்த 1901-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

மருத்துவம், விஞ்ஞானம், இலக்கியம், அமைதி ஆகியவற் றுக்காக தனித்தனி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், மருத்துவ நோபல் பரிசுதான் முதலில் அறிவிக்கப் படுவது வழக்கம்.

அந்த அடிப்படையில், இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந் தளிக்கப்பட்டு உள்ளது. ஆல்ர்பர் அய்ன்ஸ்டினின் ஈர்ப்பு விசை அலைகள் பற்றிய கண்டு பிடிப்புகாக இந்த 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கபட்டு உள்ளது.

100 ஆண்டுகளுக்கு பிறகு  ஈர்ப்பு அலைகள் இருப்பதை 3 விஞ்ஞானிகளும்  உறுதி செய் தனர்.

ஜெர்மனியை சேர்ந்த ரைனர் வெயிஸ், அமெரிக்காவை சேர்ந்த பரிசி பேரிஸ் மற்றும் கிப் எஸ் தோர்ன் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு பெற்றனர். இவர்கள் லிகொ என்ற கருவி மூலம் புவிஈர்ப்பு விசை அலைகளை   கண்டு பிடித்துள்ளனர்.

சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நேற்று அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு குழு தலைவர் தாமஸ் பெர்ல் மேன் இதனை அறிவித்தார்.
- விடுதலை,4.10 17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக