வியாழன், 5 அக்டோபர், 2017

மூன்று அமெரிக்கர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு


நியூயார்க், அக்.3 அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி ஹால், மைக் கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக் கேல் டபிள்யூ யங் ஆகிய மூன்று மரபியல் (ஜெனடிக்ஸ்) விஞ்ஞானிகளுக்கு நிகழாண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளன.

மனிதர்கள் உள்பட உயிரினங் களின் உடலுக்குள், நேரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும் ‘உயிரி கடிகாரம்‘, எவ்வாறு செயல்படுகிறது என் பதை தங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்தமைக்காக, அந்த மூவ ருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் குழு நேற்று கூறியதாவது:

தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரது உடல்களும், புவியின் சுழற்சிக்கு ஏற்ற வகையில் தங்களை தகவ மைத்துக் கொண்டே இயங்குகின் றன. இவ்வாறு பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை உயிரினங் களின் உடலில் தினந்தோறும் நேரம் தவறாமல் தூண்டுவதற்கு, உடலில் தானாகவே அமைந்துள்ள ஒரு ‘உயிரி கடிகாரம்‘தான் உதவு கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலமாகவே தெரியும்.

அந்த உயிரி கடிகாரத்தின் செயல்பாட்டில் ஏற்படும் குறை பாடுகளால் மன அழுத்தம், ‘பைபோலார்’ எனப்படும் மிகை யுணர்வு மனநோய், மறதி நோய், நரம்பியல் நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன. புவியின் சுழற் சிக்கும், உடலின் இயக்கத்துக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் இந்த உயிரி கடிகாரம் பழுதடைந் தால், புற்று நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுவதற் கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனி னும், இந்த உயிரி கடிகாரத்தை இயக்குவது எது என்பது இது வரை புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், பழ வண்டுகளின் உடல் இயக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு, அந்த உயிரி கடிகாரத்தை இயக்கும் மரபணுவை ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய மூவரும் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர்.

அந்த மரபணுதான் இரவு நேரங்களின்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் உடலில் உருவாகும் ஒரு வகையான புரதங்களை தனக்குள் கிரகித்துக் கொண்டு, பகல் நேரங்களில் அவற்றை வெளியிடுகிறது என் பதை அவர்கள் கண்டறிந்துள்ள னர்.

அவர்களது இந்தக் கண்டு பிடிப்பின் மூலம், நேரம் தவறிய உடலியக்கத்தினால் ஏற்படும் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காண மருத்துவ உலகத்துக்கு வழி ஏற்பட்டுள்ளது என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
- விடுதலை,3.10.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக