செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

மனித உட லில் உள்ள மரபணுக்களில், 25 சதவீதம் மட்டுமே ஏதாவது பணியைச் செய் கின்றன. மீதியுள்ளவை வெறும் குப்பை டி.என்.ஏ.,க்கள் தான் என்று, அமெரிக்காவிலுள்ள ஹுயூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியல் விஞ்ஞானியான டான் கிரவுர் அறிவித்துள்ளார். முன்பு, 80 சதவீத மரபணுக்கள் பயனுள்ள பணிகளைச் செய்வதாகவும், 20 சதவீதம் உபத்திரவம் இல்லாத, ஆனால், எதற்கும் பயனில்லாதவை என்று சில விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால், அதை மறுத்து டான் கிரவுர் எழுதிய ஆய்வுக் கட்டுரை, ‘ஜீனோம் பயாலஜி அண்ட் எவலுஷன்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

*******
போக்குவரத்தால் ஏற்படும் காற்று மாசுபாடு, நீரிழிவு நோயை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக, ‘எர்த் சென்ஸ்’ அமைப்பு மற்றும் பிரிட்டனிலுள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘என் விரோன்மென்டல் இன்டர்நேஷனல்’ இதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வின்படி, காற்றி லுள்ள மாசுக்களை சுவாசிப்பதும், உடற் பயிற்சிகள் ஏதும் செய்யாமல் இருப்பதும், நடுத்தர வயதினருக்கு, ‘டைப் 2’ ரக நீரிழிவு நோய் வரக் கூடும். காற்று மாசுக்கள் சர்க்கரையை செறிக்க வைக்கும், ‘இன்சுலின்’ எதிர்ப்பை உடலில் உண் டாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

*******
தொழிற்சாலைக் கழிவுகளில் பல நச்சு உலோகங்கள் கலந்து வெளியேறி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன. இந்த நச்சு உலோகங் களை பிரித்தெடுக்க, வேதியல் முறைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த வேதிப் பொருட்களும் கூடுதல் தீமையை ஏற்படுத்து கின்றன. எனவே, உயிரியல் முறையில் உலோக நச்சுக்களை அகற்ற ஆய்வுகள் நடக்கின்றன. ‘அப்ளைடு மைக்ரோபயாலஜி அண்ட் பயோடெக் னாலஜி’ என்ற ஆய்விதழில் ருமேனியா மற்றும் நார்வே நாட்டு விஞ்ஞானிகள், புதிய உயிரி முறையை உருவாக்கியுள்ளனர். அடுமனைகளில் ரொட்டி தயாரிக்க உதவும், ‘ஈஸ்ட்’ நுண்ணுயிரி களை, மரபணு மாற்றம் செய்து அவர்கள் சோதித்தபோது, காட்மியம், கோபால்ட், மாங் கனீஸ் போன்ற பல நச்சு உலோகங்களை அவை, 80 சதவீதம் வரை உட்கொண்டு செரிமானம் செய்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,27.7.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக