திங்கள், 20 பிப்ரவரி, 2017

கலிலியோ-வானவியலின் தந்தை

கலிலியோ-வானவியலின் தந்தை
******************************************
மதம் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத் தான் தீர வேண்டும்.
அப்படி மண்டியிடச் செய்தவர்களுள் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலிலியோ   என்னும் விஞ்ஞானி மிக மிக முக்கியமானவர். அவரின் பிறந்த பொன்னாள் இந்நாள் 15-2-1564
வானவியலின் தந்தை என்று வருணிக்கப்படுபவர் இவர்.
அவருடைய ஆய்வுக் களம் என்பது விண்தான். வியாழன் கிரகத்தின் துணைக் கோள்களை முதலில் கண்டவர் இவர்தான். வியாழனைச் சுற்றியுள்ள துணைக் கோள்கள் வியாழனைச் சுற்றி வருவதைக் கண்டறிந்தவர்
கத்தோலிக்க தேவாலயங்கள் 1000 வருடங்களுக்கு மேலாக சூரியன் மற்றும் கோள்கள் தான் பூமியைச் சுற்றி வருகின்றன என்று கற்றுக்கொடுத்து கொண்டிருந்தன.ஆனால் பூமியையும் சூரியனையும் பிரபஞ்சத்தையும் அவதானித்து கலிலியோ ஒரு முடிவுக்கு வந்திருந்தார். பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று..
மத உலகைப் பொருத்த வரை இது ஓர் அதிர்ச்சியான தகவலாகும். பூமியைத்தான் எல்லாக் கிரகங்களும் சுற்றிக் கொண்டிருந்தன என்பது தான் மதத்தின் நம்பிக்கை.
பைபிள் கோட்பாடும்கூட! சூரியக் குடும்பமும் பூமியைத் தான் சுற்றுவதாக அன்றைக்கு இருந்த அவர்களின் அறிவு அவர்களை நம்ப வைத்தது. அதற்கு முதல் அடி கொடுத்தவர் கோபர்நிக்கஸ். சூரியனை மய்யப்படுத்திய அவரின் கண்டுபிடிப்பை வழிமொழிந்தார் புரூனோ.மதவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து - மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தாயிற்றே! கொலைகாரர்கள் கல்லால் அடித்தே கோபர் நிகசைக் கொன்றனர். புரூ னோவோ உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.அதே கருத்துகளைத் தான் கலிலியோவும் கூறினார். மதம் மருண்டது என்றாலும், உயிருக்கு ஆபத் தில்லை; மாறாக வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவரது படைப்புகளை தடுத்தனர். அங்கேயே அவர் இறந்தார். அவருக்கு மரணச் சடங்கு நடத்த தேவாலயம் அனுமதிக்கவில்லை.
360 ஆண்டுகளுக்குப் பிறகு 1992 அக்டோபர் திங்களில்  ரோமன் கத்தோலிக்க மதப்பீடம் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு தலை வணங்கியது. கணிதவல்லுநர் வானியல் விஞ்ஞானி கலிலியோ கண்டுபிடித்துச் சொன்ன கருத்து சரிதான் என்று ஒப்புக் கொண்டது. குழு ஒன்றை அமைத்து கலிலியோ சொன்னதுபற்றி ஆய்வு செய்யப் பணித்தது. ஆம், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது. கலிலியோ கண்டுபிடிப்பு சரியே என்று அவர்கள் தெரிவித்தனர். கலிலியோவுக்கு அளிக்கப் பட்ட தண்டனை தவறு என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டது கத்தோலிக்க மதப்பீடம்! (செய்தி 1992 அக்டோபர் 31)
புரூனோவைக் கொளுத்தியதுபோல கலிலியோவைக் கொல்லாமல் விட்டார்களே, அதுவே பெரிய விசயம்
அந்த மனிதனின் இறுதிக் காலம் அறிவியலின் ஆரம்பம். அறிவியலை மதங்களால் நிரந்தரமாக தடுக்க முடியவில்லை என்பது நிதர்சனம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக