வியாழன், 1 பிப்ரவரி, 2018

குளோனிங் முறையில் குரங்குகள்!


விஞ்ஞானிகள் சாதனைசீன விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டுக்குட்டி எப்படி குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டதோ, அதே முறையில் தற்போது குரங்குக்குட்டிகளை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம், மனிதனை குளோனிங் முறையில் உருவாக்கும் முயற்சியை வெற்றிகரமாக செய்ய முடியும் என்று சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள மக்காக் வகை குரங்குகளுக்கு, ஷோங், ஷோங் மற்றும் ஹுவா ஹுவா என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 6 வாரங்களுக்கு முன்பு பிறந்த இந்த இரண்டு குட்டிகளும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன. இந்த சோதனை மருத்துவத்துறையிலும் சீனாவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும் என்றும் அந்நாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

-விடுதலை, 1.2.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக