திங்கள், 29 ஜனவரி, 2018

அறிவியலுக்கு எதிர்ப்பான மத்திய அமைச்சரின் கருத்துக்கு மூவாயிரம் விஞ்ஞானிகள் கடும் கண்டனம்

பெங்களூரு, ஜன.24 மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் சத்யபால் சிங் மும்பையில் காவல்துறை ஆணையராகப் பணியாற்றியவர். அவர் அண்மையில் அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வினின்  பரிணாமக்கொள்கையைஏற் காமல்,மாறுபட்டகருத்தை தெரிவித்தார்.அமைச்சரின் கருத்துக்கு அறிவியலாளர்களிட மிருந்துகடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல்அறிஞர்கள்இணை யத்தின்வழியே எழுதிய கடி தத்தில் மத்திய அமைச்சரின் கருத்தைதிரும்பப்பெற வேண் டும் என்று கோரியுள்ளனர்.

பரிணாம வளர்ச்சிகுறித்த கருத்தைத் தவறாக கொண்டு செல்கிறார் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு ஜவகர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மய்யத்தின்பேராசிரியர்அமி தாப் ஜோஷி என்பவர் கூறிய தாவது:

“பரிணாம வளர்ச்சிக் கொள் கையை  அறிவியல் சமூகம்  நிராகரித்ததாக குறிப்பிட்டுள்ள தங்களின் கருத்து   உண் மைக்குமாறானதாகவும்,அறி வியல்அறிஞர்கள்,அறிவியல் துறையைச் சார்ந்த, அறிவியல் வழியில் செயல்பட்டுவரும் மக்களான எங்களுக்கு, மிகுந்த வலியளிப்பதாகவும் உள்ளது.

சத்யபால்சிங் கருத்து எந்த வகையில் பார்த்தாலும் தவறானதாகவே உள்ளது. உண்மையில் தர்க்கம் மற்றும் உயிரியலை மறுப்பதாக உள் ளது’’ என்றார்.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் பயிற்சி நிறுவனம், சூழியல் அறிவியல் மய்யத்தின் பேராசிரியர்  ராக வேந்திர கடாகர் கூறியதாவது:

மிகவும் தெளிவாக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படை யிலான கருத்துகளை எதிர்த் துக் கூறுவது எந்த வகையில் பயனளிக்கும்என்றுதெரிய வில்லை. 50 லட்சம் ஆண்டு களுக்கு முன்பாக மனித இனத்துக்கு நெருக்கமாக வாழ்ந்த சிம்பன்சி (மனிதக் குரங்கினம்) குறித்து அறிவியல்ரீதியிலான அனைத்துவித ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்பதிலிருந்து தொடங்கவேண்டும்.ஆகவே,அதற்கானஆதாரங் களை நம்முடைய முன்னோரிட மிருந்தும், வேதங்களிலிருந்தும் தேடவேண்டியதில்லை’’ என் றார்.

- விடுதலை நாளேடு,24.1.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக