சனி, 19 அக்டோபர், 2019

இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் மூவர் தேர்வுஸ்டாக்ஹோம், அக்.10 2019-ஆம் ஆண்டு இயற்பிய லுக்கான நோபல் பரிசுக்கு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகி யோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பவுதிக அண்டவியல் கண்டுபிடிப் புகளூக்காக ஜேம்ஸ் பீபிள்ஸ் என்ற விஞ்ஞானிக்கு நோபல் பரிசு வழங் கப்பட, மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகிய இருவருக்கும் நம் சூரியக்குடும்பத்துக்கு வெளியே சூரியனைப் போன்ற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றிவரும் கோள்கள் பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மைக்கேல் மெயர், திதியர் குவெ லோஸ் இருவரும் வானியல் ஆய்வில் புரட்சி செய்துள்ளனர். இவர்களது ஆய்வு மூலம் பால்வெளியில் நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே சுமார் 4000 கோள்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இன் னும் விசித்திர உலகங்கள், நம்ப முடி யாத அளவுகளிலும் வடிவங்களிலும் நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ளன இவையும் கண்டு பிடிப்புக் குரியவை என்பதை இவர்கள் நிரூபித் தனர். பிரபஞ்சத்தின் புதிரான தோற் றம் பற்றிய அதைவிடப் புதிரான கோட்பாடுகளின் வரலாற்றில் ஜேம்ஸ் பீபிள்ஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற் கொண்டு வரும் ஆய்வுகள் பெருவெ டிப்புக் கோட்பாடு முதல் இன்றைய கோட்பாடுகள் வரை நமது நவீனப் புரிதல்களின் அடிப்படைகளை வழங் கும் பேராய்வு ஆகும்.

அதாவது இந்த மூவரது ஆய்வும் பிரபஞ்சம் பற்றிய புரிதலையும் அதில் மனிதன், பூமியின் இடம்பற்றிய புரிதலையும் மேலும் விரிவும் ஆழமும் படுத்துவதாகும். பால்வெளி மண்டலங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் ஜேம்ஸ் பீபிள்ஸ் ஸ்வீடன் அகாடெமிக்கு அளித்த நேர்காணலில், “எவ்வளவு கண்டுபிடிப்பு மேற்கொண் டாலும் டார்க் மேட்டர், டார்க் எனெர்ஜி பற்றி நமக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இன்னும் நிறைய கேள்விகள் உள்ளது, பிரபஞ்சத்தின் இந்த ‘டார்க் மேட்டர்’ என்பது என்ன? என்ற கேள்வி இன் னமும் இருந்தே வருகிறது” என்றார்.

மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப் புள்ளதா என்ற கேள்விக்கு பீபிள்ஸ் கூறும்போது, “பூவுலகில் இருப்பது போன்ற உயிரினமா என்பது குறித்து எனக்கு அய்யமாகவே உள்ளது, ரசா£ன விஞ்ஞானிகள் அந்த அய்யத்தைப் போக்க வாய்ப்புள்ளது, அங்கு உயிரி னங்கள் இருந்தாலும் நாம் ஒருக்கா லும் அதைப் பார்க்க முடியாது என்பதே உண்மை” என்றார்.

- விடுதலை நாளேடு 10 10 19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக