புதன், 11 ஜனவரி, 2017

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது





பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடி ஆய்வில் தகவல் இதயத்துடிப்பின் வேகம் உடம்பின் அளவைப் பொறுத்து அமையும். பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது.

சுண்டெலி, மூஞ்சுறு போன்றவை மிகச் சிறிய பிராணிகள். அவற்றின் இதயம் நிமிடத்துக்கு ஆயிரம் தடவை துடிக்கிறது. திமிங்கலம் மிகப் பெரிய விலங்கு. அதன் இதயம் நிமிடத்துக்கு 5 முறைதான் துடிக்கிறது. வயது வந்த ஒரு ஆணின் இதயத்தின் எடை 284 கிராமில் இருந்து 430 கிராம் வரை இருக்கும். வயதுக்கு வந்த பெண்ணின் இதயம் 227 கிராமில் இருந்து 340 கிராம் வரை இருக்கும்.

குளிர் காலத்தை விட கோடை காலத்தில் இதயத்துடிப்பு அதிகம் காணப்படும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனில் 70 சதவிகிதத்தைத் தான் உபயோகத்துக்கு இதயம் எடுத்துக் கொள்கிறது. இதயம் துடிப்பதற்கு இவ்வளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பொதுவாகவே ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கிறது.

சாதாரண மனிதனின் இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக் கிறது. ஒரு மணி நேரத்துக்கு 1,03,680 தடவை துடிக்கிறது. இதுவே ஒரு ஆண்டு என்று எடுத்துக் கொண்டால் 37 கோடியே 83 லட்சத்து 120 தடவை துடிக்கும்.

இதயத் துடிப்பு சாதாரணமாக காலையில் குறைவாக இருக்கும். பிற்பகலில் அதிகரிக்கும்.

100 மில்லி ரத்தத்தில் 20 முதல் 45 மில்லி கிராம் புரதமும், 50 முதல் 80 கிராம் வரை குளுகோசும், 700 முதல் 750 மில்லி கிராம் வரை குளோரைடுகளும் உள்ளன. ஒரு ஆணின் ரத்தம் ஒரு கன மில்லி மீட்டரில் 4.5 6.5 மில்லியன் சிவப்பு அணுக்கள் கொண்டதாக உள்ளது. அதே அளவு கொண்ட பெண்ணின் ரத்தத்தில் 4.05.5 மில்லியன் சிவப்பு அணுக்களே இருக்கின்றன.

ஹீமோகுளோபினை எடுத்துக் கொண்டால் ஆணின் ரத்தத்தில் 13.5 முதல் 18.0 வரை உள்ளது.

பெண்ணின் ரத்தத்தில் 11.5 முதல் 16.5 வரையே உள்ளது. பொதுவாக மனித ரத்தத்தில் 100 மில்லியன் லிட்டர் அளவில் 125300 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. 1740 மில்லி கிராம் யூரியா உள்ளது. 14.5 மில்லி கிராம் யூரிக் அமிலம் உள்ளது.

-விடுதலை,17.7.!4

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக