வியாழன், 12 ஜனவரி, 2017

உயிரினங்களின் இறுதிப் பொது மூதாதையின் வரைபடம்



ஜெர்மனியைச் சேர்ந்த உயிரி -வேதியியலாளர் பில் மார்ட்டின் உயிரினங்களின் இறு திப் பொது மூதாதையின் கிளை-வரை படத்தை வெளியிட்டிருக் கிறார்.

ஒரு செல் உயிரினங்களின் டி.என்.ஏ.க்களையெல்லாம் ஆராய்ந்து அவற்றின் அடிப் படையில் இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்.

புவியில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் ஒரு பொது மூதாதை உண்டு என்ற கருத்து அறிவியல் உலகில் நிலவுகிறது. எந்தக் கட்டத்தில் அந்தப் பொது மூதாதையிலிருந்து உயிர்கள் வெவ்வேறு வடிவில் கிளைத்தன என்பது குறித்த தேடல்தான் இது.

இந்தப் பொது மூதாதை நாம் கண்ணால் காணக் கூடிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பாக்டீரியா அளவில்தான் இருந்திருக்கும் என்பது இந்தக் கிளை வரைபடத்தில் தெரியவருகிறது.

உயிர்களின் தொட்டிலான கடல்களில் அப்போது நிலவிய மிக அசாதாரணமான சூழலில் அவை எப்படி வாழ்ந்திருக்கும் என்பது குறித்தும் பில் மார்ட்டின் விளக்கி யிருக்கிறார்.

-விடுதலை,12.1.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக