வியாழன், 5 ஜனவரி, 2017

அறிவியல் 2016: ஒன்பதாவது கோளுக்கான ஆதாரங்கள்


கோள் என்ற தகுதியை புளூட்டோ இழந்த பிறகு சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோள் என்ற தகுதி வெற்றிடமாக இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய சாத்தியங்கள் கொண்ட கோள் ஒன்று குறித்த ஆதாரங்களை தொழில்நுட்பத்துக்கான கலிஃ போர்னியா மய்யத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் வெளியிட் டார்கள்.

புதிதாக உத்தேசிக்கப்பட்ட கோளின் சுற்றுவட்டப் பாதை சூரியனிலிருந்து சுமார் 2,000 கோடி மைல் தொலைவில் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

உச்சபட்ச தொலைவாக 10,000 கோடி மைல்கள் தூரத்தில் சூரியனி லிருந்து அந்தக் கோள் இருக்கலாம் என்றும் கணித்திருக்கிறார்கள். பூமியைவிடச் சற்றுப் பெரியதாக அந்தக் கோள் இருக்குமாம். அந்தக் கோளைத் தொலைநோக்கியில் பார்க்கவில்லை என்றாலும் அந்தக் கோள் இருக்கக்கூடிய சூரியக் குடும்பப் பகுதியில் காணப்படும் அறிகுறிகளைக் கொண்டு இந்த ஊகங்களை மேற்கொண்டிருக் கிறார்கள். உறுதிப்படுத்தப்படும்போது புளூட்டோ முன்பு வகித்துவந்த பதவியை இந்தக் கோள் ஏற்றுக்கொள்ளும்.

இந்திய சாதனை!

இந்திய அறிவியல் துறை பெருமைப்பட்டுக்கொள்ளும் சில விஷயங்களும் இந்த ஆண்டில் நிகழ்ந்தன. ஒரே சமயத்தில் எட்டு விண்கலங்களைச் செலுத்தி அவற்றை அவற்றின் சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்தியிருக்கிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் விண்கலங்களும் இவற்றுள் அடங்கும். எட்டு விண் கலங்களில் எஸ்.சி.ஏ.டி.எஸ்.ஏ.டி-1 என்ற விண்கலம் கடல்களையும் வானிலையையும் ஆராய்வதற்காக அனுப்பப்பட்டது.

கரியமில வாயுவின் 
சுமை எல்லை மீறியது!

வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயுவின் அளவு புது உச்சத்தை எட்டியிருக்கிறது. வானிலை அறிவியலில் 30 ஆண்டுகள் என்பது தரவுகளுக்கான கால எல்லையாகக் கருதப்படுகிறது. இப்படி ஒவ்வொரு முப்பதாண்டுகளிலும் எடுக்கப்பட்ட அளவீடுகளை தற்போது ஒப்பிட்டிருக்கிறார்கள். 1896இல் வளிமண்டலத்தில் பத்து லட்சம் துகள்களுக்கு 295 பங்கு என்ற அளவில் கரியமில வாயு இருந்தது. இந்த ஆண்டில் பத்து லட்சம் துகள்களுக்கு 400 என்ற அளவை எட்டியிருக்கிறது. அதிலும், கடந்த ஆண்டுகளைவிட 2016-ல்தான் கரியமில வாயு அதிக அளவில் வளிமண்டலத்தில் சேர்ந் திருக்கிறது. புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றால் பூமி அசாதாரணமான பாதிப்புகளைக் கண்டுவரும் நிலையில், இந்தத் தரவு நம்மை மேலும் அச்சுறுத்துகிறது.
-விடுதலை,5.1.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக