ஞாயிறு, 1 ஜனவரி, 2017

மனித எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டும் செயற்கைத் திசு கண்டுபிடிப்பு


மனித எலும்புகளைப் போலவே புதிய எலும்புகளை உருவாக்கக்கூடிய ஒரு செயற்கைத் திசுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மனித எலும்புகளைப் போலவே புதிய எலும்புகளை உருவாக்கக்கூடிய ஒரு செயற்கைத் திசுவை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியின் தலைமை யிலான, அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.

இந்தத் திசுவை ஒரு மனிதனின் உடலில் தேவைப்படும் இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்திவிடுவதன் மூலம், ஓரிரு வாரங்களின் பின், அந்தத் திசு, குறித்த எலும்பை வளரச் செய்யும்படி உடலைத் தூண்டுகிறது.

இதன்மூலம், எலும்பு முறிவு சிகிச்சைகள், எலும்பு மாற்று சிகிச்சைகள் என்பனவற்றின் போது, பொருத்தப்படும் எலும்புகள் வளர்ந்து, இறுகப் பொருந்திக்கொள்ளும்படி செய்ய முடியும்.

போரினால் அல்லது பிறவியிலேயே கடும் எலும்புப் பாதிப்புகளுக்கு உள்ளானவர் களுக்கு, இந்தத் திசுவைக் கொண்டு, அவர் களால் எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவுக்கு குணமளிக்க முடியும் என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.

இந்தத் திசுவில், `பிளேட்லட்'டுகளில் இருந்து பெறப்படும் எலும்பு வளர்ச்சிக்கு மிக அவசியமான பிடிஜிஎஃப் எனப்படும் வளர்ச்சிக் காரணிகளும், எலும்பின் தோற்றத்தை மாற்றக்கூடிய புரதச்சத்துக்களும் அடங்கும்.

இவ்விரு காரணிகளும் ஒவ்வொன்றும் நாற்பது மெல்லிய படிவங்களாக, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு, 0.1 மில்லிமீட்டர் கனமுள்ள ஒரே படிவமாக மாற்றப்பட்டு, தேவைப்படும் எலும்புப் பகுதியில் பொருத் தப்படும்.

இதனால், அந்த எலும்பு வேகமாக வளரத் தொடங்குகிறது. இதனால், எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பின்னான இரண்டு வாரங்களில், வழக்கத் திலும் பார்க்க வேகமாக வளர்ந்து, குறுகிய காலத்திற்குள் எலும்புகள் பொருந்தி விடு கின்றன என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-விடுதலை,4.9.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக