வெள்ளி, 13 மே, 2016

வோல்ட் (மின்சாரம்) பெயர் எப்படி வந்தது?



மின்சாரத்தின் பயன்பாட்டில் குறியீடாக உள்ள வோல்ட் என்ற பதம் அலெசான்ரா வோல்ட்டா என்ப வரின் நினைவாக வைக்கப்பட்டது.   இத்தாலி நாட்டில்  1745-ஆம் ஆண்டு இதே நாளில் படகோட்டியின் மகனாகப் பிறந்தார். நகரத்தின் வெளியே இருந்ததால், அடிக்கடி மின்னும் மின்னல் இவரை மிகவும் ஈர்த்தது. சிறுவயதில் இருந்தே மின்னல் மின்சாரம் குறித்து ஆராய்வதில் பேரார்வம் கொண்டிருந்தார்.
இதன் விளைவாக மின்சாரம் என்ற ஒன்று உருவாவதற்கு முன்னோடியாக இருந்த அறிவியல் அறிஞர்களுள் இவர் முதன்மையானவர். இவருடைய காலகட்டத்தில் அய்ரோப் பாவில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், அது பொழுதுபோக் கிற்காகவும், தனிப்பட்ட மனிதர்களின் பயன்பாட்டிற்கு மாத்திரமே இருந்தது.
மின்சாரத்தை பயன்படுத்தும் முறையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அலக்சாண்ட்ரா அனைவரும் இதை பயன்படுத்தவேண்டும் என்ற பேரவா இவருக்கு இருந்தது.  இந்த ஆவல் இவரை மின்கலன்(பேட்டரி) கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தது.  மின்கலன் கண்டறியும் போது மின்கலனை அளவிடும் வோல்டா மீட்டரையும் கண்டுபிடித்தார்.
மின்சாரம் பற்றிய ஆய்வுத்தூண்டல் காரணமாக பல்வேறு தனிமங்களில் இருந்துமின்சாரம் எடுக்கும் முறையைக் உலகுக்கு எடுத்துக்காட்டினார். தனிமங்களை ஆய்வு செய்யும் போது தான் இவர் மீத்தேன் என்னும் வாயுவையும் கண்டுபிடித்தார். இவரது குடும்பம் முழுவதுமே பழமைவாத கிறிஸ்தவ மதப்பிரிவைச்சேர்ந்தவர்கள்.
சூரியன் மறைந்த பிறகு சமைப்பதோ, விளக்கு பற்றவைப்பதோ, கூடிப்பேசுவதோ பழமைவாத கிறிஸ்தவ முறையில் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட  குடும்பத்தில் பிறந்த இவர் இரவைப் பகலாக்கும் மின்சாரத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் மின்கலம்(பேட்டரி) கண்டறிந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய 82-ஆவது வயதில் மே மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார்.
-விடுதலை ஞா.ம.,21.2.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக