ஞாயிறு, 29 மே, 2016

தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு


தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு
இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பு
இந்திய உயிரியல் வல்லுநரான சோகினி சக்ரவர்த்தி, சமீபத்தில் ஒரு மாபெரும் தாவரவியல் புதிருக்கு விடை கண்டுபிடித்திருக்கிறார்.
தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு என்பதுதான் அவரது அசத்தல் கண்டுபிடிப்பு. பலவகையான கடுகு செடிகளில் உள்ள 20,000 புரதங்களின் தகவல் தொகுப்பை மூன்று வருடங்கள் ஆராய்ந்த சோகினி, தாவர புரதங்களில் ஒரு சில மட்டும் ‘பிரையான்’ என்ற புரதங்களைப் போல இயங்குவதை கவனித்தார். பொதுவாக பிரையான் புரதங்கள், ஈஸ்ட், பூச்சிகள், பாலூட்டிகளின் உடலில் இருக்கும். இவை அவற்றின் நினைவாற்றலுக்கு உதவக்கூடியவை.
ஆனால், தாவரங்களில் பிரையான் போன்ற தன்மையுள்ள புரதங்கள் இருப்பது சோகினியின் ஆய்வு மூலமே உலகுக்கு தெரிய வந்துள்ளது. எப்படி பருவம் வந்ததும் செடிகள் பூக்கின்றன; வெயில், மழை, குளிர், பனி என்று வெளிப்புற தட்ப வெப்பத்தை உணர்ந்து, அவற்றை தாங்கிக்கொள்ளும் விதத்தில் எப்படி தாவரங்கள் தங்கள் உள் பாகங்களில் மாறுதல் செய்கின்றன? இதுபோல, தாவரவியலில் பல ஆண்டுகளாக விடை காண முடியாத கேள்விகளுக்கு சோகினி முகர்ஜியின் கண்டுபிடிப்பு, பதிலை கண்டடைய உதவும்.
தாவரங்கள் சுற்றுச்சூழலை உணர்ந்து தகவல்களை சேகரித்து நீண்டகால நினைவுத்தொகுப்பில் வைத்திருந் தால்தான் அவை, சூழ்நிலைக்கேற்றவாறு தங்களை தகவ வமைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் தாவரவியல் வல்லுநர்கள்.
பிரையான் புரதங்கள் தங்களை புதுப்பித்தபடியே இருக்கவும், அவை ஒரு நினைவுத் தொகுப்பாக வளரவும் கூடியவை. டில்லி பல்கலைக்கழகத்தில் தாவரவியல் படித்த கினி, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காக சென்றார்.
பிறகு, அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிலையத்தின் உயிரி மருத்துவ மய்யத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.
-விடுதலை,28.4.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக