திங்கள், 30 மே, 2016

நுண் ஈர்ப்பு விசை


விண்வெளியில், புவி ஈர்ப்பு சக்தி இல்லை என்பது தவறான கருத்து. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பருப்பொருட்களுக்கும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் சக்தி உண்டு. அதிக எடை உள்ள பொருளுக்கு, அதிக ஈர்ப்பு சக்தி உண்டு. பூமி மிகப் பெரிய பொருள்; அதன் ஈர்ப்பு சக்தி பல ஆயிரம் கி.மீ.,க்கள் வரை இருக்கத்தான் செய்கிறது.
பூமியிலிருந்து தூரமாக செல்லச் செல்ல, அதன் ஈர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகுமே தவிர, ஈர்ப்பு விசையே இல்லாமல் போய்விடாது. அதனால் தான் விஞ்ஞானிகள், பூஜ்ஜிய ஈர்ப்பு விசை - ‘ஜீரோ கிரேவிட்டி’ என்பதற்கு பதிலாக, நுண் ஈர்ப்பு விசை - ‘மைக்ரோ கிரேவிட்டி’ என்று சொல்கின்றனர். பூமியிலிருந்து, 400 கி.மீ., தொலைவில் சுற்றிவரும், சர்வதேச விண்வெளி நிலையத்தை, 90 சதவீத புவி ஈர்ப்பு விசை எட்டவே செய்கிறது. ஆனால், அந்த நிலையம் மணிக்கு, 27,600 கி.மீ., வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது.
இதனால் தான் அதனுள் இருக்கும் விண்வெளி ஆய்வாளர்கள் மிதக்கின்றனர்; புவி ஈர்ப்பு விசை இல்லாததால் அல்ல. விண் கற்களும் அப்படித்தான், பிற கோள்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு பயணிக்கின்றன. அப்படி பயணிக்கையில் பூமியின் ஈர்ப்பு விசை வலுவாக உள்ள பகுதிக்கு வரும்போது, அவை வேகமாக பூமியின் வளி மண்டலத்திற்குள் அதிவேகமாக நுழைகின்றன.
சில கிராம்களே எடை கொண்ட ஒரு விண் கல், மணிக்கு, 10 முதல் 70 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்.
அப்போது வளி மண்டல உராய்வினால், அதன் மேற்பரப்பு தீப்பிடித்து எரியும். இதை இரவு நேரத்தில் பார்க்கும்போது, வால் நட்சத்திரம் நகர்வது போலத் தெரியும்.
இப்படி எரிந்து மிஞ்சிய விண்கல்தான், பூமி மீது அதி வேகமாக மோதுகிறது.
-விடுதலை,11.2.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக