திங்கள், 30 மே, 2016

மனித வரலாறு முழுவதையும் பதிய ‘5டி’ நினைவு வட்டு


இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 360 டெராபைட்டுக்கும் அதிகமான தகவல்களை பதிவு செய்யும் நினைவு வட்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இதில், 360 டெராபைட்டுக்கும் அதிகமான தகவல்களை, லேசர் ஒளிக்கற்றை மூலம் பதிவு செய்யலாம். நேனோ படிக கண்ணாடியால் ஆன இந்த கையடக்க வட்டு, அறை வெப்ப நிலையிலேயே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அழியாமல் நீடிக்கும் என்கிறார், இதை உருவாக்கிய, குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் காசான்ஸ்கி. இதை, 190 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைத்திருந்தாலும், 13.8 பில்லியன் ஆண்டுகள் வரை அழியாமல் தகவல்களை பத்திரமாக வைத்திருக்கும் என்கிறார் அவர்.
கல்வெட்டு, உலோக தகடுகள் என்று மனிதன், தன் வரலாற்றை பிற்கால சந்ததியருக்கு பதிந்து வைக்க பல தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறான். அதில் மிகவும் சிறந்ததாக இந்த, ‘5டி’ வட்டு இருக்கும் என்கிறார் காசான்ஸ்கி. உலகின் எல்லா மனிதர்களை பற்றிய தகவல்களையும் இதில் பதிய முடியும் என்பதால், மனித வரலாறு முழுவதும் பிற்கால மக்களுக்கு துல்லியமாக போய் சேர இந்த ஊடகம் உதவும்.
கடந்த, 2013இல் சோதனை அளவில் உருவான, 5டி வட்டில், நியூட்டனின் நூலான, ‘ஆப்டிக்ஸ்’, அமெரிக்க மனித உரிமை பிரகடனம், கிங் ஜேம்சின் பைபிள் போன்றவை சோதனைக்காக பதியப்பட்டன.
அதிவேக லேசர் கதிர் மூலம் தகவல்கள் இதில் நிரந்தரமாக பதியப்படுவதுடன், இதை படிக்கவும் ஒரு சிறிய லேசர் சாதனம் தேவைப்படும்.

வீட்டிலேயே பொம்மை செய்ய ‘3டி’ பிரிண்டர்!
குழந்தைகளுக்கு பொம்மை தயாரிக்கும் நிறுவனம் ‘மேட்டல்.’ இது விரைவில், 20 ஆயிரத்து, 600 ரூபாய் விலையில் சிறுவர்களுக்கான முப்பரிமாண அச்சியந்திரத்தை - 3டி பிரின்டர்- அறிவித்துள்ளது.
‘திங் மேக்கர்’ என்ற அந்த இயந்திரத்தையும், அதனுடன் வரும் செயலியையும் வைத்து சிறுவர், சிறுமியர் வீட்டிலேயே தங்களுக்கு விருப்பமான பொம்மைகளை வடிவமைத்து, அச்சிட்டுக் கொள்ள முடியும்.
முப்பரிமாண மென்பொருள் உலகில் பிஸ்தாவான, ‘ஆடோடெஸ்க்‘குடன் கூட்டாக மேட்டல், பல நூறு பொம்மைகளுக்கான மென்பொருட்களையும் இதனுடன் வெளியிடுகிறது. கூடவே, அவற்றை அச்சிடுவதற்கான பல வண்ண பிளாஸ்டிக் இழைகளையும் விற்கிறது.
மொபைல் அல்லது டேப்லெட்டுடன் ஒயர்லெஸ் மூலம் திங்மேக்கரை இணைத்த பின், சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த பொம்மை அல்லது அணிகலனை தேர்ந்தெடுத்து அச்சிடலாம் அல்லது, தங்கள் கற்பனையை பயன்படுத்தி புதிய பொம்மை அல்லது, பொருளை வடிவமைத்து உருவாக்கலாம்.
பிளாஸ்டிக் ஒயர்களை உருக்கி பொம்மைகள் செய்யப் படுவதால், வேலை நடக்கும்போது சிறுவர்கள் பிரின்டரை திறந்துவிடாமல் இருக்க, பாதுகாப்பு பூட்டுகள் திங்மேக்கரில் உண்டு.
நினைத்துப் பாருங்கள்... தங்கச்சிக்கு புதிய காதணி, சக பசங்களுடன் விளையாட டைனோசர் பொம்மைகளை வீட்டிலேயே அச்சிட்டு எடுப்பது, எவ்வளவு திரில்லான அனுபவமாக இருக்கும்!


கேமராவை இலகுவாக்கும்
தட்டை லென்ஸ்!

நமக்கு லென்ஸ் என்றா லே ஒன்று மேடாக அல்லது குழியாக இருக்க வேண்டும். ஆனால், அமெ ரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், காகிதத்தைப் போல மெல்லிய, தட்டை யான லென்சை உருவாக்கியுள்ளனர்.
வழக்கமாக தட்டையான கண்ணாடி ஒளி, வண்ணங்கள் மற்றும் உருவங்களை சிதறடித்துவிடும். ஆனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் மேனன் தலைமையிலான ஆய்வுக்குழு உருவாக்கிய தட்டை லென்ஸ், ஒளியை துல்லியமாக குவியச் செய்கிறது.
இந்த லென்சை உருவாக்க சிறப்பான பொருட்கள் எதுவும் தேவையில்லை என்கிறார் ராஜேஷ். “வழக்கமான கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கே போதும்.
இதை தயாரிப்பதற்கும் சிறப்பான உற்பத்தி ஆலைகளை உருவாக்க தேவையில்லை, என்கிறார் அவர். இன்னும், இரண்டு அல்லது, மூன்று ஆண்டுகளில் ராஜேஷ் குழுவி னரின் கண்டுபிடிப்பு சந்தைக்கு வரும்.
அப்போது, சோடா புட்டி கண்ணாடிகள், கனமான கேமரா லென்ஸ்கள் பழைய கதையாகிவிடும். கேமரா உள்ள மொபைல்களும் கடன் அட்டை சைசுக்கு வர ஆரம்பித்து விடும்.
-விடுதலை,18.2.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக