திங்கள், 30 மே, 2016

மதத்துக்கும் சோதிடத்துக்கும் மரண அடி புதிய பூமி கண்டுபிடிப்பு


லாஸ்ஏஞ்சல்ஸ், மே29- மனிதர்கள் வாழ வாய்ப் புள்ள புதிய பூமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது நமது பூமியிலிருந்து 1200 ஒளி ஆண்டு (60 லட்சம் கோடி மைல் ஓர் ஒளியாண்டாகும்)தூரத்தில் உள்ளது.

பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா வின் நாசா விண்வெளி ஆய்வு மய்யம் கடந்த 2009-ஆம் ஆண்டில் கெப்ளர் என்ற விண் கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்ட இந்த விண்கலம் பூமியில் இருந்து 150 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றி வருகிறது. இதுவரை 2300-க்கும் மேற்பட்ட கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்துள்ளது. அந்த வரிசையில் பூமியில் இருந்து 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் புதிய பூமியை கெப்ளர் கண்டறிந்துள்ளது.

அந்த கிரகத்துக்கு கெப்ளர்-62.எப் என்று நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட 1.4 மடங்கு பெரிதாக உள்ளது. பூமியில் 0.04 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது. இதே போல கெப்ளர் 62.எப் கிரகத்திலும் கார்பைன் டை ஆக்ஸைடு இருப்பதாக கருதப்படுகிறது.  அந்த கிரகத்தில் பாறை களும் கடல்களும் இருக்கக்கூடும். அங்கு தண்ணிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே நிச்சய மாக அங்கு மனிதன் உயிர் வாழ முடியும் என்றுணீ விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.
கெப்ளர் 62.எப் கிரகமும் இதர 4 கிரகங்களும் சூரியனைப் போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அந்த பெரிய நட்சத்திரம் சூரியனைவிட சிறியதாகவும் வெப்பம் குறைந்ததாகவும் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பூமியை போன்ற சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட் டாலும் தற்போது அடையாளம் காணப் பட்டுள்ள கெப்ளர் 62எப் மிகுந்த நம்பிக் கையளிப்பதாக உள் ளது. எனவே அந்த கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் ‘சூப்பர் பூமி என்று செல்லமாக அழைக்கின்றனர். புதிய பூமி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.
-விடுதலை,29.5.16.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக