ஞாயிறு, 29 மே, 2016

பொருட்களின் நான்காம் நிலை கண்டுபிடிப்பு

பொருட்களின் நான்காம் நிலை கண்டுபிடிப்பு    
உலகில் பொருட்கள் மூன்று நிலைகளுன் ஒன்றாகத்தான் இருக்க முடியும். திரவம், திடம், வாயு. இது பள்ளிக்கூடத்துப் பாடம். இது விரைவில் நான்காக அதிகரிக்கக் கூடும். நீர் மூலக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள், தற்செயலாக இந்த மூன்று நிலைகளையும் சாராத ஒரு புதிய நிலையில் உள்ள பொருளைக் கண்டனர்.
இந்த புதிய நிலைக்கு அமெரிக்காவின் ஆற்றல் துறையை சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வக விஞ்ஞானிகள், ‘குவாண்டம் சுழல் திரவம்‘ என்று பெயரிட்டுள்ளனர்.  நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்தே சில பொருட்கள், ‘நான்காம் நிலை’யில் இருப்பது பற்றி அவ்வப்போது பேச்சு அடிபட்டு வந்தது. குறிப்பாக சில வகை காந்தங்களில் இந்த நிலை இருப்பதாக சொல்லப்பட்டது.
குவாண்டம் இயற்பியலின்படி நீரில் உள்ள இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும், ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இதுவரை காணாத வடிவத்துடனும், தன்மையுடனும் ஆய்வுக்கூடத்தில் செயல்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், ஆய்வுக் கட்டுரை மூலம் அந்த நான்காம் நிலையை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை. இந்த ஆய்வு முடிவுகள், ‘பிசிகல் ரிவ்யூ ஆப் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.
-விடுதலை,28.4.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக