சனி, 24 ஆகஸ்ட், 2019

இயற்கையின் நிர்பந்தத்தை ஏற்று உயிரினமும் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது (படிமவளர்ச்சி) - 11

தோழர்களே விலங்கியல் குறித்த 11ம்பதிவு


எப்போதும் மாறி வரும் இந்த பூமி அதன் மாற்றங்களுடன் சேர்ந்து அதை சார்ந்து வாழும் உயிரினங்களையும் அதனுடன் சேர்ந்து மாற நிர்பந்திக்கிறது
இந்த இயற்கையின் நிர்பந்தத்தை ஏற்று உயிரினமும் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது
இதன் அடிப்படையில் பரிணாம மாற்றம் என்பது ஒரு விட்டு விட்டு தாவிச்செல்லும் ஒரு தொடர் நிகழ்வாகும்
நாம் ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளின் போக்கை பார்த்து பரிணாம விதியை கேள்வி எழுப்புகிறோம்
ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள புலிகளோ சிங்கங்களோ யானைகளோ இன்று இல்லை இன்று இருக்கும் சிங்கம் புலி யானை இவை எல்லாம் இந்த பத்தாயிரம் ஆண்டுகளில் பரிமாண வளர்ச்சி அடைந்தவை.
பெரும் தந்தங்களையும், சடைமுடிகளையும் கொண்ட பிரமாண்டமான மாமதம் எனும் யானைகள் இன்று ஒன்று கூட இல்லை இவை பனியுகத்தின் குளிரை தாங்கும் திறன் பெற்றவையாக இருந்தன
பூமியின் வெப்பம் அதிகரித்ததும் முடிகளை உதிர்த்து விட்டு வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட புதியவகை யானைக்கூட்டங்கள் தோன்றின
மயிரடந்த கால்நடைகளும் இன்று இல்லை பெரும் வால் பற்களை கொண்ட புலி சிங்கங்களும் இல்லை இவற்றின் இடத்தை சிறிய வலிமையான கோரைப்பற்களை உடைய வலிமையும் வேகமும் கொண்ட இன்றைய சிங்கம் புலிகள் பிடித்துக்கொண்டன
மனிதனும் இப்பத்தாயிரம் ஆண்டுகளில் படிப்படியாக தனது மிருக குணத்தில் இருந்தும் உடல் அமைப்புகளிலும் மிகவும் மாறி வருகிறான்
மனிதனின் உடல் எங்கும் பரவிக்காணப்படும் மயிரடர்த்தி இன்று குறைந்து விட்டது நிழலிலும் பாதுகாப்பான அறைகளிலும் இருக்கும் மனிதன் பளப்பளப்பான உடலை பெற்று வருகிறான்
ஆரோக்கியமான உணவையும் அதிக இறைச்சியையும் உண்ணும் மேற்கு ஐரோபியர்கள் நல்ல உயரத்தையும் வலிமையான பளபளப்பான உடலையும் பெற்று இருக்கிறார்கள்
இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் ,தென் அமெரிக்கர்கள் ஆகிய மக்களில் பெரும்பாண்மையினர் இன்னும் ஆரோக்கியமான வாழ்வை பெறாத காரணத்தால் உருவில் சிறுத்தும் பளிச்சென்றதோற்றத்தை பெறாமலும் இருக்கிறார்கள்
இந்த பின் தங்கிய நிலப்பகுதிகளில் சமூகம் சீரான வளர்ச்சி அடையாத காரணத்தால் சாதி மத இனக்குழுக்களின் பின் தங்கிய ஆதிக்கம் காணப்படுகிறது
நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் மீண்டும் மீண்டும் நடக்கும் திருமணங்கள் ,பரம்பரை நோய்களை மீண்டும் மீண்டும் உயிர்பிக்கின்றன அதிகரிக்கின்றன பரவலாக்குகின்றன
அதேவேளை நாம் ஆரோக்கியமற்ற சந்ததிகளை உருவாக்கி வருகிறோம் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் நெருங்கிய ரத்த உறவு மணங்களை புறக்கணித்து விட்டதால் அவர்கள் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குகிறார்கள்
இந்தியா போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் ஒரு உயிர் கொல்லி நோயாக பரவி வருகிறது சர்க்கரை ,ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் இல்லாத குடும்பம் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை
இவை எல்லாம் பரிணாம வளர்ச்சியில் நாம் ஒரு தற்காலிக தேக்கத்தை அடைந்து இருப்பதை காட்டுகிறது
பரிணாம வளர்ச்சியில் இயற்கை தேர்வு மட்டும் அல்ல குழுக்களின் மக்கள் கூட்டங்களின் சமூக செயல்பாடுகளும் தலையிடுகின்றன என்று கடந்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்
யாரெல்லாம் தமது ரத்த உறவுகளின் எல்லைகளை தாண்டி தமது சந்ததிகளை உருவாக்குகிறார்களோ அவர்கள் பரிணாம வளர்ச்சியின் சாதகமான அம்சங்களை உள்வாங்கிக்கொள்கிறார்கள்
மற்றவர்கள் தேங்கி தம் சந்ததிகளை வாழத்தகுதி அற்றவர்களாக மாற்றுகிறார்கள்
இதில் இயற்கை யாரை தேர்வு செய்யும்பரந்த மரபியல் பண்புகளை பெற்றவர்களே வாழும் திறனை பெற்றவர்களாவும் தனிமைப்படுத்திக்கொள்பவர்கள் வாழும் தகுதியை இழப்பவர்களாகவும் மாறுகிறார்கள்
எனவே நமது பரம்பரை மரபியல் நோய்களை ஒழித்து நமது மரபை வாழும் தகுதியுள்ளதாக மாற்ற வேண்டுமானால் சாதி மறுப்பு திருமணங்கள் இன்று தேவையான ஒன்று சாதியை உடைப்பதும் அதை அழிப்பதும் நம் வாழும் திறனைஅதிகரிக்கும் உறுதி செய்யும்
தொடரும்
- ஆர் .சந்திரசேகரன் ஆர். சந்திரசேகரன் முகநூல் பதிவு, 24.8.19
No photo description available.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

நாம் வாழும் இந்த ஏழு கண்டங்களும் நிலையானதாக எப்போதும் இருந்தது இல்லை (படிமவளர்ச்சி) -10

தோழர்களே விலங்கியல் குறித்த 10வது பதிவு


நாம் வாழும் இந்த ஏழு கண்டங்களும் நிலையானதாக எப்போதும் இருந்தது இல்லை
புவியின் மையத்தில் உள்ள வெப்ப அழுத்தத்தால் பூமியின் கண்டத்திட்டுக்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்
இந்த மாற்றம் தான் கடல்களின் நடுவில் பெரும் தீவுகளை உருவாக்குகின்றன
கண்டங்களை பிரிப்பதும் ஒன்று சேர்ப்பதும் எரிமலை வெடிப்பதும் பூகம்பம் ஏற்படுவதும் சுனாமி பேரலைகள் உருவாவதும் இக்கண்ட திட்டுக்கள் நகர்வதாலும் ஒன்றுடன் ஒன்று மோதுவதாலும் ஏற்படும் விளைவுகளாகும்
இவை பல நேரங்களில் நமக்கும் உயிரினத்துக்கும் மாபெரும் இழப்புகளை உருவாக்கி இருக்கலாம் ஆனால் பூமியின் இச்செயல் இல்லை என்றால் நிலவைப்போல் பூமியும் இறந்து விட்டதாகவே பொருள்
பூமியின் இந்த மறு சுழற்சிதான் பூமியை உயிருடன் வைத்து இருக்கிறது இந்த சுழற்சி முறைதான் பூமியின் தாவரங்களும் விலங்குகளும் பரிணாம வளர்ச்சியில் சிறந்து விளங்க அடிப்படை காரணமாகும்
பூமியின் இம்மறு சுழற்சி கடலில் நிலப்பரப்புகளையும் நிலப்பரப்புகளில் கடலையும் பாலைவனங்களையும் உருவாக்குகிறது பூமியின் இந்த போக்குதான் தீவுகள் உருவாகவும் மலைகளும் சிகரங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாக காரணமாகும்
இந்த பூமி இதுவரை கணக்கற்ற கண்ட வடிவங்களை அடைந்து இருக்கிறது
அப்படி உருவான ஒரு பெரும் கண்டம் தான் பான்ஞ்சியா கண்டமாகும் இக்கண்டத்தில் பூமியில் இன்று உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இருந்த காலமாகும்
இது உருவானது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இக்காலத்தில் தான் பூமியின் மாபெரும் பல்லிகளான டைனோசர்கள் உருவான காலம்
இக்கண்டம் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகி 17 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பிரிய ஆரம்பித்தது
இக்கண்டத்தில் இந்திய துணைக்கண்டம் என்பது இதன் மையத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் மையத்தில் ஆப்பு போல் இணைந்து இருந்தது
இதில் இன்று இமயமலை இருக்கும் பகுதிகள் கடலால் சூழப்பட்டும் இன்று கடலால் அரபிக்கடல் வங்காள விரிகுடா இருக்கும் பகுதிகள் நிலத்தால் சூழப்பட்டும் இருந்தது
இன்று இமயமலை பகுதிகளை ஆய்வு செய்தால் அதன் ஆழத்தில் பூமியில் ஆரம்பகாலத்தில் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கடல்வாழ் உயிரினங்களும் , அதற்கு அடுத்த நிலையில் இருவாழ்விகளும் சமவெளிகளில் வாழ்ந்த குதிரைகளின் பாசில்களும் கிடைக்கிறது
இந்த துணைக்கண்டத்தின் தெற்கு பகுதியில் பாலூட்டிகளின் பாசில்கள் கிடைக்கிறது
இதன் மையத்திலும் அதாவது மகாராஸ்டிரா ,ராஜஸ்தான் குஜராத், தமிழகம் போன்ற பகுதிகளில் டைனோசர்களின் பாசில்கள் கிடைக்கிறது
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் டினோசர்களின்பெரும் நிலக்கூடுகளும் அதன் முட்டைகளும் மிகப்பெரிய அளவிலான புதைபடிவ பொருட்களாக கிடைத்துள்ளன
இப்படி ஒரு சிறப்புக்குரிய இந்திய துணைக்கண்டம் சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் முற்றிலுமாக பாஞ்சியா கண்டத்தில் இருந்து விலகி வடக்கு நோக்கி நகர ஆரம்பித்து யுரேசிய கண்டத்திட்டுடன் இணைந்தது இந்த இணைவால் உருவான மடிப்பு மலையே இமைய மலையாகும்
இந்திய ஆஸ்திரேலிய கண்டத்திட்டுக்கள் இப்போதும் வடக்கு நோக்கி நகர்வதால் இப்போதும் இமயம் வளர்ந்துகொண்டு இருக்கிறது
ஆஸ்திரேலிய கண்டத்திட்டுக்கள் இந்தோனேசிய கண்டத்திட்டுக்களுடன் மோதி அழுத்துவதால் தான் அப்பகுதிகளில் தொடர் சுனாமி பேரலைகள் ஏற்படுகிறது
எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆசியாவுக்கும் நடுவில் கடலே இருக்காது அது ஆசிய நிலத்தட்டுடன் இணைந்து விடும் வாய்ப்பே அதிகம்
இப்படி ஓயாமல் மாறிவரும் இப்பூமி பந்து அதற்கேற்ப உயிரியல் வாழ்வையும் மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கிறது
இதன் காரணமாக நிலவாழ் உயிரிகள் நீர்வாழ் உயிரியாகவும் நீர் வாழ் உயிரிகள் நிலவாழ் உயிரியாகவும் மாறுகிறது
வடதுருவ குளிர் பிரதேசங்கள் வெப்ப மண்டல பகுதி நோக்கியும் வெப்ப மண்டல பகுதிகள் குளிர்பகுதியை நோக்கியும் தள்ளப்படுகிறது
இவை மட்டும் அல்லாமல் பூமியின் சுழற்சியின் விளைவால் பல லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் பனியுகமும், கோடையுகமும் , உயிரின வாழ்வில் என்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன
இப்போது 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட பனியுகம் முடிந்து கோடையுகம் திரும்பி விட்டது இந்த கோடையும் தொடங்கி 15000 ஆண்டுகள் ஆகிவிட்டது
இந்த கோடையுக தொடக்கத்தில்தான் மனிதன்கற்கருவிகளை கொண்டு வேளாண் தொழிலை தொடங்கினான்
அடுத்தடுத்த பதிவுகளில் பாலூட்டிகளில் இருந்து மனிதனின் தோற்றம் குறித்து பார்க்கலாம்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு
[
](https://www.facebook.com/photo.php?fbid=171213934042013&set=a.104351330728274&type=3&eid=ARBWNb3HMEYJpiX8Tci195FWBjV-3moH6oJ8sQ-NgHvO303OG9kaE9Q5vANUP0jeh-e5q-mcKNT2Vxc6)
[
](https://www.facebook.com/photo.php?fbid=171222567374483&set=gm.353638175584653&type=3&eid=ARC6RjzWrQ2M4Q9J4OjRUG4KKVTF5vUvmHR2SKem1JOo4zyplpvh7kkBp6_mOU1deAECzaCi-WGDk4Iy&ifg=1)

ஒருவகை குரங்கின் வம்சாவழி எப்படி மனிதனாக மாறியது இதில் இயற்கை தேர்வின் பங்கு என்ன ? (படிமவளர்ச்சி) -9

தோழர்களே விலங்கியல் குறித்த ஒன்பதாவது பதிவு


பெருங்கடல்கள் கடல்வாழ் உயிரிகளும் ,பனிப்பிரதேசங்களில் வாழும் விலங்குகள் உருவாக பனிப்பிரதேசங்களும், பாலைவன உயிர்கள் உருவாக காரணமான பாலவனங்களும்நமக்கு இயற்கை தேர்வு முறை இருப்பதை உணர்த்துகின்றன இதுவே டார்வினின் இயற்கை தேர்வு குறித்த அவரின் கருத்தின் அடிப்படையாகும்
ஒருவகை குரங்கின் வம்சாவழி எப்படி மனிதனாக மாறியது இதில் இயற்கை தேர்வின் பங்கு என்ன ?
இதுவரை மரங்களில் வாழ்ந்த குரங்குகள் தரைக்கு வந்து வேர்கள் கிழங்குகள் பூச்சி புழுக்களை தோண்டி உண்ண ஆரம்பித்ததால் அவை முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தி படிப்படியாக ம் இன்றைய மனிதனாக மாறியது என்பதே பொதுவாக அனைவரும் கூறும் கருத்து
சரி காடுகளில் மரங்களில் வாழ்ந்த குரங்குகள் ஏன் தரைக்கு வர வேண்டும் இதில் இயற்கை தேர்வின்பங்கு என்ன என்பது குறித்து யாரும் ஒரு தெளிவானமுடிவை முன் வைக்க வில்லை.
ஆனால் குரங்கு மனிதனாக மாறிய அம்சத்தில் இயற்கை தேர்வின் பாத்திரம் சிறப்பாக பங்காற்றி இருக்கிறது என்பதை நாம் மனிதக்குரங்கில் இருந்து மனிதன் உருவான காலத்தை ஆய்வு செய்தால் அதை கண்டு பிடித்து விடலாம்
பொதுவாக நாம் பாலை வனங்களை பற்றி ஓரளவுதெரிந்து வைத்து இருக்கிறோம். சகாரா,கோபி, தார், நபீப்,அர்சோனா, அரேபிய பாலவனங்களை பற்றி எல்லாம் ஓரளவு நமக்கு தெரியும்
ஆனால் இப்பாலைவனங்கள் எப்படி வந்தன இவ்வளவு பெரிய மணல் மேடுகள் எப்படி உருவாகின என நாம் யோசிக்க மாட்டோம் யோசித்தாலும் விடை தெரியாது
சகாரா பாலவனம் ஏறத்தாழ ஒரு கோடி சதுர கிலோ மீட்டரை கொண்டதாகும் உலகின் பாலைவங்கள் அனைத்திலும் இதுதான் பெரியது
சமீபத்திய ஆய்வுகள் இப்பாலைவனம் ஒருகாலத்தில் கடலாக இருந்ததையும் அதில் ஆறு அடி நீளமுள்ள கேட் பிஸ் எனும் கெழுத்தி மீன்களும் ,35 அடி நீளமுள்ள கடல் பாம்புகளும் இன்னும்பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கிடைத்து இருக்கிறது
சுமார் ஒரு கோடி ஆண்டுகளில் இருந்து 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இக்கடல் பரப்பு கண்ட திட்ட நகர்வுகளினால் மாற்றம் அடைந்து பாலவனங்களாக மாறியதை சமிபத்திய ஆய்வுகள் உறுதி செய்கிறது
இந்த மாற்றங்கள் சகாராவில் மட்டும் அல்லாமல் அரேபிய சீன பகுதிகளிலும் பெரும் சுற்று சூழல் மாற்றங்களை ஏற்படுத்தியது
இக்காலத்தில் தாவரங்கள் விலங்குகள் போன்றவை பழைய முறையில் இல்லாமல் பெரும் சிக்கல்களை சந்தித்தன
கடல்கள் பாலையாகவும் , நிலப்பரப்புக்கள் கடலாகவும் , காடுகள் இருந்த இடம் சமவெளிகளாவும் மாறியது
இதமாக ,குளிராக இருந்த பகுதிகள் வெப்பமாகவும் வெப்பமான புவியியல் பகுதிகளில் குளிருமாக மாறியது
இந்த சூழல் மாற்றம்தான் பழைய உலக விலங்குகளை புதிதாக மாற வேண்டும் அல்லது அழிய வேண்டும் எனும் புறநிலை நிர்பந்தம் ஏற்பட்ட காலத்தில்தான் சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் முதல் மனிதனின் மூதாதை உருவானான்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஆப்பிரிக்காவில் இருந்து நவீன மனிதன் உலகம் எங்கும் பரவ ஆரம்பித்தான் எனும் பாதி உண்மையை கொண்ட கதைகளை திருத்தி நான் ஒரு புதிய கதையை உங்கள் முன் வைப்பேன்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு

புதன், 21 ஆகஸ்ட், 2019

இயற்கை தேர்வு எப்படி செயல்படுகிறது (படிம வளர்ச்சி) -7

தோழர்களே இது விலங்கியல் குறித்த ஏழாவது பதிவு

இயற்கை தேர்வு எப்படி செயல்படுகிறது என்பதை குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
இயற்கை சூழலே தனக்கான உயிரியல் அமைப்பையும் உருவாக்கிக்கொள்கிறது அப்படியானால் இயற்கைக்கு அறிவு உண்டா ? அது சிந்திக்கிறதா?இல்லை நிச்சயமாக அப்படி இல்லை.
ஒரு சிறிய எதார்த்த கற்பனை செய்வோம் மாபெரும் பசிபிக்கடலின் நடுவில் எரிமலை வெடிப்புகளால் ஒருபெரிய தீவுக்கூட்டம் ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம் .
இங்கு மிகப்பெரிய காடுகளும் ,பலவகை கனிகளை கொடுக்கும் மரங்கள் உருவானால் இயல்பாக பறவைகள் தேடி வந்து குடியேறும்,பழங்களை உண்ணும் பறவைகளை தேடி ஊண் உண்ணும் பறவைகளும் தேடிவரும்
கடல் வாழ் உயிரிகளும் ஆமை கடல் சிங்கம் போன்றவையும் இனப்பெருக்கத்துக்காகவும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் இத்தீவுகளில் குடியேறும்.
இக்கடல் சிங்கங்களை வேட்டையாட சுறாக்களும் , கில்லர் திமிங்கலங்களும் வரும்,இக்கில்லர் திமிங்கலங்களுக்கு கடல் ஓரங்களில் நல்ல உணவு கிடைத்தால் அவை தரைவரை கூட வர முயற்சி செய்கிறது.
இதுவே பல லட்சம் ஆண்டுகள் தொடரும் போது கில்லர் திமிங்கலங்களோ சுறாக்களோ நிலம் மற்றும் நீர் இரண்டு பகுதிகளிலும் வாழும் திறனை அடைகின்றன
கடலை விட தரைப்பகுதிகளில் அதிக உணவு கிடைத்தால் அது காலப்போக்கில் தரைவாழ் உயிரினமாக மாறும்
முதலில் இயற்கையின் ஒரு பகுதி மாறுகிறது மாறிய இயற்கை தன் சூழலுக்கு ஏற்ப விலங்குகளை மாற்றி அமைக்கிறது இதுவே இயற்கை தேர்வாகும்
இதை நான் வெறும் கற்பனையில் கூறவில்லை கில்லர் திமிங்கலங்கள் பெங்குவின்களையும் சீல்களையும் வேட்டையாட தரைப்பகுதிகளில் ஊர்ந்து வரும் ஆற்றலை பெற்று இருக்கின்றன .
4000 கிலோ எடை கொண்ட கில்லர்கள் அரை அடி ஆழத்தில் இருக்கும் சீல்களைகூட வேட்டை ஆடுகின்றன
அதுபோல் அமெரிக்காவின் ஜார்கியா பகுதிகளில் வாழும் டால்பின்கள் சிறு மீன்கூட்டங்களை பிடிக்க கூட்டாக சேர்ந்து கடல் நீரை கரையை நோக்கி அலைகளைப்போல் தள்ளுகின்றன இந்த செயற்கை அலைகளால் கடற்கரையில் தள்ளப்படும் மீன்களை தரையில் ஊர்ந்து வந்து பிடித்துக்கொள்கின்றன
இது போன்ற டால்பின் கூட்டங்களை உலகின் வேறு எங்கும் பார்க்க முடியாது இப்போக்கு இப்படியே நீடித்தால் டால்பின்களின் ஒரு கூட்டம் தரை வாழ் விலங்காக பிறிதொரு காலத்தில் மாறக்கூடும்
இன்னொரு உதாரணத்தை பார்ப்போம் செழிப்பான ஒரு நிலப்பகுதி பாலையாக மாறி விட்டால் பழைய முறையில் அங்கு வாழ்ந்த விலங்குகள் இப்போதும் வாழ முடியாது .
அவை வெப்பமற்ற இரவில் வேட்டையாடவும் , தனது உடலின் நீர் வற்றிப்போகாத அளவில் தனது தோல்களை சொரசொரப்பானவையாக மாற்றிக்கொள்ள வேண்டும் ,நீர் குடிப்பதையும் நீரை சேமித்துக்கொள்வதையும் உறுதி செய்யும் உடல் அமைப்பை பெற வேண்டும் .
இப்படி மாறிய இயற்கை சூழல் தனக்கான உயிர் வகையையும் மாற்றி அமைக்கிறது
சதுப்பு நிலங்கள் தனக்கான சதுப்பு நில உயிர்களையும் பாலைகள் அதற்கேற்ற உயிர்வகை களையும் பெருங்கடல்கள் அதற்கான உயிர் கோளத்தையும் உருவாக்கிக்கொள்கிறது
இது திட்டமிடப்படாமல் இயல்பாக நடப்பதாகும் மாறும் உயிருக்கும் அதை மாற நிர்பந்திக்கும் இயற்கைக்கும் இது குறித்த எந்த சிந்தனைமுறையும் இருக்காது
இன்னும் அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம்
[
](https://www.facebook.com/photo.php?fbid=170538334109573&set=a.104351330728274&type=3&eid=ARBI7q8ba1Gkn4w_8GbYs4Q350bGO14MvJ0ResSl5YwpgY-kwEMhAtOAR9PrhkMIHogsQCgwM59mp6G6)
[
](https://www.facebook.com/photo.php?fbid=170546360775437&set=gm.352019889079815&type=3&eid=ARBZ_VkFyA-WVKkLh1fnUz9peXZ1oFe5fNoRve-u0o0Hp4rvco443mhVeFJsuC2uMY723mBH59A67VwT&ifg=1)
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 20.8.19

இயற்கை தேர்வின் மூலமும் வேறு சூழல்களும் புதிய வகை இனங்களை தோற்றுவிக்கும் ( படிம வளர்ச்சி) - 8

தோழர்களே விலங்கியல் குறித்த எட்டாவது பதிவு
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்


பரிணாமவளர்ச்சி என்பது அடிப்படையில் இயற்கை தேர்வின் மூலம் நடந்தாலும் வேறு சூழல்களும் புதிய வகை இனங்களின் தோற்றத்துக்கு காரணமாகின்றன
விலங்குகள் கூட்டத்தின் தனித்த செயல்பாடுகளும் இதில் தலையிடுகின்றன.
கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் விலங்குகள் இவை நல்ல கவர்ச்சிகரமான நிறத்தில் ஆரோக்கியமாக இருக்கும் போது மட்டுமே பெண்பறவைகள் இவற்றை ஏற்கும்
ஆண் மயில்களின் வலிமையான கவர்ச்சிகரமான தோற்றம் பெண் மயில்களை கவரும்
சில பறவை கூட்டங்களில் ஆண் பறவைகள் சிறப்பான கூடுகளை உருவாக்கும் திறமை பெற்று இருந்தால் அவற்றுக்கு பெண் பறவைகள் முன் உரிமை வழங்கும்
பாலூட்டிகளில் வலிமை வாய்ந்த ஆண் விலங்குகளே பாலுறவில் ஈடுபடும் வாய்ப்பை பெறும் பெண் விலங்குகள் தமதுசந்ததியை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டாலே அதன் வாரிசுகள் இப்பூமியில் வாழும்
இப்படி இருப்பவைகளில் சிறப்பு தகுதி கொண்டவைகளே விலங்குலகின் உற்பத்தியாளர்களாக மாறுகிறார்கள்
தகுதி அற்றவைகள் புறக்கணிக்கப்பட்டு அதன் சந்ததி பூமியில் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது
புதிய சூழலுக்கு வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொள்ள திறமை கொண்ட உயிரினங்களே தம் வாழ்வை பாதுகாத்துக்கொள்ள முடியும் தனது சந்ததிகளை உருவாக்க முடியும்
இவை இல்லாமல் தனிமை படுத்தப்படும் விலங்குகள் புதிய இனங்களாக மாறுகிறது அதாவது வேறு நிலவழி நீர்வழி தொடர்பை இழந்த விலங்குகளின் ஜீன்களில் உள்ள புறக்கணிக்கப்பட்ட ஜீன்களின் அடங்கு அல்லீல்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்யும் போது இந்த அடங்கு அல்லீல்கள் வெளிப்பட்டு புதிய சிற்றினங்களை உருவாக்குகின்றன
ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் இது உலகின் நான்காவது பெரிய தீவு உலகில் உள்ள ஓணான்களில் 75 % வாழ்கிறது இங்கு விதம் விதமாக ஓணான்களை காண முடியும் காரணம் இனப்பெருக்க தனிமைப்படல்
ஒரு உயிரினம் பரவலான இனப்பெருக்க வாய்ப்புகளை பெறும்போது அவை சிறப்பான ஜீன் தொகுதிகளை அதிகம் கொண்ட சந்ததிகளை உருவாக்குகிறது
அப்படி வாய்ப்புகளை இழந்த உயிரினங்கள் உயிரினங்களால் தேவை அற்றவை என ஒதுக்கப்பட்ட ஜீன்களை மீண்டும் உற்பத்தி செய்கின்றன இவை அவ்விலங்குகள் போதுமான திறன் இன்றி நோய் எதிர்ப்பு திறன் இல்லாத வாழத்தகுதி அற்ற உயிரினத்தொகுதிகளை உருவாக்குகின்றன
இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம் சுமத்ராபகுதியில் இருக்கும் ஒருதனிமை பட்ட தீவில் வாழும் மக்கள் கூட்டம் தங்களுக்குள்ளேயே திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் இந்த தீவில் வாழும் அனைவருமே நிறகுருடுகள் இவர்களில் யாருக்கும் வண்ணங்களை பகுத்து பார்க்க முடியாது
உயிரினங்கள் மிக பரந்த அளவில் இனப்பெருக்க வாய்ப்புகளை பெறும்போது மிக சிறப்பான ஜீன் தொகுதிகளை தமது சந்ததிக்கு வழங்குகிறார்கள் குறுகிய வட்டத்தில் இனப்பெருக்கம் நடக்கும் போது பலவினமான நோயுற்ற ஜீன் தொகுதிகளை வழங்குகிறார்கள்
மீண்டும் மீண்டும் ரத்த உறவுகளுக்குள் நடக்கும் இனப்பெருக்க உறவுகள் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்காமல் நோய் தொடர்ச்சி கொண்ட ஜீன்களை தொடர்ந்து தமது சந்ததிகளுக்கு கடத்துகிறார்கள்
சர்க்கரை நோய் கொண்ட இருவேறு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் திருமண உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்குபாரம்பரிய சர்க்கரை நோய் தொடரும் வாய்ப்புகள் குறைவு
அதேவேளை ரத்த உறவு கொண்ட சர்க்கரை நோய் கொண்ட குடும்பங்களில் உருவாகும் சந்ததிகள் சர்க்கரை நோயை அதிகபட்ச அளவில் உற்பத்தி செய்கிறார்கள்
இதற்கு காரணம் ஜீன்கள் பாதிக்கப்பட்ட குறைபாடு உடைய ஜீன்களை செயலற்ற தாக மாற்றுகிறது அந்த ஜீன்களின் இடத்தை நிறைவு செய்ய போதுமான புதிய ஜீன்கள் இல்லாத நிலையில் பழைய ஜீன்களே உயிர் பெறுகிறது
எனவே சாதி மறுப்பு திருமணங்கள் உண்மையாகவே ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கும். சொந்த சாதிக்குள் நடக்கும் திருமணங்கள் பரம்பரை நோய்களை பாதுகாத்து அதை வாரிசுகளுக்கும் வழங்கும்
மீண்டும் சந்திப்போம்
[
](https://www.facebook.com/photo.php?fbid=170668990763174&set=a.104351330728274&type=3&av=100034602217599&eav=AfaJYwLY8C0HvFOEOlEJSYfSTfe5f87JyzFXhrzI_ERt0clVuEmoQaCwi5Xm1l3AhkY&eid=ARDwe4Bgtk5VMCbSodjeAwY8U_dX4WLboWL_PvCc7LMPnvw9BeZ-qFGHXx7Gh7MRq9S3m_vWx_SGzXIQ)
[
](https://www.facebook.com/photo.php?fbid=170676604095746&set=gm.926315557711066&type=3&eid=ARBuL8YFAmQztgdAwbbqQRxC0vlyinwQQaKSBy_Ov71oTemqEXVxH5vM4r4CoD0gQrhiiiE43iIyOOy9&ifg=1)
[
](https://www.facebook.com/photo.php?fbid=170676974095709&set=gm.352328139048990&type=3&eid=ARCu8vSH4YM_1XRkb1Rzr9OBoHtR3bfyZMDP6toz6VedP5tU8ytE3xkzmKStLBLk33iq3t5qYX6y4Fsf&ifg=1)
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 21.8.19

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

ஆர்கா என அழைக்கப்படும் கில்லர் வேல்[kilerwhale] (படிம வளர்ச்சி) -6

தோழர்களே படத்தில் இருப்பது ஆர்கா என அழைக்கப்படும் கில்லர் வேல்[kilerwhale] உலகில் உள்ள விலங்கினங்களில் அதி புத்திசாலி இது டால்பினின் நெருங்கிய இனமாகும்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: சமுத்திரம், தண்ணீர், வெளிப்புறம் மற்றும் இயற்கை


இது ஆண் 17 வருடங்களும் பெண் 29 வருடங்களும் வாழக்கூடியது இது ஒரு பாலூட்டி ஆனால் நீலத்திமிங்கலத்தின் குடும்பத்தை சேர்ந்தவை அல்ல இதன் மூதாதை யின் பாசில்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டன
சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நிலவாழ் உயிரினமாக இருந்தது 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நீர் நில வாழ் உயிரியாக மாறியதை இதன் பாசில்கள் உறுதி செய்கிறது
இது முதலையை போல் நீரில் மறைந்து இருந்து வேட்டையாடிய போதும் நிலத்தில் நன்கு நடக்கும் திறனையும் பெற்று இருந்ததை இதன் பாசில்கள் உறுதி செய்கிறது
இந்த கில்லர் வேல் என்பது கூட்டாக வாழ்வதற்கும் கூட்டாக சேர்ந்து வேட்டையாடுவதற்கும் உதாரணமாக திகழ்கிறது
இது கடல் சிங்கம் எனப்படும் சீல்களை பிரதான உணவாக கொள்கிறது கடலின் மிக பயங்கரமான மிகப்பெரிய வெள்ளை சுறாக்கள் கூட கில்லர் திமிங்கலம் இருக்கும் பகுதிக்கு வருவதில்லை
பார்க்க மிக சாதுவாக இருக்கும் இவைகள் மிக கொடூரமான வேட்டையாடிகள்
டால்பின்களைபோலவே மனிதனிடம் நெருங்கிப்பழகும் பண்பை பெற்று இருப்பதால் இவற்றை வைத்து நிறைய வெளிநாடுகள் நிகழ்ச்சிகள் செய்து வருமானம் ஈட்டுகின்றன
இவற்றின் சுற்றுலா நிகழ்வு ஒன்றை பார்த்தாலே இவற்றின் அறிவின் ஆழம் நமக்கு புரியும்
இவை பனிப்பாறைகளில் மறையும் சீல்களை வேட்டையாட கூட்டாக சேர்ந்து செயற்கை அலைகளை உருவாக்கும் திறமை பெற்றவை
வெள்ளை சுறாக்களையும் வேட்டையாடும், நீலத்திமிங்கலத்தின் குட்டிகளை கூட வேட்டையாடி விடுகின்றன
இவற்றின் ஆணின் நிறை 3600 கிலோவில் இருந்து 5500 கிலோவரை இருக்கும் பெண் 1500 முதல் 3000 கிலோவரை இருக்கும்
இவை ஒரு பாலூட்டி என்பதும் ஒருகாலத்தில் நிலவாழ் விலங்காக இருந்தது என்பதற்கும் இன்று ஏகப்பட்ட சான்றுகளை ஆய்வாளர்கள் சேகரித்து இருக்கிறார்கள்
ஏன் அப்போது மாறிய விலங்குகள் இப்போது மாற வில்லை என நீங்கள் கேட்பது புரிகிறது
ஒரு விலங்கு பரிணாம வளர்ச்சியின் மூலம் ஒன்று வேறு ஒன்றாக மாற கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும்
இந்தமாற்றங்களை நாம் நேரில் கண்டு உணர முடியாது பல லட்சம் ஆண்டுகள் கடந்த பின்பு நம்மை திரும்பி பார்த்தால் நாமே நம்ப மாட்டோம்
ஒரு 40,000ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் இருந்ததை போலவா இன்று இருக்கிறான் நாம் முட்டியில் தவழ்ந்ததை போல் எந்த குழந்தையாவது இன்று முட்டி போட்டு தவழ்வதை பார்க்க முடிகிறதா?
அல்லது இன்று குழந்தைகளுக்கு இருக்கும் செல்போன் அறிவு நமக்கு இருக்கிறதா?
கண்முன்ன்னால் பரிணாம வளர்ச்சி நம்மை விட நிறத்திலும் குணத்திலும் உயரத்திலும் அறிவிலும் சிறந்த ஒரு புதிய சந்ததியாக நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் உருவாகி வருவது உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா?
நாம் எவ்வளவுதான் அறிவாளிகளாக இருந்தாலும் இன்றைய குழந்தைகளின் சிறப்பு தன்மைகளை நாம் அடைய முடியாத தொலைவில் இருக்கிறோம் என்பதை காணுங்கள் பரிணாமவிதியின் செயலை உணருங்கள்
சரி கூடுதலாக இயற்கை தேர்வைகாணலாம் ,
இன்று கடல் இருக்கும் இடத்தில் தரையும் தரை இருக்கும் இடத்தில் கடலும் தங்கள் இடங்களை மாற்றிக்கொண்டால் என்ன நிகழும்?
வலிமையான ஆஜானுபாகவான விலங்குகள் எல்லாம் நீலத்திமிங்கலம் ஒட்டக சிவிங்கிகள் யானை போன்ற வலிமை பொருந்திய பெரு விலங்குகள்தான் முதலில் அழியும் ஏனென்றால் இவற்றால் தங்கள் வாழ்வை உடனடியாக மாற்றி அமைத்துக்கொள்ள முடியாது
அதே வேளை நீர் நிலம் சார்ந்து வாழும் முதலைகள், நீர்யானைகள் தவளைகள் மட்கிப்பர் எனப்படும் சதுப்பு நில மீன்கள் தம்மை நிலவாழ் அல்லது நீர்வாழ் உயிரியாக மாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதிகம்
.
இதில் வலிமையானது வாழும் என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?இயற்கையின் கட்டளையை ஏற்று மாறிக்கொள்ளும் விலங்கே பெரிதானாலும் சிறிதானாலும் வாழும்
இந்த திடீர் அல்லது படிப்படியான மாற்றம்தான் விலங்குகளை புதிய மாறியுள்ள அதாவது இவ்வளவு காலமும் நிலவாழ் உயிரியாக இருந்ததை நீர்வாழ் உயிரியாக மாறும் படி மாறிய இயற்கை நிர்பந்தம் செய்கிறது
இந்த புற நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு தங்களை மாற்றிக்கொள்ளும் விலங்குகள் வாழ்கிறது
மாற்றிக்கொள்ள முடியாத விலங்குகள் அழிகிறது இதுதான் டார்வினின் இயற்கை தேர்வு தொடர்ந்து பார்ப்போம்
6வது பதிவு
- ஆர். சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 20.8.19

நீலத்திமிங்கிலத்தையும் அது குறித்த டார்வினின் கருத்தையும் பார்க்கலாம் (படிம வளர்ச்சி) - 5

தோழர்களே விலங்கியல் குறித்த 5வது பதிவு



கடந்த பதிவில் நீலத்திமிங்கிலத்தின் மூதாதை யான நீர்நில வாழ் விலங்கின் கம்யூட்டர் படத்தை பிரசுரித்து இருந்தேன்
இதில் நீலத்திமிங்கிலத்தையும் அது குறித்த டார்வினின் கருத்தையும் பார்க்கலாம்
நீலத்திமிங்கிலம் என்பது இந்த பூமியிலேயே மிகப்பெரிய பாலூட்டியாகும் இதன் எடை இரண்டு லட்சம் கிலோகிராம் ஆகும்
இதன் இதயம் ஒரு பெரிய காரின் அளவு கொண்டது இதன் நாக்கின் நிறை 4000 கிலோவாகும் இது மொத்தத்தில் மிகப்பெரிய நிலவாழ் உயிரியான ஆப்பிரிக்க ஆண்யானைகளைபோல் 40 மடங்கு எடையை கொண்டது
இது ஒரு பாலூட்டி என்பது நீண்ட காலமாக மனிதர்கள் அறிந்ததே சார்லஸ் டார்வினும் இது குறித்த நீண்ட ஆய்வுகள் செய்தார்
கடைசியில் அமெரிக்க கரடி வகைதான் நீலத்திமிங்கிலத்தின் முதாதை என நம்பி 1856 களில் எழுதி இருந்தார் இக்கருத்து பரவலாக எடுபடாமல் போகவே தனது அடுத்த வெளியீட்டில் இந்த கருத்தை நீக்கி இருந்தார்
ஆனால் உண்மையில் டார்வின் வந்த முடிவு மிக சரியானதுதான் அவர் தேர்ந்து எடுத்த விலங்குதான் தவறாகி விட்டது
நீலத்திமிங்கிலம் ஒரு பாலூட்டி அதுநிலவாழ் விலங்கி;ல் இருந்தே நீர்வாழ் விலங்காக மாறியிருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தே இருந்தது ஆனால் நமது புரிதலுக்கு ஆதாரம் வேண்டுமே
அது நீண்ட காலமாக கிடைக்க வில்லை கடந்த 15ஆண்டுகளாக ஆய்வாளர்களின் நீண்ட தேடுதலுக்கு பிறகு விடுபட்டு போன தொடர்புகள் படிப்படியாக கிடைத்தன
இதற்கான ஆதாரம் முதலில் காஸ்மீரில் கிடைத்தது இதன் பற்களையும் இதன் எலும்புகளையும் ஆய்வு செய்த போது இது மிக நீண்ட காலத்தை நீரில் செலவு செய்யும் விலங்கினம் என்பது உறுதியானது
இதன் தொடர்ச்சிகள் தெற்கு ஆசியாவில் பரவலாக கிடைத்தன இவை நீர்யானையை ஒத்த ஒரு சிறு விலங்காகும்
இதற்கு அடுத்த சிறப்பான பாசில் பெரு நாட்டின் பசி[பிக் கடற்பகுதியில் கிடைத்தது இந்த விலங்கை ஆய்வாளர்கள் நடக்கும் திமிங்கிலம் என அழைத்தார்கள் கடந்த கட்டுரையை படித்த தோழர்கள் அந்த விலங்கின் உடல் அமைப்பை உற்று நோக்க கோறுகிறேன்
இப்படி மனிதன் தான் ஏற்கனவே புரிந்து வைத்து இருந்த திமிங்கலத்தை சான்றுகளுடன் நிறுபிக்க நீண்ட காலம் ஆனது
ஆனால் இந்த மாற்றத்தை திமிங்கலம் அடைய 5 கோடி ஆண்டுகள் ஆனது
இப்படியாக திமிங்கலத்தை பற்றிய டார்வினின் கருத்து நிலை நிறுத்தப்பட்டது
சரி பரிணாம வளர்ச்சிக்கு வருவோம்.
பரிணாம வளர்ச்சி என்றால் எப்போதும் உயிரினங்கள் மாறிக்கொண்டே இருப்பதா?
ஒரு விலங்கு எப்படி மாற வேண்டும் என்பதை இயற்கைதான் தீர்மானிக்கிறது குறிப்பிட்ட அந்த விலங்குகள் அல்ல,
இப்போது ஆர்டிக் பகுதியை எடுத்துக்கொள்வோம் அங்கு பனிக்காலத்தில் அப்பகுதி முழுவதுமே வெண்மையாக காட்சி அளிக்கும்
அங்கு ஒரு வெண்கரடியும் ஒரு கருப்பு கரடியும் வாழ்வதாக வைத்துக்கொண்டால் எது தனது வாழ்வை தக்க வைக்க வாய்ப்புகள் அதிகம்
வெண் கரடிக்கு தான் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் ஏனென்றால் எதிரிகளின் கண்ணுக்கு தெரியாமல் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் மறைந்து நின்று வேட்டையாடவும் அது வெண்மையாக இருக்கவேண்டும்
இதில் இயற்கை தேர்வு என்ன செய்கிறது?முதலில் இயற்கையின் சுற்று சூழல் மாறுகிறது இந்த மாற்றம் அங்கு வாழும் உயிர்களையும் அதற்கு ஏற்ப மாறும்படி நிர்பந்தம் செய்கிறது
ஆர்டிக்கின் சூழலுக்கு ஏற்ப கருப்பு கரடி வெண்மையாக மாறியே ஆகவேண்டும் இல்லை என்றால் கருப்புக்கரடிக்கூட்டம் எதிரிகளால் எளிதில் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படும் இரை விலங்குகளும் கருப்புகரடிகளுக்கு அகப்படாது
பச்சோந்திகளை எடுத்துக்கொள்வோம் அது மிகமெதுவாக நகரும் ஒரு உயிரினம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியில் அது வாழ்கிறது
அதற்கு எந்த வலிமையும் இல்லை ஆனால் தன்னை சுற்றி உள்ள சூழலுக்கு ஏற்ப அது தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது
அதாவது இயற்கையின் விருப்பத்துக்கு ஏற்ப அது தன்னை மார்றிக்கொண்டு இருக்கிறது
பரிணாம வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருப்பது அல்ல
சூழலுக்கு தகவமைவதே தன்னை சார்ந்து எப்படி பட்ட உயிரினம் வாழ்வேண்டும் என்பதை இயற்கையே முடிவு செய்கிறது என்பதே இயற்கை தேர்வாகும்
தொடரும்
- ஆர். சந்திரசோகரன் ஆர். சந்திரசேகரன் முகநூல் பதிவு, 19.8.19
Image may contain: water and outdoor