ஞாயிறு, 12 ஜூலை, 2015

500 ஆண்டாக மெருகு குலையாமல் இருக்கும் பெண் மம்மி



500 ஆண்டிற்கு முந் தைய பெண் மம்மி அர் ஜென்டினாவின் லூலை லிகோ என்ற எரிமலை பகுதியில் ஒரு குகையில் கண்டுபிடிக்கபட்டு உள் ளது. இந்த் பெண் மம்மி  உயிர்த்தியாகம் செய்த ஒரு பெண்ணின் மம்மியாகும்.
இதில் ஆச்சரியம் என்ன வென்றால் இதை பார்த் தால் இது 500 ஆண்டிற்கு முன் இறந்து போன பெண் ணின் மம்மியாக தெரிய வில்லை கடந்த வாரம் இறந்து போன ஒரு பெண் ணைபோல மம்மி உருவம் மெருகு குலையாமல் உள் ளது. மம்மியை பார்க்கும் போது பெண் நிஜத்தில் உயிருடன் இருப்பது போல் ஒரு தோற்றம் உள்ளது. அது கை ஊன்றி இருக்கும் விதத்தை பார்க்க ஆச்சரிய மாக உள்ளது.
இந்த மம்மி தொல் பொருள் ஆய்வாளர் ஜோகன் ரெயின் கார்டு  குழு மூலம் கண்டு பிடிக்கக் பட்டு உள்ளது. பண்டைய காலங்களில் கபகோச்சா என்ற திருவிழாவின் மூலம் குழந்தைகளை தேர்வு செய்து உயிர்த்தியாகம் செய்யும் திருவிழா நடத்து வது உள்ளது இந்த விழாவின் மூலம் உயிர்தி யாகத் திற்கு தேர்வு செய் யப்படும் இன்கா குழந்தை கள் என அழைக்கபட்டனர்.
ஆனால் மம்மியை ஆய்வு செய்த மருத்துவர்கள் இறக்கும் போது இந்த பெண் நுரையீரல் நோயி னால் அவதி பட்டதாக கூறி உள்ளனர்.இந்த் மம்மி மூலம் பழங்காலத்தில் எந்த விதமான் நோய்கள் இருந்தன எனபதை அறிய லாம் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

-விடுதலை,12.7.15

ஞாயிறு, 5 ஜூலை, 2015

அகற்றப்பட்ட கர்ப்பபையை மீண்டும் பொருத்தி குழந்தை பெற்ற பெண்


பெல்ஜியம் நாட்டில் அகற்றப்பட்ட கர்ப்பபையை மீண்டும் பொருத்தி குழந்தை பெற்ற பெண்
பிரஸ்சல்ஸ், ஜூன் 15_ பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கு அகற்றப்பட்ட கர்ப்பபையை மீண்டும் பொருத்தி குழந்தை பெற செய்துள்ளனர். அந்த பெண் 14 வயதில் இருந்த போது கடுமையான செல் ரத்தசோகை நோயினால் அவதிப்பட்டார்.
இதனால் அவருடைய கர்ப்பபை பாதிக்கப்பட்டி ருந்தது. அவரது கர்ப்ப பையை அகற்றாவிட்டால் முற்றிலும் கர்ப்பபை பாதிக்கப்படும் நிலை ஏற் பட்டது.
பெண்ணின் வயிற்றில் உள்ள கர்ப்பபையை அகற்றிவிட்டு அதை குளிர்சாதனங்களில் வைத்து தேவைப்படும் நேரத்தில் மீண்டும் பொருத்தி குழந்தை பெறும் மருத்துவமுறை ஏற்கெனவே உள்ளது.
எனவே அந்த பெண் ணின் கர்ப்பபையை அகற்றி விட்டு தேவைப்படும் நேரத்தில் குழந்தைபெற செய்யலாம் என்ற நோக் கில் அதை அகற்றி னார்கள். பின்னர் குளிர் சாதன பெட்டியில் வைக் கப்பட்டது. கர்ப்பபை அகற்றப்படும்போது அந்த பெண் பருவமடைய வில்லை.
இந்த நிலையில் அவ ருக்கு திருமணம் ஆனது. இதையடுத்து அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். இதனால் குளிர்சாதனத்தில் வைக்கப் பட்ட கர்ப்பபை மீண்டும் அவருக்கு பொருத்தப்பட் டது. அதை மீண்டும் செயல்பட வைக்க 2 ஆண்டுகளாக தீவிர சிகிச்சை நடந்து வந்தது. இதில் கர்ப்பபை செயல் பட தொடங்கி மாத விடாயும் வந்தது. பின்னர் கரு முட்டையும் உரு வானது.
இதைத்தொடர்ந்து அவர் கர்ப்பமானார். தற் போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பபையை அகற்றி விட்டு மீண்டும் குழந்தை பெற்ற சம்பவங்கள் பல நடந்தாலும் அந்த பெண் களின் கர்ப்பபை பருவம் அடைந்ததற்கு பிறகு அகற்றப்பட்டதாகும். ஆனால் பருவம் அடைவ தற்கு முன்பே கர்ப்ப பையை அகற்றிவிட்டு மீண்டும் பொருத்தி குழந்தை பெற செய்தி ருப்பது இதுவே முதல் முறை என்று மருத்துவர் கள் தெரிவித்தனர்.

புதிய பால்வீதி கண்டுபிடிப்பு



பெர்லின், ஜூன் 21_ பிர பஞ்சத்தின் மிகப் பிரகாச மான நட்சத்திரக் கூட் டத்தை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால் டோவின் செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தில் கணக் கிலடங்காத வகையில் `கேலக்ஸி எனப்படும் பால் வெளி - மண்டலம் அதா வது நட்சத்திரக் கூட்டங் கள் உள்ளன. இதுவரை கண் டறிந்த நட்சத்திரக் கூட்டங்களில், பிரகாசமாக அறியப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகப் பிரகாசமாக விளங்கும் நட்சத்திரக் கூட்டத்தை, போர்ச்சுக்கல் மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞா னிகள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு `சிஆர் - 7 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது, போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செல்லப் பெயர் ஆகும்.
சிஆர் - 7, நட்சத்திரக் கூட்டத்தில், நீலம் மற்றும் இளம்சிவப்பு நிறம் கொண்ட நட்சத்திரக் குழு மங்களும் இடம்பெற்றுள் ளன. இவை, வழக்கமான நட்சத் திரங்களுக்கு இடை யில்காணப்படுவதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-விடுதலை,21.6.15

செல்சவ்வை செயற்கையாக உருவாக்கிய இந்திய விஞ்ஞானி




அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் நியல் தேவராஜ். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர், சிலருடன் இணைந்து உயிர் செல்களின் தோலாக விளங்கும் செல் சவ்வை செயற்கையாக உருவாக்கி உள்ளார்.
உயிரினங்களின் உடற்செல்களின் செல் சவ்வே அடுத்தடுத்த செல்களுடன் தொடர்பு கொள்ளவும், தகவல்களை கடத்தவும் உதவுகிறது. செயற்கையாக இந்த செல்சவ்வை உருவாக்கி இருப்பதன் மூலம், பாதிக்கப்படும் உடல்பாகங்களில் இந்த செயற்கை செல்களை உருவாக்கி, உடல் செயல்களை தூண்ட முடியும்.
இந்த செல்சவ்வு இயற்கை செல்சவ்வு போல தகவல் தொடர்பிலும், தேவைக்கேற்ப புதிய தோலை உருவாக்கிக் கொள்வதிலும் சிறப்பாக செயல்படுவதாக தேவராஜ் கூறி உள்ளார்.

-விடுதலை,30.6.15

புதன், 24 ஜூன், 2015

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா?

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா?
- பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி

ஆண்_பெண் உடல் உறவு இல்லாமலே மருத்துவர்கள் செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் காலம் மிக விரைவில் வரும். சோதனைக் குழாய்களில் விந்துக்களைச் செலுத்தி, கருத்தரிப்பு நிகழ்ந்த பிறகு அதனைப் பெண்ணின் கருப்பையில் வைத்துக் குழந்தையை வளர்க்கும் காலம் வருங்காலம்! பிள்ளைப் பேற்றுக்கு ஆண்_பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல உடற்கட்டும் புதிய நுட்பமும், அழகும், உடல் வலிமையும் உள்ள குடிமக்கள் ஏற்படும்படியாக, பொலிகாளைகளைப் போல் தெரிந்தெடுத்து, மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ஊசிமூலம் பெண்களின் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண்_பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
1943இல் தந்தை பெரியார் இக்கருத்துகளை வெளியிட்டபோது பலர் அதிர்ச்சியடைந்து போனார்கள். மயங்கி விழுந்தவர்களும் உண்டு. ஆனால் மருத்துவ அறிவியல் தந்தை பெரியார் என்னும் இயற்கை அறிவியலாளரின் திசையிலேயே பயணித்தது. 1978இல் பிரிட்டனில் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. அதன் பெயர் லூசி பிரவுன். அதன் பின்னர் சில ஆண்டுகளில் கல்கத்தாவில் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. இன்று உலகில் எல்லா நாடுகளிலும் இந்த முறை மிக எளிமையாகிவிட்டது.
தென்னகத்தைப் பொருத்தவரையில், அரச மரத்தைச் சுற்றிவந்தால், கோவில்களில் சின்னச் சின்ன தொட்டில்களைக் கட்டித் தொங்க விட்டால், விரதமிருந்தால் குழந்தை பிறக்கும் என்னும் மூடநம்பிக்கை ஆழமாக வேரூன்றியிருந்தது. அதைவிட, சாமியார்கள் பிள்ளைவரம் கொடுக்கும் ஒரு கொள்ளை நோய் பரவியிருந்தது. சாமியார்களிடமும் ஆசிரமங்களுக்கும், மடாலயங்களுக்கும் சென்று மக்கள் மானத்தை இழந்துவரும் தொடர்கதை இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையில், தந்தை பெரியார் இத்தகைய மூடநம்பிக்கைகளை எதிர்த்து முழக்கமிட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டினார்.
மலட்டுத்தன்மை: மலட்டுத்தன்மை என்பதைக் காரணமாகக் காட்டி பல பெண்கள், ஆண்களால் புறக்கணிக்கப் பட்டார்கள். ஆனால் மலட்டுத்தன்மை என்பது ஆண்களிடமும் உண்டு என்னும் திடுக்கிடத்தக்க உண்மை வெளியானவுடன் பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெற்றார்கள். அச்சம் அகன்று துணிவு பிறந்தது. கணவன்_மனைவி இருவருமே இப்போது மருத்துவரை நாடித் தம் குறைபாடுகளை நீக்கிக் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆக மலட்டுத்தன்மை என்பது இப்போது பொய்யாக்கப்பட்டு பெண்களை மட்டுமே குறிப்பிட்டுக் கூறப்பட்டு வந்த மலடி என்ற சொல் (ஆண்களைக் குறிக்கும் இதற்கு நிகரான சொல் இல்லை) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. இந்த மலடி என்ற சொல்லைப் பயன்படுத்தி ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பழக்கமும் இப்போது காண்பதற்கு அரிதாகும்.
சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கம் பற்றித் தந்தை பெரியார் 1938இல் தம் புரட்சிக் கருத்துகளை வெளியிட்டபோது, இது கடவுள் படைப்புக்கு எதிரான கருத்து; நாத்திகர்களின் கோணல் பார்வை என்று தந்தை பெரியாரைச் சாடினார்கள் மதவாதிகள்!
இன்று மருத்துவ அறிவியல் வியத்தகு வளர்ச்சியை அடைந்துள்ளது. சோதனைக் குழாய் மூலம் குழந்தை வளர்ப்பு என்பது பழைய முறையாகிவிட்டது! பெண்ணின் கரு முட்டைகளை அதிகம் உருவாக்கி (என்சைம்ஸ் வழியாக) அதனை எடுத்து ஆணின் உயிரணுக்களோடு சோதனைக் குழாயில் அய்ந்தாறு நாட்கள் வளர்த்து அதன்பின் அதனைத் தாயின் கருப்பையில் வைத்து வளர்ப்பது சோதனைக் குழாய் (Test Tube Methode) முறையாகும். இம்முறையிலிருந்து படிநிலை வளர்ச்சி பெற்று இப்போது கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test) என்னும் மிக நுட்பமான வளர்நிலையை எட்டியுள்ளது.
கேப்சுயூல் டெஸ்ட் (Capsule Test): இந்த முறை மருத்துவம் மிக நுட்பமானது. ஒரு மெல்லிய ஊசி; அந்த ஊசியின் உட்புறம் ஒருவகை வேதிப் பொருள் கலவையால் பூசப்பட்டிருக்கும் (டெஃப்ரான்). இந்த மெல்லிய ஊசியின் மூலமாகப் பெண்ணின் கருமுட்டை காயம் ஏற்படாமல் சேதாரம் இல்லாமல் வெளியே எடுக்கப்படுகிறது. அதனோடு ஆண் உயிரணுவைச் சேர்த்து ஒரு கேப்சுயூலில் வைத்துப் பெண்ணின் பிறப்புறுப்பிலேயே கரு வளர்க்கப்படுகிறது; இதன் பின்னர், தாயின் கருப்பையில் அக்கரு வைக்கப்படுகிறது. தாயின் இயற்கையான வெப்பத்தில் கரு வளர்ந்துவரும். இதற்கு முன்பு சோதனைக் குழாய் முறைக்கு ஆன செலவை விட கேப்சுயூல் முறைக்கு மூன்றில் ஒரு பங்குதான் செலவு!
கேப்சுயூல் முறை மருத்துவத்திற்கான கருவிகள் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இவற்றின் விலை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. இவற்றை இங்கேயே உற்பத்தி செய்யும் நிலை வந்துவிட்டால் செலவு மிக மிகக் குறைவாகும். ஏழைகளுக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கும் நல்வாய்ப்பாகிவிடும்.
கேப்சுயூல் முறையில் குழந்தை வெளியே வளர்வதில்லை. அது தாயின் அரவணைப்பில் கருப்பையிலேயே வளர்கின்றது. ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால் மறுமுறையும் இதே சோதனையை எளிதில் தொடரலாம். 2011ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்தச் சோதனை வெற்றிபெற்றது. இந்தியாவில் _ தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சோதனை வெற்றி பெற்றது.
ஈரோட்டில் 64 வயதுப் பெண்மணிக்கு: ஈரோட்டில் 64 வயதான ஒரு பெண்மணி; பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் மலடி என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டு உறவினர்களின் ஓரப் பார்வையால் சொல்லவொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகி வாழ்ந்து வந்தார். அவருக்கு 45ஆம் வயதில்  மாதவிடாய் நின்றுவிட்டது. இருபது ஆண்டுகளாகச் சர்க்கரை நோய்; இரத்த அழுத்தம் எல்லாம் இருந்தன. கணவருக்கு அகவை 75; அவர் இதய நோயாளி. என்றாலும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்காதா என்ற கவலை ஒருபுறம் நெஞ்சைத் துளைத்து ஏங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லா மருத்துவத்தையும் பார்த்துவிட்டார்கள்.
கடைசியில் கேப்சுயூல் முறையையும் பார்த்துவிடலாம் என்று டாக்டர் நிர்மலா சதாசிவத்தை அணுகினார்கள். 64 வயதுப் பெண்ணுக்கு இருந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து அவருக்குத் தாய்மைப் பேற்றை நல்கி அவர்கள் இருவரும் இதுவரை பெற்றிராத மகிழ்ச்சியைக் கொடுத்தார் டாக்டர் நிர்மலா சதாசிவம். உலகில் இந்த வயதில் எவருக்கும் குழந்தை பிறந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் முதல்முறையாக ஈரோட்டில் இந்த மருத்துவம் மருத்துவத் துறை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தச் சோதனைகளின் மூலவர், தொலை நோக்குச் சிந்தனையாளர், சோதனைக் குழாயில் குழந்தை உருவாகும் என்ற முன் அறிவிப்பை வெளியிட்ட அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்தச் சாதனை நிகழ்த்தப் பெற்றிருக்கிறது.
டாக்டர் நிர்மலா சதாசிவம் இணையரை அழைத்து பெரியார் மன்றம் பெருமைப்படுத்தியது. பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கி அய்யாவுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
1926 வரையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த விதியை தந்தை பெரியார், பனகல் அரசரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அந்த விதியை அகற்றினார்கள். அதன் பின்புதான் நம்மவர்கள் மருத்துவத்துறையில் நுழைய முடிந்தது! இன்று உலகம் வியக்கத்தக்க சாதனைகளை நம்முடைய மருத்துவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்!

-உண்மை,16-30 ஜூன்2015

ஞாயிறு, 17 மே, 2015

கண்டுபிடிப்புக்கு உதவும் கருவிகள்


மின்சக்தியை சேமித்து, பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது? அக்யுமுலேட்டர் கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி எது? அட்மாஸ்கோப் மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் மின்னளவி எது? அம்மீட்டர் நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடாமலும், குறையாமலும் ஒரே சீராக வைக்க உதவுவது எது?
அணுக்கரு உலைகள் காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது? அனிமோ மீட்டர் ஒலியின் வலிமையை அளக்க பயன்படும் கருவி எது? ஆடியோ மீட்டர் கேட்கும் திறனை அதிகரிக்க உதவும் கருவி எது? ஆடியோ போன் கண்ணின் உட்பாகத்தையும், விழித்திரையையும் சோதிக்கும் கருவி எது?
ஆப்தலாஸ் கோப் ஆகாய விமானம் பூமியிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என கண்டறிய உதவும் கருவி எது? ஆல்டிமீட்டர் மின்தாங்கி கட்டிடங்கள் இடியினால் தாக்கப்படாமல் பாதுகாக்கப் பயன்படும் கருவி எது? இடிதாங்கி செயற்கை வெப்பத்தால் முட்டைகளை பொறிக்க செய்யும் கருவி பாக்டீரியா கிருமிகளை வளர்ப்பதற்கும்,
வளர்ச்சி குன்றிப்பிறந்த குழந்தைகளை பாதுகாக்கவும் பயன்படும் கருவி எது? இன்குபேட்டர் விண்வெளியிலிருந்து செய்திகளை செயற்கை கோள் வழியாக அனுப்புவதற்காக பயன்படும் கருவி எது? டெல்ஸ்டார் கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?
பேதோ மீட்டர் அச்சிடப்பட்டவைகளை தரையில் விழச்செய்யும் கருவி எது? எப்பிடாஸ் கோப் புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தை காண்பிக்க பயன்படும் கருவி எது? குரோனோ மீட்டர் மூளைகளின் அலைகளை அளக்க பயன்படும் கருவி எது? எலக்ட்ரோ என்சபலோகிராப் உப்புக் கரைசலை அளக்கும் அளவி எது?
சலினோ மீட்டர் சூரியனுடைய உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின் உயரத்தையும் அறிய பயன்படும் கருவி எதுசெக்ஸ்டான்ட் தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி எது?
கிரஸ்கோகிராப் உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி எது? கைமோகிராப் அறைகளில் நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படும் கருவி எது?
மானோ மீட்டர் வைரஸ்களை அளக்க பயன்படும் கருவி எது? மில்லி மைக்ரான் இரத்த அழுத்தத்தை அறிய உதவும் கருவி எது? ஸ்பைக்மோ மானோ மீட்டர் ஊர்த்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி எது? ஓடோ மீட்டர் பலவண்ணம் காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு கருவியாய் பயன்படுகிற கருவியின் பெயர் என்னகலைடாஸ்கோப்

விரைவில் செயற்கை இலை!
ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செயற்கை இலையை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கின்றனர். சூரிய ஒளியை பச்சையம் மூலம் சக்தியாக மாற்றும் தன்மை தாவரங்களில் உள்ள இலைகளில் நடக்கும் விந்தை.
இதை செயற்கை முறையில் உருவாக்கி, சூரிய ஒளியிலிருந்து திரவ எரிபொருளை உருவாக்கலாம் என்று ஹார்வர்டை சேர்ந்த விஞ்ஞானி டேனியல் நோசெராவின் குழுவினர் கண்டறிந் துள்ளனர். சூரிய ஒளி மற்றும் ஒரு பாக்டீரியா ஆகியவற்றின் உதவியுடன் இந்த செயற்கை இலை திரவ எரிபொருளை உருவாக்குகிறது.
இதை பெருமளவில் தயாரிக்க முடிந்தால் பர்சனல் கம்ப்யூட்டர் போல. பர்சனல் எரிபொருள் உற்பத்தி நிலையத்தை வீட்டின் கொல்லைப் புறத்தில் உருவாக்க முடியும். ஆனால், இந்த செயற்கை இலை, சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காது.

தலை தெறிக்க ஓடும் நட்சத்திரம்
நமது பால்வெளி மண்டலம் கேலக்ஸியை விட்டு வினாடிக்கு 1200 கி.மீ வேகத்தில் பறந்து தலைதெறிக்கும் வேகத்தில் தப்பித்து ஓடுகிற 708 எனும் பெயருள்ள நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வேறு எந்த நட்சத்திரமும் போகாத வேகத்தில் நமது கேலக்ஸியை விட்டு விலகி ஓடுகிற இதன் மர்மத்தை ஆராய்ந்து வருகின்றனர்.


சீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு


சீனாவில் கட்டு மானத்திற்காக பள்ளம் தோண்டும் போது 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத் தில் உள்ள ஹெயுன் நகரத்தில் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது டை னோசர் முட்டை படிமங் கள் இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து தொல்பொருள் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 2 மணி நேர முயற்சிக்குப் பின் 43 முட்டை படிமங்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அனைத்து படிமங்களும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நகரத்தில் மட்டும் இதுவரை 17 ஆயிரத்திற்கு அதிகமான டைனோசர் முட்டை படிமங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இங்கு முதல் முறையாக 1996இல் ஒரு கட்டுமானத்திற்காக நிலத்தை தோண்டிய போது உருண்டை யான சில பொருட்கள் கிடைத்தன. முதலில் அது டைனோசர் முட்டை என தெரியாமல் குழந்தைகள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகம் உலகிலேயே அதிகமான டைனோசர் முட்டை படிமங்களை வைத்துள்ளது. இங்கு மொத்தமாக 10,008 முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
-விடுதலை,23.4.15