ஞாயிறு, 5 ஜூலை, 2015

புதிய பால்வீதி கண்டுபிடிப்புபெர்லின், ஜூன் 21_ பிர பஞ்சத்தின் மிகப் பிரகாச மான நட்சத்திரக் கூட் டத்தை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால் டோவின் செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தில் கணக் கிலடங்காத வகையில் `கேலக்ஸி எனப்படும் பால் வெளி - மண்டலம் அதா வது நட்சத்திரக் கூட்டங் கள் உள்ளன. இதுவரை கண் டறிந்த நட்சத்திரக் கூட்டங்களில், பிரகாசமாக அறியப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகப் பிரகாசமாக விளங்கும் நட்சத்திரக் கூட்டத்தை, போர்ச்சுக்கல் மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞா னிகள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு `சிஆர் - 7 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது, போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செல்லப் பெயர் ஆகும்.
சிஆர் - 7, நட்சத்திரக் கூட்டத்தில், நீலம் மற்றும் இளம்சிவப்பு நிறம் கொண்ட நட்சத்திரக் குழு மங்களும் இடம்பெற்றுள் ளன. இவை, வழக்கமான நட்சத் திரங்களுக்கு இடை யில்காணப்படுவதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-விடுதலை,21.6.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக