புதன், 22 ஜூலை, 2015

பூமியை போலவே 5 மடங்கு பெரிய கோள் கண்டுபிடிப்பு


பூமியை போல 5 மடங்கு பெரிய கோள் பால் வழி மண்டலத்தில்  இருப்பதை இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள்  கண்டு பிடித்துள்ளனர். இந்த கோள் புதனுக்கும், வெள்ளிக்கும் இடையே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த  கோளுக்கு பூமியை விட இரண்டரை மடங்கு வயது அதிகமாக இருக்கும் என்றும் அவர்களது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கோள்கள்  உருவாக்கம் பற்றி ஆராய உதவி புரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
விஞ்ஞானிகளின் அறிவிப்பின்படி நாசாவின் கெப்ளர் திட்டத்தின்படி சூரியனை பற்றிய முக்கிய கண்காணிப்பில் கெப்ளர் 444 என்ற கோள் சூரியனைப் போலவே  உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கெப்ளர் 444 என்ற அந்த கோள் 11.2 பில்லியன் ஆண்டுகள் முன்னதாக தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த பிராந்தியம்  20 சதவிகிதத்துக்கும் குறைவான வயதையே அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?
நாம் 2014 ஆம் ஆண்டைக் கடந்து  2015 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். பூமியானது தனது பாதையில்  சூரியனை ஒரு முறை சுற்றி முடித்தால் அதை ஓர் ஆண்டு என்று கணக்கு வைத்திருக்கிறோம். இது சாதாரண ஆண்டுகளில் 365 நாட்கள்.
லீப் ஆண்டு என்றால் 366 நாட்கள். என்றும் வைத்துக் கொண்டுள்ளோம்.  உண்மையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365. 242199  நாட்களை எடுத்துக் கொள்கிறது.
சூரியன் ஏதோ நிலையாக ஒரே இடத்தில் இருப்பதாகவும் பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாகவும் சிலர் நினைக்கலாம். அது அப்படி அல்ல. சூரியன் எல்லா கிரகங் களையும் அந்த கிரகங்களை சுற்றுகின்ற துணைக் கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் ()  மையத்தைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் எதுவுமே நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது.
ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தில் தான் சூரியன் அடங்கியுள்ளது. இந்த அண்டத்தில்  10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள் ளனர். (சூரியனும் ஒரு நட்சத்திரமே). நமது அண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்களுக்கு இடையில் வாயு, அண்டவெளித் தூசு ஆகியவையும் அடங்கியுள்ளன.
மாட்டு வண்டிச் சக்கரம் ஒன்றைத் தரையில் படுக்க வைத்து மேலிருந்த படி பார்த்தால் எப்படி இருக்கும்? நமது அண்டம் கிட்டத்தட்ட அந்த மாதிரியில் இருக்கிறது.  நமது சூரியன் கிட்டத்தட்ட நமது அண்டத்தின் விளிம்பில் உள்ளது.  அண்டத்துக்கு மய்யப் பகுதி உள்ளது. இந்த மய்யப் பகுதியை சூரியன் தனது பரிவாரங் களுடன் அதி வேகத்தில் சுற்றி வருகிறது.


சூரியனின் வேகம் குறித்து வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. எனினும் சூரியன் மணிக்கு சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்ப தாகக் கூறலாம். சூரியன் நமது அண்டத்தை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 24 கோடி ஆண்டுகள் ஆவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. சூரியன் இவ்விதம் ஒரு முறை சுற்றி முடிப்பதைத் தான் காஸ்மிக் ஆண்டு  என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக