புதன், 29 ஜூலை, 2015

இந்தியாவில் எய்ட்ஸ் நோயை கண்டறிந்த மருத்துவர் சுனிதி சாலமன் காலமானார்சென்னை, ஜூலை 29_ இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை முதன் முதலில் கண்டறிந்த டாக்டர் சுனிதி சாலமன் (74) சென்னையில் செவ் வாய்க்கிழமை காலமானார். சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு இருந்தார்.  சுனிதி சாலமன் சென் னை மருத்துவக் கல் லூரியில் நுண்ணுயிரியல் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரும், இவருடன் பணியாற்றிய வர்களும் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் முதன் முதலில் எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.  பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆறு பேர்களின் ரத்த மாதிரியைப் பரிசோதித்ததில் எய்ட்ஸ் தொற்று இருந்ததைக் கண்டறிந்தனர். எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக இவர்கள் கூறியதை யாரும் முதலில் ஏற்றுக் கொள்ள வில்லை.  எனவே, ரத்த மாதிரிகள் வேலூர் சிஎம்சி கல்லூரிக்கும், தொடர்ந்து அமெரிக்காவுக்கும் அனுப்பி, உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் எய்ட்ஸ் நோய் குறித்த ஆராய்ச் சிகள், நோய்க்கான மருத் துவம், மருத்துவப் பணியா ளர்களுக்குப் பயிற்சி உள்ளிட்ட முன்னேற் றங்கள் ஏற்பட்டன. அரசு மருத்துவமனையில் பணி யாற்றிய அவர், எய்ட்ஸ் நோயாளிகளுக்காக சேவையாற்ற விரும்பி, 1996-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பிறகு, எய்ட்ஸ் நோயாளிகளுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி சேவையாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை கால மானார். இவரது கணவரும் இதய சிகிச்சை நிபுணரு மான விக்டர் சாலமன் 2006-ஆம் ஆண்டு காலமானர். இவர்களது மகன் டாக்டர் சுனில் சுகாஸ் சாலமன் ஆவார்.
- விடுதலை,29.7.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக