ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பாலூட்டிகளுக்கும் மனிதனுக்கும் என்ன ஒற்றுமை ( படிம வளர்ச்சி) -4

R Chandrasekaran R Chanrasekaran
18.8.19 முகநூல் பதிவு


தோழர்களே விலங்கியலின் தோற்றம் குறித்த நான்காவது பதிவு
பாலூட்டிகளுக்கும் மனிதனுக்கும் என்ன ஒற்றுமை என்பதை சற்று பார்க்கலாம்
நாமும் மற்ற பாலூட்டும் விலங்குகளை போலவே குட்டி போட்டு பாலூட்டும் தன்மையை கொண்டவர்கள் பாலூட்டிகள் அனைத்தும் வெப்ப ரத்த வகையை சேர்ந்தவை
ஆம் பாலூட்டிகளின் ரத்த அளவின் வேறுபாட்டை அதாவது உடலின் வெப்பத்தை நாம் நுரையீரல்கலின் மூலமும் தோல்களில் உள்ள வியர்வை சுரப்பிகளின் மூலமும் சரி படுத்திக்கொள்கிறோம்
உரோமம் கொண்ட பாலூட்டிகள்: நுரையீரலின் மூலமும் அல்லது வாய்வழியாக வெப்பத்தை வெளியேற்றுகின்றன
உதாரணமாக நாய்களை கவனித்தால் கோடைகாலங்களில் அது எப்போதும் நாக்கை தொங்க விடுவதையும் வாய் வழியாக இரைப்பு ஏற்படுத்துவதையும் பார்க்கலாம் காரணம் அதற்கு வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால்நாக்கின் வழியாக வெப்பத்தை வெளியேற்றுகின்றன
[
இதில் ஊர்வன் வேறுபடும் அவை வெப்பம் அடைந்தால் நீரில் இறங்கி தமது வெப்பத்தை தணித்துக்கொள்ளும் குளிர் ஏற்பட்டால் வெயிலில் படுத்து உடல்சூட்டை உருவாக்கிக்கொள்ளும் எனவே இவற்றை குளிர் ரத்த பிராணிகள் என்று அழைக்கிறோம்]
அது போல் மனித குரங்குகளுக்கும் மனிதனுக்கும் மிக நெருங்கிய தோற்றமும் ஜெனடிக் தொடர்பும் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே
அதுபோல் நம் வாயின் இருபுறமும் இருக்கும் கோரை பற்கள் இப்போதும் லேசாக தனித்தன்மையுடன் இருப்பதையும் அதைகூர்ந்து பார்த்தால் வேட்டை விலங்குகளின் கோரைபற்களை ஒத்ததாக இருப்பதையும் காணலாம்
அதுபோல் மனிதக்குழந்தையின் கரு வளர்ச்சியின் போது அது வாலுடன் இருப்பதையும் அதற்கு செவுல்கள் உருவாகி மறைவதையும் காணமுடியும்
இதுபோல் இன்று வாழும் மனிதன் மற்றும் பாலூட்டிகளுக்கும் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த பாலூட்டிகளின் மூதாதைக்கும் மரபுத்தொடர்பு நிலவுவதையும் சமீப கால ஆய்வுகள் உறுதி செய்கிறது
இவை எல்லாம் விலங்கு உலகுக்கும் நமக்குமான தொடர்புகளை உறுதி செய்கிறது
இவை எல்லாம் எப்படி பரிணாம விதியை உறுதி செய்கிறது?
பரிணாம விதியை டார்வின் உருவாக்கினாரா? இல்லை கண்டு பிடித்தார்.
உயிரினங்கள் எப்படி பல்கி பெருகுகிறது அவற்றில் சில அழிகிறது சில மேம்பட்ட வளர்ச்சியை அடைகிறது இதன் காரணம் என்ன?
பரிணாம வளர்ச்சி என்பது சில காலத்துக்கு மட்டுமே உரியதா? அல்லது அது எக்காலத்துக்கும் பொருந்துமா?
அப்படியானால் இன்று ஏன் குரங்குகள் மனிதனாக மாறவில்லை நாம் பார்க்கும் விலங்குகள் அப்படியேதானே இருக்கின்றன?
வலிமையானது வாழும் என்றார் டார்வின் ?[ அப்படி டார்வின் கூறவில்லை இந்த வார்த்தை ஐரோப்பியர்கள் டார்வினியத்தை புரட்டி திருத்தி ஜெர்மானிய ஆரிய கோட்பாட்டை நிறுவ ஜெர்மானியர்கள் செய்தது]
வலிமையானது வாழும் என்று டார்வின் எங்கும் கூறவில்லை கூறப்போனால் டார்வினின் பரிணாம விதியின் படி பார்த்தால் வலிமையானது விரைவில் அழியும் வாய்ப்பே அதிகம்.
டைனோசர்கள் மிக வலிமையானதுதான் டைனோசர்களின் காலத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் 20 கோடி ஆண்டுகள் அவை இப்பூமியை ஆண்டன. பின் ஏன் எவை எந்த சந்தடியும் இன்றி அழிந்தன?
டார்வினின் பரிணாமவிதியை மிக சரியாக நாம் புரிந்து கொண்டால் நமக்கு மேற்கண்ட கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைக்கும்
பெருவாரியாக நாம் அனைவரும் மார்க்சியத்தையோ பெரியாரின் கருத்துக்களையோ, உயிரியல் வரலாறு சார்ந்த உண்மைகளையோ தப்பும் தவறுமாக புரிந்து கொள்வதால் அடிக்கடி தடுமாறுகிறோம்
சரி தவறாகவும் தவறு சரியாகவும் நமக்கு தோன்றுகிறது
நமது நாடு ஏறத்தாழ 500 ஆண்டுகளாக ஒருசீரான வளர்ச்சியை அடையாத காரணத்தால் இங்கு பிற்போக்கு தனமே மேலோங்கி இருக்கிறது
இதன்காரணமாக நவின அறிவியல் சார்ந்த ஜனநாயக கண்ணோட்டம் என்பது இல்லாமல் சாதிய மதவாத கருத்துக்கள் நம்மை ஆள்வதால் நமது பொது அறிவு மிகவும் பின் தங்கி போய்விட்டது
இபோக்குகளை நாம் முறியடிக்க வேண்டுமானால் அறிவியல் சார்ந்த உண்மைகளை கற்பதும் அந்த உண்மைகளின் அடிப்படையில் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதும் வேண்டும்
கீழே உள்ள படம் நான்கு கால்கள் கொண்ட திமிங்கிலம் இது தரையில் நடக்கவும் தண்ணீரில் நீந்தவும் திறமை கொண்ட திமிங்கலத்தின் மூதாதை இதன்காலம் 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது
தொடரும்

ஆரம்பகால இருவாழ்விகளும் ஊர்வனக்கூட்டமும் (உயிர்களின் படிம வளர்ச்சி) -3



ஆரம்பகால இருவாழ்விகள் 37 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருவாழ்விகளின் உயரிய தன்மையை பெற்று இருந்த போதும் இவைகளின் சிறப்பே தோல்வழியாக சுவாசித்தலும் குறையுடைய நுரையீரல்களும் இவற்றை நீர் நிலைகளில் இருந்து தூரமாக செல்ல அனுமதிக்க வில்லை
ஏனென்றால் ஈரப்பதம் இல்லாவிட்டால் தோல் வறண்டு விடும் செவுள்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும்
இந்த ஆதி மூதாதைகளின் வழியில் இன்னும் சிறப்பு பெற்ற சிறந்த நுரையீரல்களை பெற்ற நிலப்பரப்பில் எங்கும் செல்லும் திறனுடன் உருவானதுதான் ஊர்வனவாகும்
இந்த ஊர்வன க்கூட்டம் ஒரே தன்மை கொண்டதாக இல்லாமல் பல்வேறு வகைகளாக பிரிந்தன
இதில் சினாப்சைடா எனும் ஊர்வனக்கூட்டம் பாலூட்டிகளின் பண்புகளை கொண்டதாக இருந்தது
டயாப்சைடா எனும் கூட்டம் ஊர்வன வகைகள் மற்றும் பறவைகளின் முன்னோடியாக இருந்தது
இந்த டயாப்சைடா பிரிவில் இருந்து தோன்றியதே அர்ச்சோசவுரியா எனும் முதலை தொகுதியின் முன்னோர்கள் ஆவார்கள்
டையாப்சய்டாவில் இருந்து பிரிந்த ஆர்தினிசியா எனும்பிரிவில் இருந்து டைனோசர்களும் அதில் பிளவு ஏற்பட்டு சவுரிசியா எனும் பறவைகளின் முன்னோர்களும் உருவானார்கள்
டைனோசர்கள் அழிந்த பின்புதான் அல்லது அதில் ஒரு பிரிவுதான் நவீன பாலூட்டிகளும் பறவைகளும் என நம்பி வந்த உயிரியல் வல்லுனர்களின் நம்பிக்கை புதிதாக கிடைத்த சினாப் சைடுகளின் பாசில்கள் குழப்பியது
இதில் பலர் டார்வினின் இயற்கை தேர்வை பரிணாம வளர்ச்சியை கேள்விக்குள்ளாக ஆரம்பித்தனர் அது தவறு என்றும் விவாதித்தனர்
நாம் இவர்களுடன் விவாதிப்பதன் வாயிலாக டார்வினின் இயற்கை தேர்வை பரிணாம விதியை இன்னும் ஒரு உயர்ந்த மட்டத்துக்கு எடுத்தெச்செல்ல முடியும்
பொதுவாக முதலாளிய பிற்போக்காளர்களும் மதவாத சிந்தனையாளர்கலும் இயற்கையின் வரலாற்றை உயிரின வரலாற்றை சமூக வரலாற்றை அதன் ஒழுங்கு முறையான விதிகளை மறுக்கவே முயல்கிறார்கள்
\
காரணம் நம்மால் எதையும் தீர்மானகரமாக புரிந்து கொள்ள முடியாது அவை அவை தான் தோன்றித்தனமாக அல்லது இறைவனின் விருப்பத்துக்கு ஏற்ப படைக்கப்படுகிறது என நிறுவ முயல்கிறார்கள்
இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளும் யாரும் ஆய்வுகளின் பல்வேறு கூறுகளை தொகுத்து ஒரு விலங்குலக வரலாற்று தொகுப்பையோ மனித சமூக தொகுப்பையோ உருவாக்கமுடியாது
இயற்கையை ஒரு முழுமையாகவும் அதன் பல்வேறு கூறுகளை பிரித்தும் கோர்த்தும் ஒரு முழுமையை உருவாக்கமுடியா விட்டால் அந்த கோட்பாடு முழுமை பெறாது
இப்படி முழுமை பெற்றகோட்பாடுகள் ஆளும் வர்க்கத்துக்கு தேவை அற்றது ஏனென்றால் அவை அறிவை சமூக மாற்றத்துக்கு அல்லாமல் லாபத்துக்காவே பயன்படுத்துகிறார்கள்
ஆனால் நாம்சமூக மாற்றத்தை இலக்காக கொண்டிருப்பதால் நமக்கு ஒரு முழுமையான அறிவியல் தத்துவம் தேவையாக இருக்கிறது எனவே நாம் தத்துவ துறைகளில் ஒரு முழுமையை அதாவது அனைத்தையும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைத்து ஒரு முழுமையாக புரிந்து கொள்ள முயல்கிறோம்
இந்த முழுமையான புரிதல் தான் அனைத்தையும் மாற்றி அமைக்க முடியும் எனும் நம்பிக்கையை உறுதியை நமக்கு வழங்குகிறது
எனவே நாம் டார்வினின் பரிணாம விதியின் சிறப்பை அதன் அனைத்தும் தழுவிய தன்மையை உயர்த்திப்பிடிக்கிறோம் அதை பாதுகாப்பதும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதும் நமது கடமையாகும்
இப்படத்தில் காணப்படும் விலங்குகள் சினப்சைட் எனும் ஊர்வனவாகும் இவை ஊர்வனவாக இருந்தாலும் பாலூட்டிகளுடன் நெருங்கிய தன்மையை கொண்டவை
டார்வினின் பரிணாம விதி எப்போதும் பொருந்தும் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்
தொடரும்

பருமனான உடலை குறைக்கும் பாக்டீரியாக்கள்!

மனிதர்களின் உடல் நலமாக இருக்க, வயிற்றில் வாழும் பல்லாயிரம் வகை நல்ல நுண்ணுயிரிகள் உதவுகின்றன. அவற்றில், சில பாக்டீரியா வகைகள் இருந்தால், உடல் பருமன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை இருக்கும் என்பதை, சமீபத்தில், 'சயின்ஸ்' இதழில் வெளியான ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள யூடா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், சோதனைக்குள்ளாகும் ஆய்வக எலிகள், பருமனாக இருப்பதை கவனித்தனர். இது ஏன் என்று ஆராய்ந்த போது, அவற்றின் வயிற்றில், 'குளோஸ்ட் ரிடியா' என்ற வகை பாக்டீரியாக்கள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த வகை பாக்டீரியாக்கள் வயிற்றில் இருக்கும் எலிகள், ஆரோக்கியமான எடை யுடன் இருப்பதையும் அவர்கள் உறுதிப் படுத்தினர்.குளோஸ்ட்ரிடியா பாக்டீரி யாக்கள், எலிகளின் வயிற்றில் வினைபுரிந்து, கொழுப்பை நன்கு செரிமானம் ஆகும்படி செய்கின்றன. இதனால், அவை இருக்கும் எலிகள் பருமனாவதில்லை என்பதோடு, எலிகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அவை வலுவாக்குகின்றன.
அதேபோல, பருமனாக இருக்கும் மனிதர்களின் வயிற்றிலும் குளோஸ்ட்ரிடியா பாக்டீரியாக்கள் இருப்பதை, மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதற்காக, குளோஸ்ட் ரிடியா பாக்டீரியாக்களை மனிதர்கள் வயிற் றில் செலுத்துவதை விட, அவை கொழுப்பை எப்படி கையாள்கின்றன, என்ன வினை புரிந்து நோய் எதிர்ப்பை வலுப்படுத்துகின்றன என்பதை கண்டறிந்தால், அந்த வினைகளை உண்டாக்கும் மருந்துகளை தந்து, மனிதப் பருமனை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பை அதிகரிக்க முடியும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- விடுதலை நாளேடு, 15.8.19

நுண் துகள்களால் உருவாகும் முத்து!

சிப்பி என்பது நன்னீர் மற்றும் கடல் நீர் ஆகிய இரண்டிலும் காணப்படும் இருவோட்டுடலி வகுப்பைச் சேர்ந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பி களின் ஓடு இரு பகுதிகளால் ஆனது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக் கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். நீரில் இருக்கும்போது உள்ளிழுத்துக்கொள்கிறது சிப்பி. அதன் பருவகாலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இடும். முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசிமுனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது. இரண்டு வாரங்களில் நீந்தத் தொடங்கும். ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும்.
ஆபரணங்களில் மின்னும் மிக நல்ல முத்துக்கள் சிப்பிகளிலிருந்தே எடுக்கப்படுகின்றன. முத்து இருவாயில் () மெல்லுடலி உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக் குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அந்த நுண்துகள்களின் மீது பூசப்படுகின்றது. இச்செயல்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதிப்புவாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. சிலர் தூத்துக்குடி போன்ற பகுதிகளில் கட லில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருக் கின்றனர். சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங் களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன.
சிப்பிகள் உலகின் பல பகுதி மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும்.
இதில் புரதச்சத்தும் குறைந்த கொழுப்பும் உள்ளதால் உடல்நலனுக்கு ஏற்றது.
 - விடுதலை நாளேடு,15.8.19

சனி, 17 ஆகஸ்ட், 2019

அணுக்களின் வேறுப்பட்ட சிறப்பு தன்மைகள்


📷
தோழர்களே அணுவை பற்றிய 6வது பதிவு அணுக்களை வகைப்படுத்தும் மெண்டலீப் அட்டவணை என்பது மிக மிக சிறப்பான ஒரு வடிவமைப்பு
இதில் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் வரிசைப்படுத்தி இருக்கிறார்கள் இந்த ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு காரணம் உண்டு
இதில் வாயுக்கள் ,உலோகம் ,அலோகம் உலோகப்போலிகள், கதிர்வீச்சை வெளியிடும் தனிமங்கள் என்று ஒவ்வொரு வகையையும் பிரித்துக்காட்டுகிறார்கள்
இந்த வரிசைகளை ஆய்வு செய்தால் மனித உழைப்பை எண்ணி பிரமித்து போக வேண்டிய அளவுக்கு இந்த வரிசைபடுத்தலில் செய்திகள் இருக்கிறது
இந்த மெண்டலீப் அட்டவணையில் முதல் இடத்தில் இருப்பது ஹைட்ரஜன் ஆகும் இயற்கை தனிமங்களில் கடைசியில் இருப்பது யுரேனியம் ஆகும்
ஒரு கைட்ரஜன் அணுவை விட 238 மடங்கு ஒரு யுரேனியம் அணு அதிக எடை கொண்டது ஆனால் வெறும் மூன்றில் இருந்து நான்கு மடங்கு மட்டுமே அளவில் பெரியது என்றால் ஆச்சரியம்தானே
இப்படி நெருக்கமாக இருக்க காரணம் யுரேனியத்தை சுற்றும் 92 எலக்ட்ரான்களும் அதன் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு மிக நெருக்கமாக அழுத்தப்படுகிறது
இந்த நிலையின் காரணமாகவே ஒரு ஹைட்ரஜன் அணுவைப்போல் எலக்ட்ரான்கள் ஒரே வட்டப்பாதையில் மையத்தை சுற்றி சுழல்வது இல்லை,
அப்படி வட்டமாக சுற்றினால் எலக்ட்ரான்கள் மையத்துடன் தமக்கு உள்ள உறவை இழந்து விடும் அணுக்கள் தமது நேர்மின்னோட்ட ஆற்றலுக்கு ஏற்ப எலட்ரான்களை பிடித்து வைத்துக்கொள்ள முடியாது
எனவே அதிக எலட்ரான்களும் இருக்கவேண்டும் அனைத்தும் மையத்துடன் நெருங்கிய உறவை பேண வேண்டும் என்றால் எலட்ரான்கள் வட்டமாக சுற்றக்கூடாது
எனவே எலக்ட்ரான்களின் ஒவ்வொரு கூடும் தம்மை மைய்த்தடன் நெருக்கமாக இணைக்கூடிய சுற்றும் பாதைகளை தேர்வு செய்து சுற்றி வருகின்றன
இவற்றை ஆய்வாளர்கள் நான்காக வகைப்படுத்தி இருக்கிறார்கள் அது SPDF எனும் நான்கு வழிகளாகும்
S என்பது வட்டப்பாதையாகும் Pஎன்பது இருகோண வழியாகவும் Dஎன்பது நாற்கோண வழியாகவும் F என்பது அறுங்கோண வழியாகவும் அணுக்களின் மையத்தை சுற்றும் வழியாக அமைகின்றன
இதில் ஹைட்ரஜன் ஒரே ஒரு எலக்ட்ரானை பெற்று இருப்பதால் அது வட்டப்பாதயில் சுழல்கிறது
ஆக்சிஜன் 8 எலக்ட்ரான்களை பெற்று இருப்பதால் அதன் எலக்ட்ரான் கள் S அதன் முதல் வட்டமாகவும் P இரண்டாம் வட்டம்என்ற இரண்டு வழிகளில் ஆக்சிஜனின் மையத்தை சுற்றி வருகின்றன
ஹீலியம் இரண்டு எலக்ட்ரான்களை மட்டுமே கொண்டு இருப்பதால் அதற்கு முதல் வட்டமான S வட்டமே போதுமானது
யுரேனியம் ஏழு எலக்ட்ரான் அடுக்குகளை பெற்று இருப்பதால் SPDF எனும் நான்கு முறைகளையும் அதன் எலக்ட்ரான்கள் பயன்படுத்துகின்றன
எனவேதான் ஒவ்வொரு அணுவும் மின் ஆற்றலில், நிறையில், மற்ற அணுக்களுடன் இணைந்துஇயங்குவது ஆகிய அனைத்திலும் ஒவ்வொரு சிறப்பு தன்மையை பெற்று திகழ்கிறது
இந்த அணுக்களின் சிறப்பு தன்மைதான் கோடான கோடி பொருட்கள் இப்பிரபஞ்சம் முழுவதுதும் பரவிக்கிடக்க காரணமாகும் இந்த சிறப்பு தன்மை இல்லை என்றால் வெறும் 92 இயற்கைபொருட்களுக்கு மேல் எதுவும் இருந்து இருக்காது
நாம் காணக்கூடிய வண்ணங்கள் சாயங்கள் ,வேறுப்பட்ட பொருட்கள் தங்க வெள்ளி தண்ணிர் என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் உருவாக்குவது அணுக்களின் வேறுப்பட்ட சிறப்பு தன்மைகளின் சிறப்பே காரணம்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

உயிரினம் எப்படி தோன்றியது (படிமவளர்ச்சி) - 1&2



இந்த உலகில் உயிரினம் எப்படி தோன்றியது அது கடவுளின் படைப்பா இயற்கையின் உருவாக்கமா ? டார்வினின் பரிணாம விதி சரிதானா ? பிறகு ஏன் இப்போது குரங்குகள் குரங்குகளாகவும் ,மனிதர்கள் மனிதர்களாகவும் இருக்கிறோம்?
மேற்கண்ட தகவல்கள் குறித்து ஒரு அறிவியல் பார்வையை நாம் செலுத்தப்போகிறோம் ஆர்வம் உள்ளவர்கள் பின்தொடருங்கள்
நாம் பொதுவாக விலங்குலகை வகைப்படுத்தும் போது அவற்றை இரண்டாக பிரிக்கிறோம் அது முதுகெலும்பு உள்ளவை ,இல்லாதவை,
இதில் முதுகெழும்பு இருப்பவை வெறும் 10% முதுகு எழும்பு இல்லாதவை மீதி 90%
இந்த முதுகு எழும்பு உள்ள விலங்குலகில் இருந்துதான் நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறோம் எனவே நாம் எடுத்துக்கொள்ளப்போவது முதுகெலும்பு உள்ள விலங்குகளின் பரிணாம வளர்ச்சியைத்தான்
இந்த பூமி உருவாகி ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதை யுரேனிய அணுச்சிதைவில் இருந்து வெளிப்படும் கதிவீச்சின் அளவை வைத்து முடிவு செய்கிறார்கள்
ஆனால் முதுகு எலும்பிகள் வெறும் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாகி இருப்பதை விலங்குலகின் பாசில்கள் உறுதி செய்கின்றன
முதலில் விலங்குலம் நீரில் இருந்து தான் உருவாகி இருக்கிறது என்பதை அதன் தொடர் வளர்ச்சி உறுதி செய்கிறது இதை அயோனியாவின் தேலஸ் போன்றவர்கள் கிமு 600களில் அணுமானித்தார்கள்
இந்த அணுமானத்தை உறுதி செய்யும் விதமாக நமக்கு தொடர் ஆதாரங்கள் நீருக்கும் நமக்கும் மீனுக்கும் நமக்குமிருக்கும் தொடர்புகளை உறுதி செய்யும் விதமாக கிடைத்து வருகின்றன அவற்றை பார்க்கலாம்
நாம் விலங்குலகின் அதாவது முதுகு எலும்பு உள்ளவைகள் குறித்து பார்ப்போம் இவை ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது ஆனால் ஆய்வாளர்கள் இதை ஆறாக பிரிக்கிறார்கள்
அதாவது மீன் கள்,இருவாழ்விகள் , ஊர்வண , பறவைகள் , பாலூட்டிகள் இந்த ஐந்து வகைகளுக்கும் தாடைகள் இருக்கிறது இத்துடன் தாடை இல்லாத ஒரு மீன் வகையை நாம் ஆறாவதாக சேர்க்கலாம்,
இந்த தாடை இல்லாத மீன் வகை தான் முதுகு எலும்பு இருப்பவைக்கும் இல்லாதவைக்குமான ஒரு பொது பண்பை கொண்டிருக்கிறது அதாவது பூச்சியினங்களை போல் மேல்தாடை கீழ் தாடை இல்லாமல் உறிஞ்சும் தன்மை கொண்டவை இந்த தாடை இல்லாத மீன்கள்
இந்த தாடை இல்லாத மீன்கள் இன்றும் ஒரு ஒட்டுண்ணியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
சரி முதுகு எலும்பு இல்லாதவைக்கும் இருப்பவைக்கும் என்ன வேறுபாடு முதுகு எலும்பு இல்லாதவகைகளுக்கு எலும்பு பகுதி அதன் உடலின் மேற்புறத்தில் இருக்கும்
நீங்கள் பூச்சிகளை நசுக்கும் போது அவற்றின் மேற்பகுதி கடினமாக இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள் அல்லது வண்டுகள் பறக்கும்போது பார்த்தால் அதன் மேலோடு கடினமானதாகவும் அந்த கடினமான இரண்டு இறகுகளுக்கு அடியில் மென்மையான இரண்டு இறகுகள் இருப்பதை பார்க்கலாம்
இந்த முதுகு ஓடுகளை கொண்ட பூச்சி இனங்களில் இருந்துதான் ஆரம்பகால முதுகு எலும்பிகள் தோன்றின அவைகளுக்கு நுரையீரல்களும் இருந்தன
இந்த ஓடுகளை கொண்ட ஆரம்பகால உயிரிகளில் இருந்துதான் நவின மீன்களும் ஊர்வன கூட்டமும் உருவானது
இது 60 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கம்பேரியன் காலத்தில் தான் பாதுகாப்பு கவசமாக ஓடுகளை கொண்ட உயிரினம் பரவலாக தோன்றின
இந்த ஓடுகளை கொண்ட உயிரினம்தான் இன்றைய மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள் , பாலூட்டிகள் அனைத்துக்குமான பொது மூதாதைகள்
இன்றும் கூட உடம்பின் மேல் ஓடுகளை கவசமாக கொண்ட மீன்கள் இருப்பதை கடல் ஓரங்களில் வசிப்பவர்கள் பார்க்கலாம் நான் அப்படி மீன்களை நேரில் கண்டு சாப்பிட்ட அனுபவமும் உண்டு
இந்த கவச ஓடுகளை கொண்ட பொது மூதைகளில் இருந்து உயிரினம் இரண்டாக பிரிந்தது ஒன்று செவுள்களை கொண்ட நீரில் மட்டுமே வாழும் தகுதி உள்ள மீன்கள் இன்னொன்று நீரிலும் நிலத்திலும் வாழும் திறன் கொண்ட நுரையீரல் வளர்சியையும் கொண்டிருந்த மீன்கள்
இந்த நுரையீரல் மீன்கள் இன்றும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் மட்டும் வாழ்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
அப்படி ஒரு மீனைத்தான் கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள் ஆனால் என்ன அது ஆரம்ப காலத்தில் பெற்று இருந்த மேலோடுகளை இன்று இழந்து விட்டு முதுகு எலும்பியாகமாறி இருக்கிறது
இது நீரிலும் நிலத்திலும் வாழும் திறன் கொண்ட நுரையீரலை கொண்ட மீனாகும்
இன்னொன்று மனிதன் மற்றும் கோழிகளில் கரு வளரும்போது செவுள்கள் உருவாகி மறைகின்றன என்பது நாம் நீர்வாழ் மீன்களின் வம்சாவழிதான் என்ற பழைய அடையாளத்தை நினைவூட்டுகின்றன
தொடரும்

வண்டு இனங்களுக்கு இறக்கைகளுக்கு மேல் கனமான ஒடு போன்ற அமைப்பு இருக்கும் இது அதன் மென்மையான உடலையும் இறகையும் பாதுகாக்கும் அமைப்பாகும் அதைத்தான் கீழே காண்கிறீர்கள் அதாவது உடலுக்கு வெளியே எலும்பமைப்பு
[
](https://www.facebook.com/photo.php?fbid=169234244239982&set=a.104351330728274&type=3&eid=ARB5S2-wFK7zMKevJFdd0g5hoKACPD_iR_WGi0C8nRYpNrMzpJLzMGOxy1e-IVJIjDO3h7NhODupL0AL)
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முக நூல் பதிவு , 16.8.19


தோழர்களே விலங்கியல் குறித்த 2வது பதிவு
முதல் விலங்கினங்கள் முதுகெலும்பு அற்றவைகளில் இருந்துதான் முதுகெலும்பு உள்ளவைகளாக மாறின
முதல் நீர்நில வாழ்விகளின் தோல்பகுதிதான் எலும்பு ஓடுகள் கொண்டதாக இருந்தன அதாவது ஆமை ஓட்டைபோல் ,இன்றும் கூட உடல் முழுவதும் ஓடுகளால் மூடப்பட்ட தலையின் முன் பகுதிகளில் இரண்டு கூரான கொம்புகளை கொண்ட மீன்களை நாம் வங்காள விரிகுடா கடல்களில் காணலாம்
இன்று கூட ஆஸ்திரேலிய சதுப்பு வெளிகளில் மட் ஸ்கிப்பர் எனும் நீர் நில வாழ்விகள் மிக அதிகமாக வாழ்வதை நாம் காணலாம் இவை தோல்கள் மூலமாகவும் செவுள்கள் மூலமாகவும் சுவாசிக்க கூடியவை
தரையில் மிகவேகமாக ஓடக்கூடிய இந்த மீன்கள் மண்ணைத்தோண்டி தங்கள் இனப்பெருக்க குழிகளை அமைப்பது வேடிக்கையாக இருக்கும்
முதல் நீர்நில வாழ்வியான நுரையீரல் மீன்கள் தங்கள் தோல்பகுதிகளைகடினமான ஓட்டு அமைப்பால் பெற்று இருந்தன முழுமையான வளர்ச்சி அடையாத நுரையீரல்களையும் முழு வளர்ச்சி அடையாத துடுப்பு போன்ற கால்களையும் கொண்டு இருந்தது இவ்வகை உயிரினம் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டது
இந்த கடின ஓடுகளை கொண்ட நுரையீரல் மீன்களின் வம்சாவழியாக உருவானவைதான் உண்மையான இருவாழ்விகள் இவை 370 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானவை
கடினமான தோல் ஓடுகளுக்கு பதிலாக மென்மையான ஈரப்பதம் உள்ள தோல்களின் வழியாக சுவாசிக்கும் திறனை பெற்றும் துடுப்புகளுக்கு பதிலாக நான்கு கால்களையும் இவை பெற்று இருந்தன
தோல் கவச ஓடுகளுக்கு பதிலாக முதுகு எலும்புகளையும் தசைகளால் ஆன கால்களுக்கு மாறாக எலும்புகளால் ஆன கால்களையும் இவை பெற்று இருந்தன
அதேவேளை இந்த இருவாழ்விகள் நீருக்கு அருகாமையில் மட்டுமே வாழும் திறனை பெற்று இருந்தது தமது மென்மையான சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்து இருந்தால்தான் தோல்கள் வழியாக சுவாசிக்க முடியும் நுரையீரல்களோ தனித்து தரையில் வாழும் அளவுக்கு இன்னும் வளர்ச்சி பெறாமல் இருந்தது
குளிர் இரத்தவிலங்குகளான இவைகள் தம் உடம்பின் வெப்பத்தை குறைக்க நீரை சார்ந்தே வாழ் வேண்டி இருந்ததுவெப்பம் குறைந்த காலை மாலை வேளைகளில் இவை நீர் நிலைகளை விட்டு வெளியே
வந்து தமக்கான உணவை வேட்டையாடின
இந்த இருவாழ்விகளில் இருந்துதான் இன்னும் மேம்பாட்டு அடைந்த வலிமையான கால்களையும் சிறந்த நுரையீரல்களையும் தோல்வழியாக சுவாசிக்கும் தேவையை இழந்ததால் பாதுகாப்பான சொரசொரப்பான தோல்களையும் கொண்ட ஊர்வன கூட்டம் உருவாகியது
இந்த ஊர்வனக்கூட்டத்தின் தலை சிறந்த உருவாக்கமாக மிகப்பெரிய பல்லிக்கூட்டமான 40 மீட்டர் உயரம் கொண்ட டைனோசர்களும் இவைகளை ஒத்த 100 அடி நீளம் கொண்ட முதலைகளும்உருவாகின
இந்த டைனோசரின் காலத்தின் மத்தியில்தான் ஊர்வன வற்றில் இருந்து பறக்கும் திறன் கொண்ட பறவைகளின் மூதாதைகள் உருவாக ஆரம்பித்தன
மனிதர்களாகிய நாம் நம்மை உலகின் எஜமானனாக கடவுள் படைத்ததாக நமக்காகவே இபேரண்டம் படைக்கப்பட்டதாக நாம் கற்பனை செய்து கொள்கிறோம்
ஆனால் இந்த பிரபஞ்ச படைப்புகளில் நாம் ஒரு சிறிய உருவாக்கம்தான் டைனோசர்களின் வாழ்வோடு நம் வாழ்வை ஒப்பிட்டால் நமது காலம் ஒரு இரண்டு லட்சம் ஆண்டுகள்தான் அதற்குள் நாம் இப்பூமியின் இயற்கை வளத்தின் பெரும் பகுதிகளை நாசமாக்கி வருகிறோம்
ஆனால் டைனோசர்கள் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகள் இப்பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தின
சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது பாஞ்சியா கண்டத்தில் இருந்து இந்திய துணைக்கண்டம் பிரியும் அதேகாலத்தில் டைனோசர்களும் அழிந்தன
இதற்கு காரணம் ஒரு மிகப்பெரிய விண்கல் தாக்கியதில் அதன் தூசுப்படலம் பூமியை மூடியதால் சூரியனின் வெப்பம் பூமியை அடையாத காரணத்தால் பூமியில் பெரும் பல்லிகளிகளின் இருப்பிடமாக இருந்த பெரும் காடுகள் அழிந்ததால் அவற்றை சார்ந்து வாழ்ந்த பெரும்பல்லிகள் கூட்டமும் அழிந்தன
ஆனால் உண்மையில் அப்பல்லிகள் வாழ்ந்து இருந்தால் பாலூட்டி இனம் என்பதே உருவாக வாய்ப்பில்லாமல் போய் இருக்கும் பாலுட்டிகளில் ஒருவகையான நாமும் இப்பூமியில் உருவாகி மற்ற உயிரினங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிய சாதனைகளை செய்ய நமக்கு வாய்ப்பு இருந்து இருக்காது
இன்று வாழும் முதலைகள் 20 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இப்பூமியில் வாழ்ந்து தம் சந்ததிகளை பாதுகாத்து வருகிறது
உண்மையாகவே முதலைகள் ஒரு அபூர்வ பிறவியாகும் அது பலமணி நேரங்கள் நீருக்கு மேல் வராமல் சுவாசிக்காமல் ஆடாமல் அசையாமல் தனது இரைக்காக நீரில் மிதந்து கொண்டோ நீருக்குஅடியில் பதுங்கி இருக்கவோ அதனால் முடியும்
இன்றைய முதலைகளில் 24 அடி நீளம் கொண்ட முதலைகள் கூட ஆப்பிரிக்க நைல் நதிகளில் வாழ்கின்றன
அமெரிக்க உப்பு நீர் முதலைகள் பல நூறு கிலோமிட்டர் தொலைவில் இருக்கும் தீவிக்கூட்டங்களில் கூட சென்று குடியேறி வாழ்வது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகும்
தொடரும்
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முக நூல் பதிவு , 17.8.19

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

73 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போலவே உள்ள 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு



பூமியை போலவே உள்ள 3 புதிய கிரகங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத் தகுந்த அளவிற்கு இந்த 3 கிரகங்களிலும் தட்பவெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரியனை நேரடியாக சுற்றி வரும் புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய 4 கோள்களை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, அய்ரோப்பியா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மய்யங்கள் ஈடுபட்டு வருகின்றன.

சூரிய குடும்பத்திற்கு வெளியே மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்ட நாசா அதற்காக டெஸ் எனப்படும் வெளிக்கோள்களை ஆய்வு செய்யும் செயற்கைக் கோளை கடந்த ஆண்டு விண்ணிற்கு அனுப்பியது. ஓராண்டு ஆய்விற்கு பிறகு பூமியை போன்று புதிதாக 3 கிரகங்கள் இருப்பதை இந்த செயற்கை கோள்கள் கண்டு பிடித்துள்ளது.  -

TOI-270 B, C,D என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகங்கள் பூமியின் அளவை விட 3. 5 எடை அளவு அதிகம் கொண்டது என தெரியவந்துள்ளது.

மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத்தகுந்த  அள விற்கு இந்த 3 கிரகங் களிலும் தட்ப வெப்பம் உள்ளதாகவும் தெரியவந்துள் ளது. இந்த செயற்கைகோள் மூலம் வானம் போன்ற படலங்கள் தென்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் 3 கிரகங்களில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை காண முடிகிறது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கிரகங்களின் மேற்பரப்பு தண்ணீர் இருக்கும் அளவிற்கு குளிர்ச்சியாக இருப்பதாகவும், அய்ட்ரொஜன், அமோ னியா, ஹீலியம் போன்ற வாயுக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளன.

வழக்கமாக பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என கணக்கிடப்பட்டு வரும் நிலையில், பூமியை இந்த புதிய 3 கிரகங்கள் 3 முதல் 11 நாட்களில் சுற்றி வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த 3 கிரகங்கள் இருப் பதாகவும் இது குறித்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 1.8.19