திங்கள், 20 பிப்ரவரி, 2017

என்னே அறிவியலின் சாதனை! 60 வயது பாட்டிக்கு குழந்தை பிறப்பு


காந்திநகர், பிப். 18- செயற்கை கருத்தரித்தல் முறையில், 60 வயது பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தை சேர்ந்த, பிர வீன் - சுசீலா, 60, தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை.

இந்நிலையில், அவர்களது கிராமத்தை சேர்ந்த, 60 வயது பெண் ஒருவர், செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றதை அறிந்து, அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் சென் றனர்.

சுசீலா தம்பதியை பரிசோ தித்த மருத்துவர்கள், சுசீலா வுக்கு மாத விலக்கு சுழற்சி மீண்டும் வருவதற்கான சிகிச் சையளித்தனர். பின், அவ ருக்கு செயற்கை கருவூட்டல் முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

முதல் முறை, இரண்டு கரு உருவாகி, சில மாதங் களில் கலைந்துவிட்டது. இரண் டாவது முறை கருத்தரித்த சுசீலாவுக்கு, அறுவை சிகிச்சை மூலம், அழகான பெண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து சுசீலாவுக்கு சிகிச் சையளித்த மருத்துவர் தாமினி கூறியதாவது:

ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக் கப்பட்ட சுசீலா, வயது காரணமாக, கர்ப்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்டார். எட் டாவது மாதம் முடிந்த பின், அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ள னர். இவ்வாறு அவர் கூறி னார்.
-விடுதலை,18.2.17

விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டைகோஸ் அறுவடை


நியூயார்க், பிப்.20 விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டை கோஸ் அறுவடை செய்யப்பட்டது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன. அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அங்கு தங்கியிருக்கும் வீரர்களின் உணவுக்காக சில காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. புவியீர்ப்பு சக்தி எதுவும் இல்லாத விண்வெளியில் நவீன தொழில்நுட்ப முறையில் இவை பயிரிடப் பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் என்பவர் தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை பயிரிட்டார். தற்போது அது சிறந்த முறையில் விளைந்துள்ளது.

அதை தொடர்ந்து சமீபத்தில் முட்டைகோஸ் அறுவடை செய்யப்பட்டது. இதன் மூலம் சீன முட்டை கோஸ் விண்வெளியில் பயிரிடப்பட்டுள்ள 5-ஆவது பயிர் ஆகும். மேலும் விண்வெளி ஆய்வகத்தில் தற்போதுதான் முட்டை கோஸ் முதன் முறையாக அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை நாசா விண்வெளி மய்யம் தெரிவித்துள்ளது. அது குறித்து அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கிவிட்சன் டுவிட்டரில் கூறும் போது எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் விண்வெளியில் வேடிக்கையாக நான் தோட்டம் அமைத்தேன். இது போன்று அதிக தோட்டம் போட நிறைய அறைகள் தேவை என தெரிவித்துள்ளார்.

-விடுதலை,20.2.17

24 மணி நேரத்தில் 27 தடவை  மாரடைப்பு ஏற்பட்டும் உயிர் பிழைத்த மனிதர்

லண்டன், பிப்.20 லண்டனை சேர்ந்த ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ரேவுட் ஹால் (54). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே அவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. எனவே, அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருந்தும் அவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு தாக்கியது. இருந்தும் அவர் உயிர் பிழைத்தார். இது ஒரு அதிசய நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நான் உயிர் பிழைப்பேன் என கருதவில்லை. ஒரு நாளில் 27 தடவை நான் செத்து பிழைத்து இருக்கிறேன். மருத்துவர்கள் தான் எனது உயிரை காப்பாற்றியுள்ளனர். அவர் களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டைகோஸ் அறுவடை

நியூயார்க், பிப்.20 விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டை கோஸ் அறுவடை செய்யப்பட்டது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன. அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அங்கு தங்கியிருக்கும் வீரர்களின் உணவுக்காக சில காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. புவியீர்ப்பு சக்தி எதுவும் இல்லாத விண்வெளியில் நவீன தொழில்நுட்ப முறையில் இவை பயிரிடப் பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் என்பவர் தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை பயிரிட்டார். தற்போது அது சிறந்த முறையில் விளைந்துள்ளது.

அதை தொடர்ந்து சமீபத்தில் முட்டைகோஸ் அறுவடை செய்யப்பட்டது. இதன் மூலம் சீன முட்டை கோஸ் விண்வெளியில் பயிரிடப்பட்டுள்ள 5-ஆவது பயிர் ஆகும். மேலும் விண்வெளி ஆய்வகத்தில் தற்போதுதான் முட்டை கோஸ் முதன் முறையாக அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை நாசா விண்வெளி மய்யம் தெரிவித்துள்ளது. அது குறித்து அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கிவிட்சன் டுவிட்டரில் கூறும் போது எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் விண்வெளியில் வேடிக்கையாக நான் தோட்டம் அமைத்தேன். இது போன்று அதிக தோட்டம் போட நிறைய அறைகள் தேவை என தெரிவித்துள்ளார்.
-விடுதலை,20.2.17

கலிலியோ-வானவியலின் தந்தை

கலிலியோ-வானவியலின் தந்தை
******************************************
மதம் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத் தான் தீர வேண்டும்.
அப்படி மண்டியிடச் செய்தவர்களுள் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலிலியோ   என்னும் விஞ்ஞானி மிக மிக முக்கியமானவர். அவரின் பிறந்த பொன்னாள் இந்நாள் 15-2-1564
வானவியலின் தந்தை என்று வருணிக்கப்படுபவர் இவர்.
அவருடைய ஆய்வுக் களம் என்பது விண்தான். வியாழன் கிரகத்தின் துணைக் கோள்களை முதலில் கண்டவர் இவர்தான். வியாழனைச் சுற்றியுள்ள துணைக் கோள்கள் வியாழனைச் சுற்றி வருவதைக் கண்டறிந்தவர்
கத்தோலிக்க தேவாலயங்கள் 1000 வருடங்களுக்கு மேலாக சூரியன் மற்றும் கோள்கள் தான் பூமியைச் சுற்றி வருகின்றன என்று கற்றுக்கொடுத்து கொண்டிருந்தன.ஆனால் பூமியையும் சூரியனையும் பிரபஞ்சத்தையும் அவதானித்து கலிலியோ ஒரு முடிவுக்கு வந்திருந்தார். பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று..
மத உலகைப் பொருத்த வரை இது ஓர் அதிர்ச்சியான தகவலாகும். பூமியைத்தான் எல்லாக் கிரகங்களும் சுற்றிக் கொண்டிருந்தன என்பது தான் மதத்தின் நம்பிக்கை.
பைபிள் கோட்பாடும்கூட! சூரியக் குடும்பமும் பூமியைத் தான் சுற்றுவதாக அன்றைக்கு இருந்த அவர்களின் அறிவு அவர்களை நம்ப வைத்தது. அதற்கு முதல் அடி கொடுத்தவர் கோபர்நிக்கஸ். சூரியனை மய்யப்படுத்திய அவரின் கண்டுபிடிப்பை வழிமொழிந்தார் புரூனோ.மதவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து - மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தாயிற்றே! கொலைகாரர்கள் கல்லால் அடித்தே கோபர் நிகசைக் கொன்றனர். புரூ னோவோ உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.அதே கருத்துகளைத் தான் கலிலியோவும் கூறினார். மதம் மருண்டது என்றாலும், உயிருக்கு ஆபத் தில்லை; மாறாக வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவரது படைப்புகளை தடுத்தனர். அங்கேயே அவர் இறந்தார். அவருக்கு மரணச் சடங்கு நடத்த தேவாலயம் அனுமதிக்கவில்லை.
360 ஆண்டுகளுக்குப் பிறகு 1992 அக்டோபர் திங்களில்  ரோமன் கத்தோலிக்க மதப்பீடம் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு தலை வணங்கியது. கணிதவல்லுநர் வானியல் விஞ்ஞானி கலிலியோ கண்டுபிடித்துச் சொன்ன கருத்து சரிதான் என்று ஒப்புக் கொண்டது. குழு ஒன்றை அமைத்து கலிலியோ சொன்னதுபற்றி ஆய்வு செய்யப் பணித்தது. ஆம், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது. கலிலியோ கண்டுபிடிப்பு சரியே என்று அவர்கள் தெரிவித்தனர். கலிலியோவுக்கு அளிக்கப் பட்ட தண்டனை தவறு என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டது கத்தோலிக்க மதப்பீடம்! (செய்தி 1992 அக்டோபர் 31)
புரூனோவைக் கொளுத்தியதுபோல கலிலியோவைக் கொல்லாமல் விட்டார்களே, அதுவே பெரிய விசயம்
அந்த மனிதனின் இறுதிக் காலம் அறிவியலின் ஆரம்பம். அறிவியலை மதங்களால் நிரந்தரமாக தடுக்க முடியவில்லை என்பது நிதர்சனம்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

கலிலியோவின் முக்கியக் கண்டுபிடிப்பு!


கலிலியோ தலைசிறந்த இத்தாலிய விஞ்ஞானி தனது காலத்தில் வேறெந்த விஞ்ஞானியையும் விட மிகச் சிறந்த அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்ததற்காக இவர் உலகப் புகழ் பெற்றார். இவர் பைசா நகரில் 1564-இல் பிறந்தார். இளமையில் பைசா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்.
ஆனால், வறுமையால் பாதியிலேயே படிப்பை விடடார். எனினும் அதே பல்கலைக் கழகத்தில் 1589இல் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படுவர் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து 1610 வரையில் அங்கு பணிபுரிந்தார். இந்தக் காலத்தின்போது தான் இவர் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்தார்.
இவருடைய முக்கியக் கண்டுபிடிப்புகளில் முதலாவது, எந்திரவியல் தொடர்புடையதாகும். லேசான பொருள்களைவிடக் கனமான பொருள்கள் வேகமாக கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். அந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் இக்கூற்றை தலைமுறை தலைமுறையாக அறிஞர்கள் நம்பிவந்தார்கள். ஆனால், கலிலியோ இந்தக் கூற்றைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.
பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார். காற்றின் உராய்வினால் வேகம் சற்று குறையலாம் என்பதைத் தவிர, கனமான பொருள்கள், லேசான பொருள்கள் இரண்டுமே ஒரே வேக வீதத்தில்தான் கீழே விழுகின்றன என்று  அவர் கூறினார்.
இதைக் கண்டுபிடித்த பின்னர் கலிலியோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். ஒரு குறிப்பிட்ட கால அளவின்போது பொருள்கள் எவ்வளவு தூரம் விழுகின்றன என்பதை மிகக் கவனமாக அளவீடு செய்த இவர். கீழே விழும் ஒரு பொருள் செல்லும் தொலைவானது, அது கீழே விழுகின்ற வினாடிகளின் எண்ணிக்கையில் இருபடி வர்க்கத்துக்குச் சரிசம வீத அளவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இது வேக வளர்ச்சி வீதம் ஒரே சீராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
கலிலியோவின் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் காண, கணிதச் சூத்திரங்களையும், கணித முறைகளையும் விரிவாகப் பயன்படுத்தியது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாகும்.
-விடுதலை ஞா.ம.,6.9.14

சனி, 11 பிப்ரவரி, 2017

தேனீக்கள் ஏன் கொட்டியவுடன் இறந்து போகின்றன?



தேனீக்கள் தற்காப்புக்காகவும் தேனடையைப் பாது காக்கவும் தங்கள் கொடுக்கால் கொட்டுகின்றன. தேனீக்கள் கொடுக்கால் கொட்டியவுடன், கொட்டப்பட்ட உயிரி னத்துக்குக் காயம் ஏற்படுகிறது. கூர்முனை கொண்ட பல்சட்டம் போன்று அதன் கொடுக்கின் அமைப்பு இருப்பது சில வகைத் தேனீக்களுக்கும் சேர்த்தே காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அதேநேரம் இதில் தற்கொலை செயல்பாடு எதுவும் இல்லை. ஒரு தேனீ மற்றொரு பூச்சியைக் கொட்டினால், தன் கொடுக்கை திரும்ப இழுத்துக்கொள்ள முடியும். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அதேநேரம் தேனீயின் கொடுக்கு ஆழமாகப் பாய்ந்தால், சம்பந்தப்பட்ட தேனீ உயிர் பிழைப்பது சந்தேகம்தான். பாலூட்டிகளின் தோலின் மீது தேனீ கொட்டும்போது, அதன் கொடுக்கு விடுபட முடியாத வகையில் தசையில் சிக்கிக் கொள்கிறது.
இதில் கொடுக்கை விடுவித்துக்கொண்டு தேனீ தப்பிக்க முயற்சி எடுக்கும்போது, அதன் அடி வயிறு கிழிந்துபோகிறது. சம்பந்தப்பட்ட தேனீ இறந்து போகிறது.
கொடுக்கால் கொட்டும் பூச்சிகளில் தேனீ மட்டுமே இப்படி செத்துப் போகிறது. அதேநேரம் ஒரு தேனடையைப் பாதுகாக்க இதுபோல சில வேலைக்காரத் தேனீக்களை இழப்பது தேனடையைப் பாதுகாக்கவே செய்கிறது.
தேனடையை எடுக்க வரும் யாரானாலும், தேனீயின் கொட்டுதலுக்குப் பயந்து அடுத்த முறை தேனடையைத் தொந்தரவு செய்ய யோசிப்பார்கள் இல்லையா, அதுவே ஒரு தேனடைக்குக் கிடைத்த வெற்றி.
-விடுதலை,19.1.17

அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்க

அழிந்து போன உயிரினங்களை
மீண்டும் உருவாக்க 80 லட்சம் ஆண்டுகள் ஆகும்!


பூமியில் அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்க வேண்டுமானால் அதற்கு குறைந்தபட்சம் 80 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. வவ்வால் உள்ளிட்ட பாலூட்டி இனங்களை அந்த விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர்.
வட அமெரிக்க கண்டத்தையொட்டி அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கரீபியன் தீவுகளில் காணப்பட்ட வௌவால் இனங்கள் பல முற்றிலும் அழிந்துவிட்டன. இவை அழிவதற்கான குறிப்பான காரணம் என்ன என்பது குறித்து முழுமையான, விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கா விட்டாலும் கூட, மனிதர்களின் குடியேற்றம் தொடங்கிய வுடன் அங்கிருந்த பல உயிரினங்கள் அழியத் தொடங் கின என்று தெரிய வருகிறது.
இதில் மிக அதிகமான அழிவை நேரிட்டது வவ்வால் இனங்கள்தான். மனிதர்களின் வருகைக்குப் பிறகு, அங்கு பிற விலங்கு களின் வாழ்விடங்கள் சுருங்கத் தொடங்கின். பல்வேறு உயிரினங்களின் அழிவுக்கு இதுதான் முக்கியக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அழிந்து போன வவ்வால் இனங்களுக்கு மிக நெருக்கமான பிற வவ்வால் இனங்களை வைத்து ஒப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கணினி மூலம் மாதிரி இன உருவாக்கம் செய்யப்பட்டது. அந்தப் பாலூட்டி இனங்கள் மீண்டும் உருவாக 80 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூமியில் பல உயிரினங்களின் அழிவுக்கு மனிதர் களின் குடியேற்றமே காரணம் என்பது ஏற்கெனவே நடைபெற்ற பல ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு அழிந்து போன ஓர் இனம் மீண்டும் பூமியில் உருவாக 80 லட்சம் ஆண்டுகள் தேவைப்படும் என்பதை நினைக்கவே மலைப்பாகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கிறது என்று அந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த லிலியானா டேவலாஸ் கூறினார்.
புதிய உயிரின உருவாக்கத்துக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று நாம் அறியும் அதே வேளையில், பிற உயிரினங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் மனிதர்கள் குறுக்கீட்டால் உயிரின அழிப்பு மிக வேகமாக நடைபெறுகிறது என்பது கவனிக்கத் தக்கது.
உயிரின அழிப்பு, உருவாக்கம் குறித்த அந்த ஆய்வின் முடிவுகளை “நேச்சர் இகாலஜி அண்ட் எவல்யூஷன்’ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-விடுதலை,19.1.17