ஞாயிறு, 17 மே, 2015

கண்டுபிடிப்புக்கு உதவும் கருவிகள்


மின்சக்தியை சேமித்து, பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது? அக்யுமுலேட்டர் கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி எது? அட்மாஸ்கோப் மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் மின்னளவி எது? அம்மீட்டர் நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடாமலும், குறையாமலும் ஒரே சீராக வைக்க உதவுவது எது?
அணுக்கரு உலைகள் காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது? அனிமோ மீட்டர் ஒலியின் வலிமையை அளக்க பயன்படும் கருவி எது? ஆடியோ மீட்டர் கேட்கும் திறனை அதிகரிக்க உதவும் கருவி எது? ஆடியோ போன் கண்ணின் உட்பாகத்தையும், விழித்திரையையும் சோதிக்கும் கருவி எது?
ஆப்தலாஸ் கோப் ஆகாய விமானம் பூமியிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என கண்டறிய உதவும் கருவி எது? ஆல்டிமீட்டர் மின்தாங்கி கட்டிடங்கள் இடியினால் தாக்கப்படாமல் பாதுகாக்கப் பயன்படும் கருவி எது? இடிதாங்கி செயற்கை வெப்பத்தால் முட்டைகளை பொறிக்க செய்யும் கருவி பாக்டீரியா கிருமிகளை வளர்ப்பதற்கும்,
வளர்ச்சி குன்றிப்பிறந்த குழந்தைகளை பாதுகாக்கவும் பயன்படும் கருவி எது? இன்குபேட்டர் விண்வெளியிலிருந்து செய்திகளை செயற்கை கோள் வழியாக அனுப்புவதற்காக பயன்படும் கருவி எது? டெல்ஸ்டார் கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?
பேதோ மீட்டர் அச்சிடப்பட்டவைகளை தரையில் விழச்செய்யும் கருவி எது? எப்பிடாஸ் கோப் புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தை காண்பிக்க பயன்படும் கருவி எது? குரோனோ மீட்டர் மூளைகளின் அலைகளை அளக்க பயன்படும் கருவி எது? எலக்ட்ரோ என்சபலோகிராப் உப்புக் கரைசலை அளக்கும் அளவி எது?
சலினோ மீட்டர் சூரியனுடைய உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின் உயரத்தையும் அறிய பயன்படும் கருவி எதுசெக்ஸ்டான்ட் தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி எது?
கிரஸ்கோகிராப் உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி எது? கைமோகிராப் அறைகளில் நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படும் கருவி எது?
மானோ மீட்டர் வைரஸ்களை அளக்க பயன்படும் கருவி எது? மில்லி மைக்ரான் இரத்த அழுத்தத்தை அறிய உதவும் கருவி எது? ஸ்பைக்மோ மானோ மீட்டர் ஊர்த்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி எது? ஓடோ மீட்டர் பலவண்ணம் காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு கருவியாய் பயன்படுகிற கருவியின் பெயர் என்னகலைடாஸ்கோப்

விரைவில் செயற்கை இலை!
ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செயற்கை இலையை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கின்றனர். சூரிய ஒளியை பச்சையம் மூலம் சக்தியாக மாற்றும் தன்மை தாவரங்களில் உள்ள இலைகளில் நடக்கும் விந்தை.
இதை செயற்கை முறையில் உருவாக்கி, சூரிய ஒளியிலிருந்து திரவ எரிபொருளை உருவாக்கலாம் என்று ஹார்வர்டை சேர்ந்த விஞ்ஞானி டேனியல் நோசெராவின் குழுவினர் கண்டறிந் துள்ளனர். சூரிய ஒளி மற்றும் ஒரு பாக்டீரியா ஆகியவற்றின் உதவியுடன் இந்த செயற்கை இலை திரவ எரிபொருளை உருவாக்குகிறது.
இதை பெருமளவில் தயாரிக்க முடிந்தால் பர்சனல் கம்ப்யூட்டர் போல. பர்சனல் எரிபொருள் உற்பத்தி நிலையத்தை வீட்டின் கொல்லைப் புறத்தில் உருவாக்க முடியும். ஆனால், இந்த செயற்கை இலை, சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காது.

தலை தெறிக்க ஓடும் நட்சத்திரம்
நமது பால்வெளி மண்டலம் கேலக்ஸியை விட்டு வினாடிக்கு 1200 கி.மீ வேகத்தில் பறந்து தலைதெறிக்கும் வேகத்தில் தப்பித்து ஓடுகிற 708 எனும் பெயருள்ள நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வேறு எந்த நட்சத்திரமும் போகாத வேகத்தில் நமது கேலக்ஸியை விட்டு விலகி ஓடுகிற இதன் மர்மத்தை ஆராய்ந்து வருகின்றனர்.


சீனாவில் புதிதாக 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு


சீனாவில் கட்டு மானத்திற்காக பள்ளம் தோண்டும் போது 43 டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத் தில் உள்ள ஹெயுன் நகரத்தில் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது டை னோசர் முட்டை படிமங் கள் இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து தொல்பொருள் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 2 மணி நேர முயற்சிக்குப் பின் 43 முட்டை படிமங்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அனைத்து படிமங்களும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நகரத்தில் மட்டும் இதுவரை 17 ஆயிரத்திற்கு அதிகமான டைனோசர் முட்டை படிமங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இங்கு முதல் முறையாக 1996இல் ஒரு கட்டுமானத்திற்காக நிலத்தை தோண்டிய போது உருண்டை யான சில பொருட்கள் கிடைத்தன. முதலில் அது டைனோசர் முட்டை என தெரியாமல் குழந்தைகள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகம் உலகிலேயே அதிகமான டைனோசர் முட்டை படிமங்களை வைத்துள்ளது. இங்கு மொத்தமாக 10,008 முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
-விடுதலை,23.4.15

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

செயற்கை ரத்தம்

























முழு ஹீமோகுளோபின் சத்துடன் 



செயற்கை ரத்தம் 



கண்டுபிடிப்பு: டில்லி பல்கலை. 



மாணவர்கள் சாதனை


போர்முனைகள், எதிர்பாராத விபத்துகள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள், உயிரைக் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றின்போது மட்டும்தான் விலை மதிக்க முடியாத ரத்தத்தின் அவசியத் தேவை என்னவென்று நம்மில் பலருக்கு புரிகின்றது.
இன்றைய நிலவரப்படி, அரிய வகை நீங்கலாக சாதாரண வகை ரத்தம் ஒரு யூனிட் சுமார் 500 முதல் 800 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இதற்கு மாற்றாகவும், இயற்கையான மனித ரத்தத்துக்கு இணையாகவும், செயற்கை ரத்தத்தை தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் உலகின் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதில் சில நாடுகள் வெற்றி கண்டும் உள்ளன.
எனினும், அந்த செயற்கை ரத்தத்தில் எல்லாம் இயற்கையான வகையில் சுரக்கும் மனித ரத்தத்தில் உள்ளது போன்ற சமவிகித அளவில் ஹீமோகுளோபின் என்ற உயிர்ச்சத்து இல்லாமல் இருப்பது, இந்த ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் ஒரு பின்னடைவாக கருதப்படுகின்றது.
இந்நிலையில், டில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர்வேதியல் துறை மாணவர்கள் முழு ஹீமோகுளோபின் சத்துடன் செயற்கை ரத்தத்தை கண்டுபிடிக்கும் பெருமுயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர். பேராசிரியர் சுமன் குண்டூ தலைமையில் நடைபெற்று வந்த இந்த ஆராய்ச்சியின் வெற்றி பற்றிய தகவல் ஜர்னல் ஆஃப் பயோலாஜிக்கல் கெமிஸ்ட்ரி என்ற சர்வதேச அறிவியல் பருவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கையான முறையில் மனித ரத்தத்தில் உறைந்துள்ள ஹீமோகுளோபின், ரத்த சுழற்சி முறையின்போது ஹீமே என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருளை வெளிப்படுத்தும்.
ஹீமோகுளோபினின் மூலக்கூறில் இருந்து இது வெளியாவதை தடுக்க ஒரு வகை ரசாயன அமிலத்தை செலுத்தி, செயற்கை ரத்தத்தில் இந்த ஹீமோவை கட்டுப்படுத்தும் ''மையோகுளோபின் என்ற புதிய கண்டுபிடிப்பை செலுத்தியதன் விளைவாக, பின்னர் நடத்தப்பட்ட சோதனையின்போது இயற்கையான ரத்தத்தில் உள்ளதைப் போல் அனைத்து சத்துகளும் நிறைந்ததாக அந்த செயற்கை ரத்தம் மாறியது.
அதே வேளையில், ரத்த சுழற்சியின்போது அதிலிருந்து ஹீமேவும் வெளியாகவில்லை. எனவே, இந்த ஆராய்ச்சியை மேலும் மேம்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் இயற்கை ரத்தத்துக்கு அசல் மாற்றாக இந்த செயற்கை ரத்தத்தை வர்த்தக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்த முடியும் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..
வர்த்தக ரீதியாக இந்த செயற்கை ரத்தம் விற்பனைக்கு வரும் வேளையில், தற்போது கொடையாளிகளின் மூலம் பெறப்படும் ரத்தத்தின் விலையை விட சுமார் 10 சதவீதம் குறைவான விலையில் இது கிடைக்கும். மேலும், தற்போது விற்பனையாகிவரும் இயற்கை ரத்தத்தை அதிகபட்சமாக 50 நாட்கள் வரைதான் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியும்.
ஆனால், இந்த செயற்கை ரத்தத்தை மூன்றாண்டு காலம் வரை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தலாம். எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டுசென்று கையிருப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியைப் போன்ற எட்டு கோள்கள் கண்டுபிடிப்பு
பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கோள்களைத் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
நாசா நிறுவனத்தின் கெப்லெர் விண்வெளி தொலை நோக்கியைக் கொண்டு இவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கோள்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்திருக்கக்கூடும் என்றும், நீர் நிரம்பிய கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய பிற விஷயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் கோள்கள் பூமியைவிட இரண்டு மடங்குக்கும் மேல் குறைவான அளவுள்ளவை, அவை மிக அதிக வெப்பமோ அல்லது மிகக் குளிரான வெப்பநிலையோ இல்லாதவை என்று விஞ்ஞானிகள் கூறினர். ஆனால் இந்த கோள்களில் ஏதாவது ஒன்றாவது வாழ்வதற்கு உரிய இடமாக இருக்குமா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இவைகள் நம்பிக்கையளிக்கும் இடங்கள் என்று மட்டும் கூறினர்.
ஆனாலும், இந்த கோள்களுக்கு மனிதர்களால் விரைவில் சென்றுவிட முடியாது. ஏனென்றால் அவை பல நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி பவுதிக மய்யத்தைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களது இந்த முடிவுகளை வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.
விடுதலை,8.1.15

ஒளி, காற்று, நீரில்லாமலும் வாழும் நுண்ணுயிர்கள்













டலுக்கடியில் மிக ஆழத்தில் துளையிட்டு ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 
விஞ்ஞானிகள், இது போன்ற மிக கடுமையான சூழ்நிலைகளில் வாழும் மிக நுண்ணிய 
உயிரினங்கள் பற்றி புதிய பார்வைகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஒரு கல நுண்ணுயிர்கள்
பசிபிக் பெருங்கடலில், ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், சுமார் 2,000 மீட்டர்களுக்கும் மேலான ஆழத்தில் துளையிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது இந்த ஒற்றை செல் நுண்ணுயிர்களை (மைக்ரோப்கள்) கண்டறிந்தனர்.
இந்த நுண்ணுயிரினங்கள்,ஒளி, பிராண வாயு போன்றவை இல்லாத, தண்ணீரும் ஏறக்குறைய இல்லாத மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர்வாழ முடிகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
பிரபஞ்சத்தில் இதேபோல வேறு கடுமையான சூழ்நிலைகளிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச கடல் கண்டுபிடிப்பு திட்டம் (International Ocean Discovery Program) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறது.
துளையிடும் கருவி
இந்த ஒற்றை செல் உயிரிகள் , கலோரிகள் குறைவான, ஹைட்ரோகார்பன் பொருட்களை உண்டு உயிர்வாழ்கின்றன. அவைகளுக்கு மிகவும் குறைவான வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபோலிசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த முடிவுகள் அமெரிக்க புவிபௌதிக ஒன்றியத்தின் (America Geophysical Union ) மாநாடு ஒன்றில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. நாங்கள் எப்போதும் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறோம்.
அப்படிக் கண்டுபிடிக்கும் போதெல்லாம்,அவைகள் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிவது எங்களுக்கு ஒரு வியப்பைத் தரும் விஷயமாகவே இருந்துவருகிறது என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குழுவில் அங்கம் வகித்த கலிபோர்னியா தொழில்நுட்பக்கழகத்தின் எலிசபத் ட்ரெம்பார்ட் ரெய்ச்சர்ட்
சிக்யு என்ற கப்பலிலிருந்து கடல் அலைகளுக்கடியில் சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஆழ்துளை இயந்திரம், அதன் கீழே கடல் தரைப்பரப்பிற்கும் கீழ் சுமார் 2,400 மீட்டர் தூரம் வரை துளைத்தெடுத்து, அந்த சூழ்நிலையில் இருக்கும் நிலக்கரிப் படுகைக்குள்ளிருந்து மாதிரிகளைக் கொண்டுவந்ததாம்.
இந்த மாதிரிகளை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி இந்த ஆழத்தில் உயிர்வாழ்கின்றன அவை எந்த மாதிரியான உணவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன என்பதைக் கண்டறிய தொடர்ச்சியான சில பரிசோதனைகளைச் செய்தனர்.
இவை கடல் தரைப்பரப்புக்கடியில் இருக்கும் நிலக்கரிப்படுகையில் வாழ்வதால், நிலக்கரியில் இருந்து கிடைக்கும் மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன் துகள்களை அந்த உயிரினங்களுக்கு ஊட்டிப் பார்த்த விஞ்ஞானிகள் அவை உண்மையில் அந்தத் துகள்களை உண்பதை உறுதி செய்தனர்.
இந்த ஆராய்ச்சியில் இந்த உயிரினங்கள் வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ்வதை, அதாவது மிக குறைந்த உணவை உட்கொண்டு, அதையும் மெதுவாக செரிமானம் செய்து கொண்டு வாழ்வதை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதுதான் அது போன்ற கடுமையான சூழ்நிலைகளில் வாழ ஒரு வழியாக இருக்கலாம்.

வலுவிழந்து வரும் எச்அய்வி வைரஸ்
எய்ட்ஸ் நோயைத்தோற்றுவிக்கும் எச்அய்வி வைரஸ் தனது தீவிரத்தன்மையை படிப்படியாக இழந்துவருவதாக ஆக்ஸ் போர்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
இதன்காரணமாக, எச்அய்வி வைரஸின் தொற்றும் தன்மை குறைவதோடு, மனிதர்களின் உடலுக்குள் எச்அய்வி வைரஸ் சென்றபிறகு அது மனித உடலைத்தாக்கி முழுமையான எய்ட்ஸ் நோயாக பரிமாணம் எடுப்பதற்குத் தேவையான கால அளவும் அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்அய்வி வைரஸானது மனித உடலில் புகுந்து மனித உடலின் செல்களுக்குள் புகுந்து அங்கே பல்கிப்பெருகும்போது, மனித உடலின் நோய் எதிர்ப்பணுக்களின் கண்களில் படாமல் தப்பிக்கும் நோக்கில் பலவித மரபணு மாற்றங்களை மேற்கொள்கிறது. எச்அய்வி வைரஸுக்குள் ஏற்படும் இந்த பரிணாம வளர்ச்சி காரணமாக அதன் தீவிரத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக் காவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களை ஆராய்ந்தபிறகு தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுகள் ஓரளவு ஊக்கத்தை தந்தாலும், இன்னமும் இந்த வைரஸ் ஒரு குணப்படுத்த முடியாத சவாலாகவே தொடர்வ தாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் இறுதியானவை அல்ல என்றாலும் எச் அய் வி தொற்றைத் தடுப்பதிலும் எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதிலும் இதன் முடிவுகள் பெருமளவு பயன்படும் என்று தெரிவித்தார் இந்தியாவின் தேசிய தொற்றுநோய் தடுப்பு மய்யத்தின் தொற்றுநோய் புலனாய்வு அதிகாரி மருத்துவர்கள்
விடுதலை,25.12.14

மோதலில் தோன்றிய நிலா


பூமி உருவான சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் முன்பு நிலவுக்குச் சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் ரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மனி விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.
450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கிரகம் வந்து பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள்தான் பூமியைச் சுற்றி ஒன்று திரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்து வருகிறது. அப்படி மோதியதாகக் கருதப்படும் கிரகத்துக்கு கிரேக்க புராணத்திலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்தி ருந்தார்கள். ஆனால் இந்தக் கோட்பாட்டுக்கு தடயபூர்வ ஆதாரம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது.
தற்போது நிலவுப் பாறைகளில் நவீன ஆய்வுகளை மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் ரசாயனக் கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக்கிரகத் தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமிப் பாறைகளுக்கும் நிலவுப் பாறைகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம் இருப்பதை தாங்கள் கண்டு பிடித்திருப் பதாகவும், இரண்டு கிரகங்கள் மோதிக்கொண்ட கோட் பாட்டை ஆதரிப்பதாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ள தென்றும் ஆய்வை வழி நடத்திய டாக்டர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறினார். பூமிப் பாறைகளில் ஆக்ஸிஜன் அய்சோடோப்களின் கலவை ஒருவிதமாக இருப்பதாகவும், நிலவுப் பாறைகளில் அது வேறுவிதமாக இருப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது


விடுதலை,25.12.14

மெகா எர்த்



மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது பூமியை போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்கிறார்கள்.
பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கோளம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றை வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ரக கோளங்களை வகைபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கிரகத்துக்கு கெப்ளர் 10 சி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றை இது வலம் வருகிறது. இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள ஹைட்ரஜனை ஈர்த்து வியாழன் போல வாயுக் கிரகமாகவோ, நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோ தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.
ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக இது அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. பூமியை விட இரண்டு, மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்தக் கோள் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்பதால், இந்தக் கோள் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது

விடுதலை,25.12.14

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்



இந்தியக் குடிமக்கள்
மகாகவி ரவீந்திர நாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.
அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக் கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.
அமர்த்தியா சென்னுக்கு பொருளாதாரத்துக் கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங் கப்பட்டது.
கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப் பட்டுள்ளது
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக் காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுசுக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.
இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராசுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.
இந்தியாவில் வாழ்பவர்
திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
விடுதலை,12.10.14