ஞாயிறு, 11 ஜனவரி, 2015

மெகா எர்த்மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது பூமியை போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்கிறார்கள்.
பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கோளம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றை வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ரக கோளங்களை வகைபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கிரகத்துக்கு கெப்ளர் 10 சி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றை இது வலம் வருகிறது. இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள ஹைட்ரஜனை ஈர்த்து வியாழன் போல வாயுக் கிரகமாகவோ, நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோ தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.
ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக இது அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. பூமியை விட இரண்டு, மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்தக் கோள் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்பதால், இந்தக் கோள் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது

விடுதலை,25.12.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக