ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

அண்ட வெளியில் பேரொளியுடன் வெடிப்பு


நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வாஷிங்டன், ஏப்.2 அண்ட வெளியில் வெடிப்பு ஒன்று நிகழ்ந் ததாகவும், அது அனைத்து நட்சத்திரங் களையும் விட ஆயி ரம் மடங்கு ஒளியை ஏற்படுத்திய தையும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.
இது தொடர்பாக நாசா அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் “சந்திரா களம்-தெற்கு’ என்ற இடத்தில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை எங்கள் அமைப்பின் எக்ஸ்ரே  படம் காட்டுகிறது.  இது ஒரு அழிவுச் செயல் ஒன்றின் விளைவாக இருக்கக் கூடும். எனினும் இதுபோன்றதொரு எக்ஸ்ரே புகைப்படத்தை விஞ்ஞானிகள் இதற்கு முன் கண்டதில்லை.
இந்த வெடிப்பு நிகழ்ந்தபோது அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு பேரொளி ஏற்பட்டது.  பூமியில் இருந்து 170 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள அண்டவெளிப் பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது என்று நாசா தெரிவித்துள்ளது.
இது குறித்து சிலி நாட்டைச் சேர்ந்த பான்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபிரான்ஸ் பாயர் கூறுகையில்,  “இந்த வெடிப்பு மற்றும் பேரொளியைக் கண்டறிந்தது முதல், அதன் மூலாதாரம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் போராடி வருகிறோம்‘ என்றார்.
இந்தப் பெரு வெடிப்புக்கு அறிவியல் ரீதியில் மூன்று வாய்ப்புகள் காரணமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் இரண்டு வாய்ப்புகள், காமா கதிர்களின் வெடிப்பை சுட்டிக் காட்டுகின்றன.  ஒரு பெரிய நட்சத்திரத்தின் சிதைவு அல்லது ஒரு நியூட்ரான் நட்சத்திரத்துடன் மற்றொரு நியூட்ரான் நட்சத்திரம் இணைவது போன்ற காரணங்களால் காமா கதிர்களின் வெடிப்பு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

-விடுதலை,2.4.17


paper/140616.html#ixzz4d5xqod7Z

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக