ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

கயிறு கட்டுவோரே - கயிறு திரிப்பல்ல!மூடநம்பிக்கையாக கையில் கட்டும் கயிறை சோதனைக்கூடத்தில் பரிசோதனைக்குட்படுத்தியபோது எண்ணற்ற கிருமிகள் இருப்பதை கண்டறிந்தோம்.
மாணவர்கள் சேர்க்கையின் போது முதல்வர் கொடுத்த அறிவுரையின்படி மருத்துவ ஆய்வுக்கூட மாணவர்கள் தாமாகவே ஆர்வமாக முன்வந்து, தன் கையில் இருக்கும் கயிற்றினை அறுத்து அந்த கிருமிகள் வளர்வதற்கு ஏதுவான சூழ்நிலையில் வைத்தபோது எண்ணற்ற கிருமிகள் இருந்ததை கண்டறிந்தனர். அந்த கிருமிகள் எவ்வாறு, தம் கையில் வந்தன என்று வினவும்பொழுது அவை, தாம் மலம் கழித்தபின் கைக்கழுவிய நீரின் மூலமாகவும், சில கிருமிகள் காற்றின் மூலமாக அல்லது தூசி, அழுக்கு போன்றவை நம் கையில் படும்போதும் சில கிருமிகள் அந்த மாணவரின் தோலில் இருந்தும் வந்திருக்கும் என தெரிந்தபோது உடனே அவர்கள் கயிற்றினை கழற்றி எறிந்தனர்.
இந்த நோய் கிருமிகளால் வயிற்றுபோக்கு, சிறுநீரக கோளாறு தோலில் வறட்சிகள் போன்றவை வரக்கூடும் என்று தெரிந்ததும் மற்றெல்லா மருத்துவ ஆய்வுக்கூட மாணவர்களும் அவரவர் அணிந்திருந்த கயிறுகளை கழற்றி எறிந்து விட்டனர்.
கண்டறியப்பட்ட நோய்க்கிருமிகளின் பெயர்கள்
ஸ்டெப்பைலோகாக்கஸ் ஆரியஸ் (staphylococcus Aureus), ஸ்டெப்பைலோ காக்கஸ் ஆல்பஸ் (Staphyococcus Alpus), எஸ்செரிச்சியா கோலி (Eeherichia coli)
-விடுதலை \ஞா.ம,1.4.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக