அறிவியல் அறிவோம்

உண்மை அறிவியலை அனைவருக்கும் விளக்கவும், தெளிவுபடுத்தவும் பயன்படும் பகுதி

பக்கங்கள்

  • முகப்பு
  • மருத்துவ உலகு
  • தமிழ் மருத்துவம்
  • மூலிகை உலகு
  • மூலிகை மன்னன்
  • வேளாண்மை(மருதம்) அறிவோம்
  • வாழ்வியல் சிந்தனைகள்

திங்கள், 24 ஜனவரி, 2022

ரோபோக்கள் இனிமேல் குழந்தைகளை பெற்றெடுக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை



     December 06, 2021 • Viduthalai

 புதுடில்லி, டிச.6 உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் தங்களை போன்றே குழந்தைகளை பெற்றெடுக்கின்றன.

அமெரிக்காவின் வெர்மாண்ட், டப்ட்ஸ்,ஹார்வர்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக உயிரி ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டில் உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அவர்கள் உருவாக்கினர்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜீனோபஸ் லேவிஸ் என்ற தவளை இனத்தின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கியதால் இதற்கு ‘ஜீனோபாட்ஸ் 1.0’ என்று பெயரிடப்பட்டது. இவை ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்டவை. பேக் மேன் வடிவிலான இந்த ரோபோக்களால் நகர முடியும். நீந்த முடியும்.

தொடர் ஆராய்ச்சியின் பலனாக கடந்த மே மாதம் ஜீனோபாட்ஸ் 2.0 ரோபோ உருவாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஜீனோபாட்ஸ் 3.0 ரோபோ குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் இரும்பு, பிளாஸ்டிக்கால் ரோபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு உயிரி ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியுள்ளோம். இவற்றால் தங்களைப் போன்றே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இந்த ரோபோ ஆராய்ச்சியின் மூலம் விபத்தில் படுகாயமடைந்த மனிதர்களை குணப்படுத்த முடியும். பிறவிக் குறைபாடுகள், புற்றுநோயை குணப்படுத்த முடியும். முதுமைப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியவிஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ள டப்ட்ஸ்பல்கலைக்கழக விஞ்ஞானி பிளாகிஸ்தான் கூறும்போது, “ஆய்வகத்தில் ஒரு ஜீனோபாட்ஸ் ரோபோ குழந்தையை பெற்றெடுக்க 5 நாட்கள் ஆகிறது. இதுவும் அச்சு, அசல் ஜீனோபாட்ஸ் ரோபோ போன்றே இருக்கிறது. எதிர்காலத்தில் அணுக் கழிவு, கடலில் சேகரமாகும் மைக்ரோபிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜீனோபாட்ஸ் ரோபோவை பயன்படுத்த முடியும்“ என்றார்

ஆபத்தான ரோபோ?

அமெரிக்காவின் டூக் பல்கலைக்கழக பேராசிரியர் நிடா பாராஹனி கூறும்போது, “ஜீனோபாட்ஸ் ரோபோவால் தன்னைப் போன்றே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றால் அது ஆபத்தானது. இவை ஆய்வகத்தில் இருந்து தப்பி பூமியில் பல்கிப் பெருக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இவற்றின் இனப்பெருக்கம், செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரி ரோபாவால் மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஆபத்தான ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். மனித குலத்தின் நன்மைக்காக அனைத்து உயிரி ரோபோக்களையும் அழித்துவிட வேண்டும்“ என்றார்.

 
இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:01 AM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: குழந்தை , ரோபோ

வியாழன், 25 நவம்பர், 2021

அய்ன்ஸ்டீன் கோட்பாடு கையெழுத்துப் பிரதி ரூ.96 கோடிக்கு ஏலம்


     November 25, 2021 • Viduthalai

பாரீஸ், நவ. 25-  ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்  எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கு (13 மில்லியன் டாலர்) ஏலம் போனது.

பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், ஆல்பர்ட் கைப்பட எழுதிய பிரதியை ஏலத்திற்கு விட் டது. அப்போது ஏராளமான நபர் கள் பிரதியை வாங்க ஆர்வம் காட் டினர். இறுதியில் அந்த சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி 13 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:32 PM 1 கருத்து :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அய்ன்ஸ்டீன்

சனி, 21 ஆகஸ்ட், 2021

உலக ஒளிப்பட நாள் - ஆக. 19


August 21, 2021 • Viduthalai

ஒளிப்படவியல் (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும்.

ஒரு பொருளினால்  அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளிக் கரைசலை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு லென்ஸ்வழியாக சென்று படும்போது, அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் வேதியியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது.

இது ஒளிப்படக் கருவியின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. வணிகம், பொழுதுபோக்கு, விளம்பரம், கல்வி, பதிவுத்துறை அலுவலகங்கள், பத்திரிகைத் துறை, பல் ஊடக கருத்துத் தொகுப்புகள், திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒளிப்படவியலின் பயன்பாடு பெரிதும் உணரப்படுகின்றது. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.

 1800 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர், தாமஸ் வெட்ச்வூட் (Thomas Wedgwood) ஒளி-உணர் பொருளைக் கொண்டு அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவி மூலம் படப்பதிவு செய்ய முதல் முயற்சி மேற்கொண்டார். அவர் வேதிப்பூச்சு கொண்ட காகிதம் அல்லது வெள்ளைத் தோலை வெள்ளி நைட்ரேட் உடன் வினைப்படுத்தி ஒளிப்படம் தயாரித்தார்.

நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார்.  இதுதான் முதல் ஒளிப்படமாக இருந்தது.

இது 1802 இல் உலகிற்கு முழுமையாகவும், தெளிவாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இது இன்றைய படங்கள் போல் இல்லாமல் கருமையான நிழல் போன்றே காகிதங்களில் இருக்கும்.

 காகிதத்தில்   ஒரு உருவத்தைக் கொண்டுவர நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ்(Le Gras) பகுதியில்,  ஒரு மலர்தோட்டம் ஒன்றை வீட்டு ஜன்னலில் இருந்து பதிவு செய்தனர் . இதுவே உலகின் முதல்  இயற்கைக் காட்சி கருப்புவெள்ளைப் ஒளிப்படம் ஆகும்  அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவியின் லென்ஸ் மூலம் பதிவு செய்யப்பட்டது.

டால்போட், ஒளிகசியும் நெகட்டிவ் உருவாக்கி அதிலிருந்து பல நேர்மறை பிரதிகள் அச்சிடும் செயல்முறையை உருவாக்கினார். இதுவே இன்றைய இரசாயன ஒளிப்படப் பிரதிகள் அச்சிடும் முறைக்கு அடிப்படையாகும். பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையில் பிரதிகளை அச்சிட காட்சியை மீள் ஒளிப்பட முறையில் காட்சிப் பதிவு செய்ய வேண்டும். [19] 1835 இல் கோடைகாலத்தில் டால்போட் ஒளிப்படக் கருவி மூலம் பல ஒளிப்படங்களைப் பதிவு செய்தார்.

 இருப்பினும், டால்போட்டால், லாகாக் அபேயில்  (Lacock Abbey)  ஓரியல் (Oriel) சாளரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட ஒளிகசியும் மெல்லிய காகித எதிர்மறை மிகவும் பிரபலமானது. தற்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளின் மிகப் பழைமையான  நெகட்டிவ் ஆகும்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:24 AM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஒளிப்படவியல் , புகைப்படம்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நிலவில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடித்த சந்திரயான்-2


August 15, 2021 • Viduthalai

புதுடில்லி, ஆக.15 நிலவில் நீர் மூலக்கூறுகள் இடம்பெற்றி ருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் (இஸ் ரோ) சந்திரயான்-2 விண்கலம் அனுப்பிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ. எஸ். கிரண்குமார் இணைந்து எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திர யான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் சிறீஅரி கோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்கு பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீர் தொழில் நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி தகவல் தொடர்பிலிருந்து விலகியது

எனினும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட் டர்' நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. இந்த ஆர்பிட்டர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலவை சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. தற்போது இந்த தரவுகள் மூலம் நிலவின் பரப்பில் நீர் மூலக் கூறுகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதுதொடர்பாக நடப்பு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கான வலைதளத் தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஆர்பிட்டரில் இடம்பெற்றிருக் கும் அய்அய்ஆர்எஸ் கருவி எடுத்து அனுப்பியிருக்கும் ஆரம்ப கட்ட புகைப்பட தரவுகளில், இயற்பியல் அடிப்படையிலான வெப்ப திருத்த ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, நிலவின் பரப்பில் 29என் மற்றும் 62 என் இடையேயான அட்சரேகை பகுதியில் ஓஎச் (ஹைட்ராக்ஸில்), எச்2ஓ ஆகிய நீர் மூலக்கூறுகள் பரவலாக இடம்பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது. முன்பு, அதிக அளவில் ஓஹெச் மூலக்கூறுகள் இருக்க வாய்ப்பிருப்பதாக கண் டறியப்பட்ட நிலவின் உயர் வெப்ப பகுதியைக் காட்டிலும், இப்போது கண்டறியப்பட்டி ருக்கும் தாதுக்கள் நிறைந்த பாறைகளில் அதிக அளவில் ஓஎச், எச்2 ஓ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக் கிறது. நிலவின் சுற்றுப் பாதையில் ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப் பாக செயல்பட்டு வருவதோடு, எடுக்கும் புகைப்படங்களை முன்னர் அனுப்பப்பட்ட சந்திர யான்-1 விண்கலத்துக்குத் தவ றாமல் அனுப்பி வருகிறது என்று ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:51 AM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சந்திராயன் , நிலவு , நீர் மூலக்கூறு

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

மேக வெடிப்பு ஏன் ஏற்படுகிறது?

 

             August 07, 2021 • Viduthalai

ஜூலை 28 அன்று,  ஜம்மு -காஷ்மீர் கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர் மற்றும் 35-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அண்மையில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமான லடாக், உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களிலிருந்து மேக வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்திய இமயமலையில் மேக வெடிப்பு பற்றிய 2017 ஆய்வில், பெரும்பாலான நிகழ்வுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்தன.

மேக வெடிப்பு என்றால் என்ன?

மேக வெடிப்பு  என்பது ஒரு சிறிய பகுதியில் குறுகிய கால, தீவிர மழை நிகழ்வுகள். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (அய்எம்டி) கருத்துப்படி, இது ஒரு புவியியல் பகுதியில் சுமார் 20-30 சதுர கி.மீ பரப்பளவில் எதிர்பாராத மழைப்பொழிவு, 100 மி.மீ / மணிநேரத்திற்கு மேல் இருக்கும்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, கேதார்நாத் பிராந்தியத்தில் மேக வெடிப்புக்குப் பின்னால் உள்ள வானிலை காரணிகளைக் கண்டறிந்தது. வளிமண்டல அழுத்தம், வளிமண்டல வெப்பநிலை, மழைப்பொழிவு, மேக நீர் உள்ளடக்கம், cloud fraction, மேகத் துகள் ரேடியஸ், மேகக் கலவை விகிதம், மொத்த மேகக்கணி, காற்றின் வேகம், காற்றின் திசை மற்றும் மேகமூட்டத்தின் போது ஈரப்பதம் ஆகியவற்றை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர். மேக வெடிப்பின் போது, ​​ஈரப்பதம் மற்றும் அதன் குறைந்த வெப்பநிலை மற்றும் மெதுவான காற்றுடன் அதிகபட்ச மட்டத்தில் இருப்பதாக முடிவுகள் காண்பித்தன. “இந்த சூழ்நிலையின் காரணமாக அதிக அளவு மேகங்கள் மிக விரைவான விகிதத்தில் ஒடுக்கப்பட்டு மேக வெடிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதுபோன்ற மேக வெடிப்புகளை நாம் பார்ப்போமா?

காலநிலை மாற்றம், உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் மேக வெடிப்புகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. மே மாதத்தில், உலக வானிலை அமைப்பு, வருடாந்திர சராசரி உலக வெப்பநிலையானது தற்காலிகமாக அடுத்த அய்ந்து ஆண்டுகளில் ஒன்றில் குறைந்தபட்சம் தொழில்துறைக்கு முந்தைய நிலைக்கு மேல் 1.5 டிகிரி அய் எட்டுவதற்கு 40 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும், 2021 மற்றும் 2025-க்கு இடையில் குறைந்தது ஒரு வருடத்திற்கு 90 விழுக்காடு நிகழ்தகவு இருப்பதாகவும், இது 2016ஆம் ஆண்டின் மிக உயர்ந்த பதிவை தோற்கடிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடுகிறது.

“வெப்பநிலை அதிகரிக்கும் போது வளிமண்டலம் மேலும் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும். இந்த ஈரப்பதம் குறுகிய காலத்திற்கு மிகக் குறுகிய மழை அல்லது அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மலையகப் பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நகரங்களில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும். மேலும், உலகளவில் குறுகிய கால மழைப்பொழிவு தீவிரமாக மாறப்போகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன. காலநிலை மாற்றம் அல்லது வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகரித்த அதிர்வெண்ணில் இந்த மேக வெடிப்பு நிகழ்வுகளை நாம் நிச்சயமாகக் காண்போம்” என்று அய்.அய்.டி காந்திநகரில் உள்ள சிவில் இன்ஜினியரிங் மற்றும் எர்த் சயின்ஸைச் சேர்ந்த விமல் மிஸ்ரா விளக்குகிறார்.

மேக வெடிப்புகளை நம்மால் கணிக்க முடியுமா?

“இது மிகவும் சவாலான பணி மற்றும் மேக வெடிப்பை மாதிரியாக்குவது மிகவும் கடினம்” என்று மும்பை அய்.அய்.டியில் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த சுபிமல் கோஷ் கூறுகிறார். அவருடைய குழு இந்திய பருவமழை மற்றும் நீர்நிலை காலநிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது.

மாதிரிகள் அந்தத் தீர்மானத்தில் உண்மையில் இயங்காது என்று பாப்கார்ன் உதாரணத்துடன் மேலும் அவர் விரிவாக விளக்குகிறார். “நீங்கள் பாப்கார்னை உருவாக்குகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். சமைக்கும் பானை வெப்பமடைகிறது மற்றும் சோளம் உதிர்கிறது. எந்த சோளம் முதலில் உதிரும் என்று நான் கேட்டால், உங்களால் பதில் சொல்ல முடியாமல் போகலாம். டிகோட் செய்ய உங்களுக்கு மிகச் சிறந்த தெளிவுத்திறன் ஆய்வுகள் தேவை. மேலும், இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு எவ்வளவு சோளம் வரும் என்று நான் உங்களிடம் கேட்டால், நீங்கள் 99 விழுக்காடு சொல்ல முடியும். ஆனால் 10 விநாடிகளுக்குப் பிறகு எத்தனை என்றால் சொல்ல முடியுமா? சிறந்த தீர்மானம் மற்றும் சிறந்த நேர அளவிற்கு அதன் பதில் கடினம். இதேபோல், மணிநேர மழை மற்றும் மேக வெடிப்புகளுக்கு, தீவிரத்தையும் இடத்தையும் உருவகப்படுத்துவது மிகவும் கடினம்” என்று கூறினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:52 AM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்

புதன், 11 ஆகஸ்ட், 2021

விண்வெளி அறிவியல்: கருந்துளைக்கு பின்னால் ஒளி ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று

 

        August 05, 2021 • Viduthalai

விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றைச் சுற்றி, அதீத ஒளியுடைய எக்ஸ்-ரே வெளிச்சம் வருவதை அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். கருந்துளை ஒன்றில் இருந்து ஒளி வருவது கண்டறியப்படுவது இதுவே முதல் முறை.

அய்ரோப்பிய விண்வெளி முகமையின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நுஸ்டார்  ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேன் வில்கின்ஸ் தலைமையிலான பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

கருந்துளைக்கு பின்னால் இருந்து வரும் அதிசயமான 'ஒளி மகுடம்'  குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வின்போது இந்த அறிவியல் அற்புதம் தெரியவந்துள்ளது.

கருந்துளை என்றால் என்ன?

கருந்துளை என்பது விண்ணில் இருக்கும் பல விண்வெளி பொருட்களில் ஒன்றாகும். இவை என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன.

இவை அளவுக்கும் அதிகமான ஈர்ப்பு விசையை கொண்டுள்ளதுடன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு வரம்பற்ற (முடிவிலி) அடர்த்தியைக் கொண்டுள்ளன.

கருந்துளைகளின் திணிவும்  அளவிட முடியாத வகையில் அதிகமானது.

இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

கருந்துளைகளின் அதிகமான ஈர்ப்பு விசை காரணமாக இந்தப் பேரண்டத்தில் மிகவும் வேகமாக பயணிக்க கூடிய ஒளி கூட கருந்துளையின் நிகழ்வு எல்லையைக் கடந்து செல்ல முடியாது.

பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன?

கருந்துளைக்கு அப்பால் இருந்து ஒளி வருவதைக் காண முடிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

இதனால் கருந்துளைக்கு அப்பால் உள்ள பகுதியில் என்ன உள்ளது என்பதை விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்ந்தறிய வழி பிறந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு எப்படி அறிவியல் பூர்வமாக சாத்தியமானது?

குறிப்பிட்ட கருந்துளையின் அதீதமான ஈர்ப்பு விசை காரணமாக இதைச் சுற்றியுள்ள வெளி வளைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த கருத்துக்கு அப்பாலுள்ள எதிரொளியும்  வளைக்கப் பட்டுள்ளது. இதனால் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் மற்றும் நுஸ்டார் ஆகிய தொலைநோக்கிகள் நிலையிலிருந்து இதைக் காண முடிந்தது என்று அய்ரோப்பிய விண்வெளி முகமை தெரிவிக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட கருந்துளை எங்கு உள்ளது?

நமது பால்வெளி பேரடைக்கு அருகிலுள்ள  பேரவையின் மய்யத்தில் இந்தக் கருந்துளை அமைந்துள்ளது.

நமது சூரியனின் நிறையைப் போல சுமார் ஒரு கோடி மடங்கு நிறையை உடையது.

இந்தப் பேரடை பூமியிலிருந்து சுமார் 180 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது என்று அய்ரோப்பிய விண்வெளி முகமை தெரிவிக்கிறது.

ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனுக்கும் இந்தக் கண்டுபிடிப்புக்கும் என்ன தொடர்பு?

அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன், ஈர்ப்பு விசை கருந்துளைகளைச் சுற்றியுள்ள ஒளியை எவ்வாறு வளைக்கும் என்பதைக் கணித்து தமது பொதுச் சார்புக் கோட்பாட்டில் விளக்கியிருந்தார்.

இந்த கண்டுபிடிப்பு ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கணிப்பை மீண்டும் ஒருமுறை மெய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு 'நேச்சர்' அறிவியல் சஞ்சிகையில் பதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட 'ஒளி மகுடம்' எப்படி ஒளி மிகுந்த எக்ஸ்-கதிர்களை வெளியிடுகிறது எனும் புரியாத புதிரை அவிழ்ப்பதற்காக அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:21 AM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்

செவ்வாய், 6 ஜூலை, 2021

பூமியின் சகோதரிக் கோளை மீண்டும் ஆய்வு செய்யவிருக்கும் நாசா


June 19, 2021 • Viduthalai

பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளான வெள்ளி கோளுக்கு ஆராய்ச்சி செய்ய இரண்டு திட்டங்களை தேர்வு செய்துள்ளது நாசா. டாவின்சி மற்றும் வெரிட்டாஸ் என்று அழைக்கப்படும் இந்த திட்டங்கள் அவற்றின் அறிவியல் மதிப்பு மற்றும் அவற்றின் வளர்ச்சித் திட்டங்களின் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இதற்காக ஒதுக்கப்படும் என்றும் இந்த திட்டம் விண்ணில் 2028 - 2030 காலங்களில் ஏவப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வீனஸ் கிரகம் பற்றி...?

பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரகாசமாக காட்சியளிப்பது வெள்ளி கிரகம் ஆகும். அதன் அடர்த்தியான மேகங்கள் ஊடே வெளிச்சம் புகுந்து பிரதிபலிப்பது அதன் பிரகாசத்திற்கு காரணம் ஆகிறது. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் இரண்டாவது கோளான இதனை நாம் பூமியின் இரட்டை கோள் என்றும் அழைப்பதுண்டு. இரு கோள்களும் ஒரே அளவில் இருப்பதால் நாம் இதனை புவியின் இரட்டை கோள் அல்லது சகோதரி என்று கூறுகிறோம் ஆனாலும் இவ்விரு கோள்களுக்கு இடையே வேறுபாடுகளும் உண்டு.

ஒன்று,கோளின் அடர்த்தியான வளிமண்டலம் வெப்பத்தை தக்க வைக்கிறது மற்றும் சூரியனுக்கு மிக நெருக்கமான கோளான புதனுக்குப் பின் வந்தாலும், இது சூரிய மண்டலத்தின் வெப்பமான கோள்  என்பதற்கு காரணமாக அது அமைகிறது. 471 டிகிரி செல்சியஸ் வரையிலும் இதன் வெப்பம் அதிகரிக்கலாம். இது காரியத்தையே உருக்கும் அளவுக்கு போதுமான வெப்பமாகும்.

சூரியனை சுற்றும் வெள்ளி கோள் முன்னோக்கி நகர்ந்தாலும் தன்னுடைய அச்சில் அது பின்னோக்கி சுழலுகிறது. இதனால் சூரியன் அந்தக்கோளில்  மேற்கில் தோன்றி கிழக்கில் மறைகிறது. பின்னோக்கி சுழலுவதால் வீனஸில் ஒரு நாள் என்பது புவி நாட்களில் 243 நாட்களுக்கு சமமாகும். வெள்ளி கோளுக்கு சுற்று வளையங்களும் துணைக் கோள்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் வெள்ளிக் கோளுக்குச் சென்றதுண்டா?

வீனஸின் கடுமையான சூழல் காரணமாக இதுவரை மனிதர்கள் யாரும் இங்கு பயணம் மேற் கொண்டதில்லை. விண்கலம் அனுப்பப்பட்ட போதி லும் அது மிக நீண்ட காலத்திற்கு பயனுடையதாக அமையவில்லை. வீனஸின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாக சிறிது காலத்திற்குள் எலெக்ட்ரானிக் கருவிகள் வெப்பம் அடைகின்றன. எனவே மனிதர்கள் அங்கு வாழ்வதற்கான வாய்ப்புகளே இல்லை என்று நாசா கூறுகிறது.

பல்வேறு நாடுகள் ஆளில்லா  செயற்கைக் கோள்களை இந்த கோளின் மீது ஆராய்ச்சி நடத்த அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஷ்யாவின் வெனேரா முதன்முறையாக அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நீண்ட நாட்கள் ஆராய்ச்சியில் ஈடுபட இயலவில்லை), நாசாவின் மகெல்லன் திட்டம் மூலம் வெள்ளி கிரகத்தை 90-94 காலங்களில் ஆய்வு செய்யப்பட்டது. நாசாவின் அகட்சுகி திட்டம் சுற்றுப் பாதையில் இருந்து வெள்ளிக்கோளை ஆய்வு செய்து வருகிறது.

தற்போதைய நாசாவின் திட்டங்கள் என்ன?

1992ஆம் ஆண்டு துவங்கிய நாசாவின் டிஸ்கவரி திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்விரண்டு திட்டங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வாளர்களுக்கு குறைவான வளங்களைப் பயன்படுத்தும் மற்றும் குறைந்த வளர்ச்சி நேரங்களைக் கொண்ட சில பயணங்களைத் தொடங்க வாய்ப்பு அளிக்கிறது. இரண்டு தேர்வு களும் ஒன்பதாவது கண்டுபிடிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும், அவை 2019 இல் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து செயல்பட உள்ளது.

Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry and Imaging என்பதன் சுருக்கம் தான்DAVINCI+ . 1978ஆம் ஆண்டுக்கு பிறகு வெள்ளிக்கோளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா தலைமையில் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும். இக்கோளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகிய பணிகளை இது மேற்கொள்ளும். . இந்த பணி இக்கோளின் அடர்த்தியான வளிமண்டலத்தை கடந்து, அவதானிப்புகளை மேற்கொண்டு, உன்னத வாயுக்கள் மற்றும் பிற உறுப்புகளின் அளவீடுகளை எடுக்கும் பணியை மேற்கொள்ளும். தனித்துவமான ஒரு புவியியல் அம்சத்தின் முதல் உயர் தெளிவுத் திறன் புகைப்படங்களை அனுப்புவதும் இதன் நோக்கமாகும். இது உலகில் டெக்டோனிக் தகடுகள் இருப்பது போன்று வெள்ளி கிரகத்தில் டிசெரெ என்ற அமைப்பு இருப்பதை ஆய்வு செய்யும்.

‘Venus Emissivity, Radio Science, InSAR, Topo graphy and Spectroscopy’என்பதன் சுருக்கம் தான் VERITAS என்று அழைக்கப்படுகிறது. இது அந்தக்கோளின் பரப்பினை ஆய்வு செய்து வரைபடமாக்கும் மேலும் புவியில் இருந்து அதனை வித்தியாசப்படுத்துவது என்ன என்பதையும் ஆராயும். வெரிட்டாஸ் ரேடருடன் வீனஸ் கோளின் சுற்றுப்பாதையில் ஆய்வு மேற்கொள்ளும். அதன் மூலம் வீனஸின் டோப்போகிராஃபியை முப்பரிணமான கட்டமைப்பு செய்ய வழி

வகுக்கும்.

இதன் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கிருக்கும் டெக்டோனிக் தகடுகள் மற்றும் செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகள் பற்றிய தரவுகளை வழங்கும். இது வீனஸில் இருக்கும் பாறைகளின் வகையை தீர்மானிக்க உதவும். அதே நேரத்தில் எரிமலைகள் வளிமண்டலத்தில் நீராவியை வெளியிடுகின்றனவா என்பதையும் தீர்மானிக்க இது உதவும்.

ஆராய்ச்சிக்கு ஏன் வெள்ளி தேர்வு செய்யப்பட்டது?

சூரிய குடும்பத்தில் எவ்வாறு கோள்கள் உருவானது என்பது தொடர்பான புரிதலை DAVINCI+ நமக்கு ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இரண்டு ஆராய்ச்சி முடிவுகளும் வெள்ளிக்கோ இன் மேக கூட்ட அடர்த்தியை பற்றியும் அங்கிருக்கும் எரிமலைகள் பற்றியும் அறிந்து கொள்ள உதவும். அங்கு உயிர்வாழதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிந்து கொள்ளவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:10 AM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நாசா , வெள்ளி
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )

வளர்ச்சி

வளர்ச்சி
மனிதன்

அறிவியல்

உலகை ஆள்வது அறிவியலே!
Powered By Blogger

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 ( 4 )
    • ▼  ஆகஸ்ட் ( 1 )
      • வயதாவதை தடுத்து நிறுத்த முடியுமா? மருத்துவ உலகில் ...
    • ►  ஜூன் ( 2 )
    • ►  ஜனவரி ( 1 )
  • ►  2025 ( 20 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  நவம்பர் ( 2 )
    • ►  அக்டோபர் ( 7 )
    • ►  செப்டம்பர் ( 2 )
    • ►  ஆகஸ்ட் ( 1 )
    • ►  ஜூலை ( 3 )
    • ►  மே ( 2 )
    • ►  மார்ச் ( 2 )
  • ►  2024 ( 13 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  அக்டோபர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஜூலை ( 1 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  பிப்ரவரி ( 5 )
  • ►  2023 ( 9 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  மே ( 2 )
    • ►  ஏப்ரல் ( 1 )
    • ►  மார்ச் ( 3 )
    • ►  ஜனவரி ( 2 )
  • ►  2022 ( 17 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஜூலை ( 7 )
    • ►  மே ( 4 )
    • ►  பிப்ரவரி ( 3 )
    • ►  ஜனவரி ( 1 )
  • ►  2021 ( 17 )
    • ►  நவம்பர் ( 1 )
    • ►  ஆகஸ்ட் ( 4 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 1 )
    • ►  ஏப்ரல் ( 3 )
    • ►  மார்ச் ( 5 )
    • ►  பிப்ரவரி ( 1 )
  • ►  2020 ( 13 )
    • ►  ஜூலை ( 1 )
    • ►  மே ( 1 )
    • ►  மார்ச் ( 5 )
    • ►  பிப்ரவரி ( 4 )
    • ►  ஜனவரி ( 2 )
  • ►  2019 ( 75 )
    • ►  டிசம்பர் ( 4 )
    • ►  நவம்பர் ( 2 )
    • ►  அக்டோபர் ( 6 )
    • ►  செப்டம்பர் ( 9 )
    • ►  ஆகஸ்ட் ( 18 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 5 )
    • ►  மே ( 8 )
    • ►  ஏப்ரல் ( 5 )
    • ►  மார்ச் ( 6 )
    • ►  பிப்ரவரி ( 5 )
    • ►  ஜனவரி ( 5 )
  • ►  2018 ( 24 )
    • ►  நவம்பர் ( 4 )
    • ►  அக்டோபர் ( 4 )
    • ►  செப்டம்பர் ( 2 )
    • ►  ஜூலை ( 4 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  மார்ச் ( 3 )
    • ►  பிப்ரவரி ( 2 )
    • ►  ஜனவரி ( 1 )
  • ►  2017 ( 56 )
    • ►  டிசம்பர் ( 3 )
    • ►  அக்டோபர் ( 3 )
    • ►  செப்டம்பர் ( 1 )
    • ►  ஆகஸ்ட் ( 6 )
    • ►  ஜூலை ( 2 )
    • ►  ஜூன் ( 2 )
    • ►  மே ( 2 )
    • ►  ஏப்ரல் ( 4 )
    • ►  பிப்ரவரி ( 14 )
    • ►  ஜனவரி ( 19 )
  • ►  2016 ( 49 )
    • ►  டிசம்பர் ( 8 )
    • ►  நவம்பர் ( 5 )
    • ►  அக்டோபர் ( 12 )
    • ►  செப்டம்பர் ( 4 )
    • ►  ஜூன் ( 9 )
    • ►  மே ( 10 )
    • ►  மார்ச் ( 1 )
  • ►  2015 ( 42 )
    • ►  டிசம்பர் ( 12 )
    • ►  நவம்பர் ( 7 )
    • ►  அக்டோபர் ( 1 )
    • ►  செப்டம்பர் ( 6 )
    • ►  ஆகஸ்ட் ( 1 )
    • ►  ஜூலை ( 8 )
    • ►  ஜூன் ( 1 )
    • ►  மே ( 2 )
    • ►  ஜனவரி ( 4 )
  • ►  2014 ( 11 )
    • ►  டிசம்பர் ( 1 )
    • ►  நவம்பர் ( 9 )
    • ►  அக்டோபர் ( 1 )

மொத்தப் பக்கக்காட்சிகள்

Sparkline

பிரபலமான இடுகைகள்

  • கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
    கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன் 1862ஆம் ஆண்டில் ரிச்சர்ட் காட்லிங் என்பவர் மெஷின் கன் எனப்படும் இயந்திரத் துப்பாக...
  • கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
    கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன் சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநா...
  • மனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு
    பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான எதிர்காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளியை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை பற்றி விர...
  • கனியின் நிலையை அளக்கும் கருவி
    March 11, 2021  • Viduthalai கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ள னவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப...
  • பால்வெளி மண்டலம்
    பிரபஞ்ச ரகசியத் தொடரில் அவ்வப்போது பால்வெளி மண்டலம் என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் பால்வெளி மண்டலம் பற்றி தமிழில் அவ்வளவ...
  • 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான ஆதாரங்கள்
    குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டு களுக்கு முன்பு, பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்த தற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் ...
  • ஸ்டெம்செல் மூலம் குழந்தை பிறக்கச் செய்யலாம்!
    இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவ தாகக்  ...
  • 500 ஆண்டாக மெருகு குலையாமல் இருக்கும் பெண் மம்மி
    500 ஆண்டிற்கு முந் தைய பெண் மம்மி அர் ஜென்டினாவின் லூலை லிகோ என்ற எரிமலை பகுதியில் ஒரு குகையில் கண்டுபிடிக்கபட்டு உள் ளது. இந்த் பெண்...
  • அறிவியல் துளிகள்
    இணையத்தில் அடையாளத் திருட்டும், அதன் மூலம் ஏற்படும் இழப்பும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் புதி...
  • பார்வையற்றவர்களுக்கு உதவும் பயோனிக் கண்!
    பார்வை என்பது நம் கண்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் ஓர் அற்புத வரம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்குப் பார்வை முக்கியம். இருட்டில் இருந்த...

லேபிள்கள்

  • "ஒளிரும்" பயிர்கள்
  • 3 பேர் மரபணு
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அட்டை
  • அண்டவியல்
  • அணுக்கள்
  • அய்ன்ஸ்டீன்
  • அழிவு
  • அளவு
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிவியல் நாள்
  • அறுவை சிகிச்சை
  • ஆக்சிஜன்
  • ஆசிரியர்
  • ஆயுட்காலம்
  • ஆராய்ச்சி
  • ஆழம்
  • ஆற்றல்
  • இங்கிலாந்து
  • இதயம்
  • இந்தியா
  • இமயமலை
  • இரட்டை கருப்பை
  • இலை
  • இறங்கியவர்
  • இறந்த கணவர்
  • இறைச்சி
  • இன்னொரு பூமி
  • இனப்பெருக்கம்
  • உணவு
  • உயிர்
  • உயிர் அணு
  • உயிர் தோற்றம்
  • உயிர்கள்
  • உயிர்ப்பிப்பு
  • உயிரினம்
  • உருகாத தங்கம்
  • உருமலர்ச்சி
  • உருவாக்கம்
  • உறுப்பு
  • எகிப்து
  • எறும்பு
  • ஒளி ஆற்றல்
  • ஒளிப்படம்
  • ஒளிப்படவியல்
  • கட்டுரை
  • கடல்
  • கண்
  • கரப்பான் பூச்சி
  • கரிம மூலக்கூறு
  • கரிமம்
  • கரு
  • கரு முட்டை
  • கருந்துளை
  • கருவி
  • கருவிகள்
  • கரோனா
  • கல்லீரல்
  • கனி
  • கனிமம்
  • காது
  • காந்த துருவம்
  • காந்தபுலம்
  • காலக்கணக்கு
  • காற்று
  • கிரகணம்
  • கீரிப்பிள்ளை
  • குகை
  • குகை மனிதன்
  • குழந்தை
  • குளோனிங்
  • கெசு
  • கொசு
  • கொழுப்பு
  • கோழி
  • கோள்
  • கோள்கள்
  • சண்டை
  • சந்திராயன்
  • சமிக்ஞை
  • சயனைடு
  • சனி
  • சனிக்கோள்
  • சாதனை
  • சூப்பர் எர்த்
  • செ.ர.பார்த்தசாரதி
  • செயற்கை
  • செயற்கைக் கருப்பை
  • செயற்கைகோள்
  • செல்
  • செல்பேசி
  • செவ்வாய்
  • செவ்வாய் கிரகம்
  • ஞாயிறு
  • ஞாயிறு மலர்
  • டார்வின்
  • டார்வின் முன்னோடி
  • டாஸ்மேனிய புலி
  • டைட்டன்
  • டைட்டன் நிலா
  • டைனோசர்
  • டைனோசர் காலம்
  • தங்கச் சுரங்கம்
  • தங்கம்
  • தடுப்பூசி
  • தயாரிப்பு
  • தாவரங்கள்
  • தாவரம்
  • திசு
  • திமிங்கலம்
  • திராவிட வீராங்கனை
  • திருநங்கை
  • தீ
  • தீவு
  • தைலசைன்
  • தோலின் செல்
  • தோற்றம்
  • நாசா
  • நாற்றம் உணர் காட்சி
  • நிலவு
  • நிழலில்லா நாள்
  • நிறம்
  • நீர்
  • நீர் மூலக்கூறு
  • நுண்ணுயிர்
  • நெப்டியூன்
  • நெருப்பு
  • நேர்காணல்
  • நோபல்
  • நோபல் பரிசு
  • நோபல
  • படி மலர்ச்சி
  • படிம வளர்ச்சி
  • படிமம்
  • படிமா வளர்ச்சி
  • பரவல்
  • பரிணாம வளர்ச்சி
  • பரிணாமம்
  • பருவநிலை
  • பல்லி
  • பழம்
  • பழம்பொருள்
  • பழைய உயிரினம்
  • பள்ளி
  • பறவை
  • பனிக்கரடி
  • பனியுகம்
  • பாக்டீரியா
  • பாம்பு
  • பார்வை
  • பால்வெளி
  • பாறை
  • பிறப்பு
  • புகைப்படம்
  • புதிய கோள்
  • புதிய மனித இனம்
  • புதிய மூதாதை
  • புதியபடம்
  • புதை படிமம்
  • புரோட்டீன்
  • புவி
  • பூச்சி
  • பூமி
  • பெண்
  • பெரிய
  • பெருவெளி
  • பேச்சாற்றல்
  • பேரடை
  • மகப்பேறு
  • மண்
  • மம்மூத்
  • மயில்
  • மரணமும்
  • மரபணு ஆராய்ச்சி
  • மரபணு மாற்றம்
  • மரம்
  • மருத்துவ கருவி
  • மருத்துவம்
  • மறைவு
  • மனித இனங்கள்
  • மனித இனம்
  • மனித உறுப்புகள்
  • மனித செல்கள்
  • மனிதப் பிரதி
  • மனிதன்
  • மின் அஞ்சல்
  • மின் கடத்தி
  • மீன்
  • முத்து
  • முதல் ஒளி
  • முதல் மனிதர்
  • முதலை
  • முதுமையும்
  • மூளை
  • மூன்றாவது புலம்
  • மோதல்
  • யானை
  • யுரேனஸ்
  • ரோபோ
  • லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ்
  • வயதாவது தடுப்பு
  • வயிறு
  • வளி மண்டலம்
  • விண்கல்
  • விண்கலம்
  • விண்மீன்
  • விண்மீன் கூட்டம்
  • விண்வெளி
  • வினோத உயிரினம்
  • வீட்டு திரைப்படம்
  • வெப்பம்
  • வெள்ளி
  • வெள்ளை காண்டாமிருகம்
  • வெளி
  • வெற்றிடம்
  • வேற்றுகிரகம்
  • வைரசு
  • ஜெயலெட்சுமி
  • ஸ்பேஸ்
  • ஸாம்பி புழு
  • ஹோமோ சேபிப்பியன்ஸ்
  • ஹோமோ நலேடி
  • Thylacine
Blogger இயக்குவது.