வெள்ளி, 20 மே, 2022

நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!

         • Viduthalai


நாம் இருக்கும் இந்த புவியில் உயிரினங்களும், தாவர இனங்களும் செழித்து பெருகி இருக்க இயற்கை சூழ்நிலையே காரணமாகும். 

இதில் முதன்மையாக தாவர இனங்கள் வளர்வதற்கு அடிப்படையாக மண் தேவைப்படுகிறது.

புவியில் 118 வகையான தனிமங்களும் மற்றும் அதனால் உண்டான கலவைகளும், சேர்மங்களும் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் உயிரினங்களா லும், தாவரங்களாலும் உண்டான கரிம சேர்மங்களும் (அமினோ அமிலங்கள்) உள்ளன. இவற்றிற்கு பொது வான அறிவியல் பெயரும் இடப்பட்டுள்ளன.

இவற்றில் நம் புவியில் உள்ள மண்ணும் ஒரு தனிமம் தான். 

தாவரங்கள் வளர்வதற்கு மண் ஏதுவாக  இருக்கிறது. 

நிலவின் மண்ணை எடுத்து அதில் தாவரங்களை 'நாசா' அறிவியலாளர்கள் வளர்த்து உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

உண்மையில் தாவரங்கள் வளர மண் தேவையா?

தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மையாகும்.

தாவரங்கள் வளர ஊட்டச்சத்தும் நீரும், காற்றும் சூரிய ஒளியும் மட்டுமே இருந்தாலே போதும். மண் தேவையில்லை.

புவி மண்ணில் மேற்கண்ட அனைத்தும் கிடைப்பதால் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.

மண்ணில்லா வேளாண்மை (ஹைட்ரோபோனிக்) முறை என்றே ஒரு வேளாண்மை முறை உள்ளது. 

இதில் மண்ணை பயன்படுத்துவதில்லை, பெரும் பான்மையாக நீர் தான் பயன்படுகிறது.

அப்படி இருக்கும்போது நிலவில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த 'ரெகோலித்' என்ற ஊட்டச் சத்து இல்லாததாக சொல்லக்கூடும் மண்ணில், தாவரத்தை வளர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.

நிலவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த மண்ணில் ஊட்டச்சத்தும் நீரும் விட்டுதான் நாசா அறிவியலாளர்கள்  'அரபிடோப்சிஸ் தலியானா' என்ற கடுகு வகை செடியை வளர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த வகையான வியப்புக் குரிய செய்தியும் இருப்பதாக தெரியவில்லை! மண் ஒரு பிடிமானப் பொருள் அவ்வளவுதான்! தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மை!

-செ.ர.பார்த்தசாரதி, சென்னை

கொசுக்களுக்கு நிறம் பிரிக்கத் தெரியுமா?


மனித வாடையை முகர்ந்துவிட்டால்கொசுக்கள் அருகே வந்து கடிக்கத் தோதான இடம் பார்க்கும்இது அறிவியல்பூர்வமான உண்மைமனித மூச்சில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு வாடைதான் கொசுக்களுக்கு அழைப்பிதழ்ஆனால்தற்போது வாசிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூடுதல் தகவலையும் கண்டறிந்துள்ளனர்.

அதாவதுமனித மூச்சிலுள்ள கார்பன் - டை - ஆக்சைடின் வாடையை கண்டுகொண்ட பிறகுஅவை சுற்றிலும் நோட்டம் பார்க்கின்றனஅப்போது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்பதை தேடுகின்றனஅப்படி தட்டுப்பட்டதும்அதை நெருங்கி தங்கள் ரத்தப் பசியை தீர்க்க முயல்கின்றன.ஆய்வகங்களில் பல நிறங்களில் பொருட்களை வைத்தபோதும்கொசுக்கள் இந்த இரு நிறமுள்ள பொருட்களையே நாடுவதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.

இது ஏன் என்று ஆராய்ந்தபோதுமனிதர்கள் எந்த நிறத் தோலை உடையவர்களாக இருந்தாலும்அவர்களது தோலிலிருந்து சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஒளி அலைகள் பிரதிபலிக்கின்றனமுதலில் கார்பன் - டை - ஆக்சைடு வாடை அந்த இடத்திலிருந்து வரவேண்டும்.

அடுத்து அந்த இடம் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருக்க வேண்டும்அப்படி இருந்தால்கொசுக்களுக்கு சாப்பாட்டு மணி அடிக்கப்படுவதாகவே பொருள்.

மற்ற பூச்சிகளுக்கு இதேபோல நிறப் பாகுபாடு பற்றிய அறிவு உண்டா எனவிஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

வியாழன், 19 மே, 2022

உயிரை எடுக்கக் கூடிய சயனைடே பூமியில் உயிர்கள் உருவாக உதவியது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 

லண்டன்பிப். 17- புதிய ஆராய்ச்சி யில் ,  கொடிய சயனைடு  கலவைஉண்மையில்பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது.

விஞ்ஞானிகள் சயனை டைப் பயன்படுத்தி ஓர் இரசா யன எதிர்வினையை உருவாக்கி யுள்ளனர்,சயனைடு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்க உதவியது என கண்டறிந்து உள்ளனர்.

சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரஜன் அணுக் களால் உருவானதுஇதன் அறிவியல் பெயர் சிஎச் (சிபிஇதனை உட்கொள்ளும் நபர் முதலில் தலைவலிஎரிச்சல்இதய துடிப்பின் வேகம் அதி கரிப்புவாந்தி முதலியவற்றை சந்திக்கநேரிடும்பின்னர் குறைந்த இரத்த அழுத்தம்மெதுவான இதய துடிப்புமாரடைப்பு  ஏற்பட்டு உயிரி ழக்க நேரிடும்.

இதனை உட்கொண்ட நபரை காப்பற்ற இயலாதுஒரு வேளை காப்பாற்றினாலும் வாழ்நாள் முழுவதும் நரம்பு சம்பந்தபட்ட நோய்களால் அவதிப் பட நேரிடும்.

இதற்கு காரணம் அதில் கலந் துள்ள ஹைட்ரஜன் சயனைடு வாயு மற்றும் ஹைட்ரஜன் உப்புகள்.

இந்த ஆபத்தான வாயுக்கள் சயனைடு குப்பியில் மட்டுமில் லால் எரிகின்ற வீடுமெட்டல் புகைகளில் இருந்தும் வருகின் றது

சயனைடு எனபது பல வடிவங்களில் இருக்கக்கூடிய ஒரு கொடிய இரசாயனம்இர சாயனம் உயிரை போக்கக் கூடி யதாக இருந்தாலும் சயனைடு  உயிருக்கு  தேவையான மூலக் கூறுகளை உருவாக்குவதற்கு ஓர் அத்தியாவசிய கலவை  என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

மேலும்வேற்றுக் கோள் களில் அதற்கான அறிகுறிக ளைத் தேடுவதுபிரபஞ்சத்தில் வேறு இடங்களில் உள்ள உயிர் களைக் கண்டறியவும் உதவும் என்று ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியலாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

நைட்ரஜன் அணுவுடன் பிணைக்கப்பட்ட கார்பன் அணுவைக் கொண்ட கலவைகார்பன் டை ஆக்சைடில் இருந்து கார்பன் அடிப்படையிலான சேர்மங்களை உரு வாக்கும் பூமியில் சில முதல் வளர்சிதை மாற்ற எதிர்வினை களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று குழு கண்டுபிடித்தது.

வளர்சிதை மாற்ற எதிர் வினைகள் என்பன உணவில் இருந்து ஆற்றலை உருவாக்கும் எதிர்வினைகள் மட்டுமின்றி உயிரைத் தக்கவைக்கவும் அவ சியமானதாகும்.

இதுகுறித்து கூறிய ஆராய்ச் சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்மேலும் வேற்றுக் கோள் வாசி களை கண்டறிய நமக்கு  உதவ லாம்என்று கூறி உள்ளனர்.

ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரி யரும்ஆய்வின் முதன்மை ஆசி ரியருமான டாக்டர் ராமநாரா யணன் கிருஷ்ணமூர்த்தி கூறிய தாவது:-

பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கோள்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறி களைத் தேடும்போது - நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம்.

இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாச மாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

உயிர்கள் வாழத் தகுதியான கோள் கண்டுபிடிப்பு


லண்டன், பிப். 14-- உயிர்கள் வாழக் கூடிய வேறு, கோள்கள் இருக் கின்றனவா என்று விஞ்ஞானி கள் தொடர்ந்து ஆராய்ச்சி களை மேற்கொண்டு வருகின்ற னர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தாக விஞ்ஞானிகள் தெரிவித் தனர்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் வெளியிட் டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

“ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத் திரத்தை உயிர்கள் வாழும் சூழ் நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப் படுவது இதுவே முதல் முறை யாகும்.

இந்தக் கோள் நட்சத்திரத் தில் உயிர்கள் வாழக் கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு மிகவும் குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக் காது.

பூமியில் இருந்து 117 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 60 மடங்கு குறைவாகும்.

உயிர்கள் வாழக்கூடிய மண் டலம் என்பது ஒரு நட்சத் திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழ் நிலையை கொண்டிருக்கும். எனவே உயிர்கள் வாழ இது உதவும்.

நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள கோள் இருக்கும் மண்ட லம் உயிர்கள் வாழ மிக சரியாக இருக்கும் பகுதியில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் ஜேபரிகி கூறும்போது, “இந்த கணிப்பு வானியலாளர்களுக்கு முற்றிலும் புதியது” என்றார் பேராசிரியர் ஜேபரிகி.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நான்கு கால்கள் கொண்ட திமிங்கிலம்


 இன்றைய வட ஆப்பிரிக்கப் பகுதி முன்பு அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கி இருந்தது, காலப்போக்கில் நிலத்தட்டுக்களின் நகர்வால் இன்று ஆப்பிரிக்க கண்டம் உருவாகியுள்ளது, அப்படி நகர்வதற்கு முன்பு கடலுக்குள் வட ஆப்பிரிக்க பகுதி இருந்த போது கால்களைக் கொண்ட திமிங்கிலம் போன்ற பல உயிரினங்கள் வாழ்ந்திருந்தது.

அதில் ஒன்றின் புதைபடிமம் எகிப்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   சுமார் 600 கிலோகிராம் எடைகொண்ட அந்தத் திமிங்கிலம், 3 மீட்டர் நீளம் கொண்ட உயிரினமாக இருந்திருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்தத் திமிங்கிலத்தால் நிலத்தில் முதலைகள் போல் நடக்கவும் முடியும், நீரில் நீந்தவும் முடியும்.  இதற்கு முன், 2011ஆம் ஆண்டில் பெருவில் (peru) 43 மில்லியன் ஆண்டு பழைமைவாய்ந்த, 4 கால்கள் கொண்ட திமிங்கிலத்தின் புதைபொருள் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த திமிங்கிலங்களின் காலம் - பூக்கும் தாவரங்களும், குட்டை செடிகளும் இல்லாத காலகட்டம். மேலும் தற்போது உள்ள மிகச்சிறிய பூச்சியினங்கள் இக்காலகட்டத்தில் பல மீட்டர் உயரமாகவும் நீளமாகவும் வாழ்ந்தது வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

பருவநிலை மாற்றம் காரணமாக 3 கோடி ஆண்டுக்கு முன்னரே 65 விழுக்காடு உயிரின‌ங்கள் அழிவு: புதிய ஆய்வில் தகவல்

திங்கள், 24 ஜனவரி, 2022

ரோபோக்கள் இனிமேல் குழந்தைகளை பெற்றெடுக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை