செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

நகர்ந்து வரும் வடதுருவ காந்தப்புலம்



பூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்ட, 1881லிருந்தே, அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, வட காந்தப் புலம்  இடம் பெயர ஆரம்பித்திருக்கிறது.

இன்று, திறன் பேசிகளிலில் இருக்கும், ஜி.பி.எஸ்., வசதி முதல், கப்பல்கள், விமானங்களில் இருக்கும் திசைகாட்டிகள் வரை இதனால் பாதிக்கப்படுமே? ஆனால், ‘உலக காந்த மாதிரி’ உருவாக்கும் அமெரிக்காவின், என்.ஓ.ஏ.ஏ., எனப்படும், ‘தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம்‘ வட புல நகர்வை தொடர்ந்து, காந்த மாதிரியை புதுப்பித்து வருகிறது.

இந்த புதிய மாதிரிகளைத் தான், ஜி.பி.எஸ்., சேவைகள் வாங்கி பயன்படுத்துகின்றன. அண் மையில் அதிபர் டிரம்பின் அரசு, முடக்க தீர்மானித் திருக்கும் பல அரசு துறைகளில், என்.ஓ.ஏ.ஏ.,வும் வருவதால், உலக காந்த மாதிரியை புதுப்பிப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த புல நகர்வு, வட துருவத்திற்கு அருகே இருப்பவர்களுக்கே லேசான பாதிப்பு. தள்ளி இருப்பவர்கள், வழக்கம்போல வட புலம் நகர்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

இன்னொரு விஷயம், பூமியின் இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலை கீழாக மாறியதாகவும், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்து வருவது என்றும், விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 31.1.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக